புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம்

அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர்
புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம்
Published on

புதுப்பாளையம்:

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

உரிமைத் தொகை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com