search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்றிய குழு கூட்டம்"

    • அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர்

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உரிமைத் தொகை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    • நெடுஞ்சாலை துறையினால் 10 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார்.துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள்,மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ள மனோகரனுக்கு ஒன்றியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- ஈஸ்வரி ( 2 வது வார்டு ): பல்லடம் முதல் பூமலூர் வரை செல்லும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கிடாத்துறை பகுதியில் சாலையின் வழியே செல்லும் பிஏபி வாய்க்கால் மீது பாலம் அமைக்க உள்ளனர். பாலம் 26 மீட்டர் நீளத்திற்கு உள்ளது. ஆனால் நெடுஞ்சாலை துறையினால் 10 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கின்றனர். அப்படி அமைத்தால் வாய்க்கால்களில் வரும் குப்பைகள் சேர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே அந்த இடத்தில் 26 மீட்டர் முழுமையான அளவுக்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி : இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

    துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் : ஊராட்சி ஒன்றியத்தில் வீட்டு மனை வரன்முறை படுத்த விண்ணப்பங்கள் அளித்தால் மிகவும் காலதாமதமாக வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அந்த விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவாக வழங்க வேண்டும்.வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன்:விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மங்கையர்க்கரசி கனகராஜ் ( 10 வது வார்டு ):-

    கோடங்கி பாளையம் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு கேட் வால் ரோட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ளதால், அதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுகின்றன.வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் : குடிநீர் இணைப்பு கேட் வால் சிலாப் வைத்து மூட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது. பின்னர் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • உணவு சத்துணவு பணியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்.
    • கவுன்சிலர்கள், சகாதேவன், வெற்றி, ரமேஷ், தமின்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மீஞ்சூரில் ஒன்றியகுழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில்நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சுமித்ரா குமார் பேசும்போது, காலை உணவு சத்துணவு பணியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். இதில் கவுன்சிலர்கள், சகாதேவன், வெற்றி, ரமேஷ், தமின்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமை நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் வீரா(எ) புருஷோத்தமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுரேஷ் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 15 -ந் தேதி முதல் முன்னாள் முதல் -அமைச்சர் அண்ணா பிறந்தநாளில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கவும் நூறு நாள் வேலை திட்டத்தில் கூலி ரூ.294 ஆக உயர்த்திய முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்த தீர்மானம்
    • கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாதாரன கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன் வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை கழிவுநீர் கால்வாய் சிறு கல்வெட்டு குடிநீர் பைப் லைன் விரிவாக்க பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும், கால்வாய் களை தூர்வார வேண்டும், ஊராட்சிகள் தோறும் கொசு மருந்து தெளிக்க வேண்டும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நல அலுவலர் அன்பரசி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் கட்ட கோரிக்கை வைத்தனர்.

    இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், செங்கல்நத்தம் பிச்சாண்டி தலங்கை மாரிமுத்து மாரிமுத்து கொடைக்கல் கார்த்திக் வேங்கப்பட்டு ராமன்பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில். ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன், தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், இந்திராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் அலுவலக மேலாளர் மூர்த்தி, வரவேற்றார். கூட்டத்தில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊத்தூர், கிராமத்திற்கு ஆரணியில், இருந்து தேவிகாபுரம், செல்லும் தடம் எண் 8ஏ, 8பி, ஆகிய அரசு பஸ் உள்ளே வந்து சென்று வந்தது.

    இப்போது சிறிது காலமாக சரிவர பஸ் வந்து செல்லவில்லை, இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

    ஆகவே அரசு பஸ் உள்ளே சென்று வர வேண்டும், இதேபோல் சென்னையில் இருந்து போளூர் செல்லும் தடம் எண் 148, பஸ் சேத்துப்பட்டு அடுத்த செவரைப் பூண்டி கூட்ரோட்டில் ஒரு சில பஸ்கள் நிற்காமல் செல்கிறது, எனவே அனைத்து பஸ்களும்நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மேலும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய உறுப்பினர்கள், பிற துறை அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
    • வெங்கல் பஜார் தெருவில் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருட்களை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சுபதாஸ் வாசித்தார்.

    கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோடுவெளிகுழந்தைவேலு, திருக்கண்டலம் ரவி, திருமலை சிவசங்கர், சிவாஜி உள்ளிட்டோர் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒன்றிய குழு கூட்டத்திற்கு வருவதில்லை. இதனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற செயலாக இக்கூட்டத்தில் நாங்கள் கூறும் குறைகள் நிவர்த்தி ஆகாமல் உள்ளது. என்று கூறினர். இதனால் கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. மேலும், கோடுவெளி ஊராட்சியில் ஒன்றரை ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்பொழுது திறப்பார்கள். அலமாதி மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மாநகரப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பஸ் நிறுத்தத்தில் இருந்து தள்ளி நிறுத்தியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி பஸ்ஸில் ஏற புத்தகப் பையுடன் ஓடியதால் கீழே விழுந்து இரண்டு பற்கள் உடைந்தது அதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாகரல் ஊராட்சியில் உள்ள சுய உதவி குழு கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. அதனை அகற்ற வேண்டும். ராமாபுரம் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை அகற்ற வேண்டும். திருக்கண்டலம் முதல் பூச்சி அத்திப்பேடு வரையில் உள்ள ஒன்றியச் சாலையை மேம்படுத்த நெடுஞ்சாலை துறைக்கு இந்த சாலையை ஒப்படைக்க வேண்டும்.

    வெங்கல் பஜார் தெருவில் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒதுக்குப்புறமாக குப்பைத் தொட்டியை அமைக்க வேண்டும். செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காரணிபாட்டை, லட்சுமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடையை அகற்ற வேண்டும். அல்லது ரிப்லேக்ட்டர்கள் அமைக்க வேண்டும். பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தீர்க்க வேண்டும், மேட்டுப்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தோராய பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனை நிரந்தர பட்டாவாக மாற்றி தந்தால் தான் அரசு திட்டங்கள் பெற அவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், கூட்ட அரங்கத்தில் தேசிய தலைவர்களின் படம் இல்லை. எனவே உடனடியாக தேசத் தலைவர்களின் படங்களை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் ரூ.ஒரு கோடியே 14 லட்சம் செலவில் 26 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஆலோசனை
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, செஞ்சி, சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், இந்திராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அலுவலக மேலாளர் மூர்த்தி, வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற உள்ள திட்ட பணிகள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடம் கோவில்கள் ஆகிய இடங்களை தூய்மையாக வைப்பது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மன்ற கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்தரகுமாரி, ஒன்றிய பொறியாளர் புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அலுவலக மேலாளர் அசோக் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பா ளராக வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் இமகிரிபாபு, குட்டிவெங்கடேசன், சுரேஷ்குமார், மனோகரன், சரவணன் ரஞ்சித்குமார், தீபிகாபரத் சூரியகலா, இந்திராகாந்தி, கவுரப்பன் உள்ளிட்ட உறுப்பி னர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சி னை கள் குறித்து பேசினார்கள்.

    உறுப்பி னர்களின் கோரிக்கை களுக்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ராமாலை கிராமத்தில் பட்டா ரத்து செய்த பிரச்சினை குறித்து உடனடியாக உயரதிகா ரிகளுக்கு கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பஸ்கள் இயங்கவும், ஏரிக்கரையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், பழுதடைந்த பள்ளிகள் குறித்து கணக்கெ டுத்து கலெக்டருக்கு அனுப்பி உள்ளோம்.

    விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் வரும் கூட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்படும் என்றார்.

    மேலும் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வெளியே பல்வேறு அரசியல் கட்சி களின் கொடிக்கம்பங்கள் உள்ளன.

    மேலும் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படு வதால் நெடுஞ்சா லைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் அனைத்து கட்சியின் கொடிக்கம்பங்க ளை அகற்ற நெடுஞ்சாலை துறையையும் நகராட்சி யையும் கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி மன்ற அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி(திமுக) தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பூபாலன் ஆகியார் முன்னிலை வகித்தனர். மேலாளர் சாந்தசீலன் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் 11-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் சதாசிவம் பேசுகையில் நிர்வாகத்தில் ஒன்றிய குழு தலைவரின் கணவர் மற்றும் துணைத் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும்,

    இதனால் ஒன்றிய குழு உறுப்பினர்களின் உரிமைகள் பரிக்கப்பட்டுகிறது என்று கூறிவிட்டு திமுகவை சேர்ந்த 6 ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொடர்ந்து பேசிய உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கூட்டம் முடிந்த பின்னர் வெளிநடப்பு செய்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் சதாசிவம், சிகாமணி, காயத்ரி பிரபாகரன், பிரீதா, லட்சுமி, முருகன் ஆகிய 6 பேர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகள் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி மன்ற அரங்கிற்கு வந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலின் பேரில் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் பழனி, ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

    திமுக ஒன்றிய குழு தலைவருக்கு எதிராகவே, திமுக வினரே வெளிநடப்பு, தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி கூறுகையில்:-

    ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் அனைத்து திட்டப் பணிகளை அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு பிரித்து தருவதாகவும், தன்னுடைய கணவர் எந்த திட்டப் பணிகளிலும் தலையிடுவதில்லை என்று கூறினார்.

    • நிதி கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டது
    • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதம்

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

    ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தலைமை வாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம், ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா, பெரணமல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயண மூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் அலுவலக மேலாளர் பாஸ்கர் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய பொது நிதி கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டது.

    மேலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அனைத்து கிரா மங்களிலும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் உள்பட கலந்து கொண்டனர்.

    • 38 ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்பு
    • அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் வரவேற்றார். மேலும் இந்த ஒன்றி குழு கூட்டத்தில் 38 ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    இதில் அந்தந்த ஊராட்சிக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் குறித்து ஒன்றிய குழு தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யவும், மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து சுழற்சி முறையில் நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் இந்த ஒன்றிய குழு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×