பொதுமக்கள் கூடும் இடங்களை தூய்மையாக வைக்கவேண்டும்

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஆலோசனை கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பொதுமக்கள் கூடும் இடங்களை தூய்மையாக வைக்கவேண்டும்
Published on

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, செஞ்சி, சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், இந்திராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அலுவலக மேலாளர் மூர்த்தி, வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற உள்ள திட்ட பணிகள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடம் கோவில்கள் ஆகிய இடங்களை தூய்மையாக வைப்பது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com