சோளிங்கர் ஒன்றிய குழு கூட்டம்

ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்த தீர்மானம் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
சோளிங்கர் ஒன்றிய குழு கூட்டம்
Published on

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாதாரன கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன் வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை கழிவுநீர் கால்வாய் சிறு கல்வெட்டு குடிநீர் பைப் லைன் விரிவாக்க பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும், கால்வாய் களை தூர்வார வேண்டும், ஊராட்சிகள் தோறும் கொசு மருந்து தெளிக்க வேண்டும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நல அலுவலர் அன்பரசி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் கட்ட கோரிக்கை வைத்தனர்.

இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், செங்கல்நத்தம் பிச்சாண்டி தலங்கை மாரிமுத்து மாரிமுத்து கொடைக்கல் கார்த்திக் வேங்கப்பட்டு ராமன்பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com