search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை ஒன்றிய குழு கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    X

    திருவண்ணாமலை ஒன்றிய குழு கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    • வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரமணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் அமிர்தராஜ் வரவேற்றார்.

    ஒன்றியக் குழு கூட்டம்

    கூட்டத்தில் கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அரசு சார்பில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்வது.

    38 தீர்மானங்கள்

    காடகமான் ஊராட்சியில் ஆதிச்சநல்லூரி செல்லும் சாலையில் தார் சாலை அமைப்பது, ஏந்தல் ஊராட்சியில் சிறுபாலம் கட்டுவது, அய்யம்பாளையம் ஊராட்சி பிள்ளையார் கோவில் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பது, அடிஅண்ணாமலை ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் சிறுபாலம் மற்றும் பக்க கால்வாய் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மன்ற அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட 38 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், சாந்தி விஜயன், சுபாசெல்வமணி, தினகரன், முருகன், யுவராஜா உள்பட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் (நிர்வாகம்) கோபி நன்றி கூறினார்.

    Next Story
    ×