search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.ஐ."

    சங்கரன்கோவிலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐயுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் டவுண் காவல்நிலையத்தில் எ.ஐ.யாக பணியாற்றி வருபவர் சக்திநடராஜன். இவர் நேற்று பஸ்நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அங்குள்ள பாலத்தின் அருகில் செல்லும் போது எதிரே ஒரு வாலிபர் நிலைதடுமாறிய நிலையில் வந்துள்ளார். எஸ்.ஐ. அந்த வாலிபரை நிறுத்தி பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் பகுதி என்பதால் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

    இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் எஸ்.ஐ.யுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே எஸ்.ஐ.யை அசிங்கமாக பேசிய வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

    சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் விசாரணை நடத்தி பைக்கை ஓட்டி வந்த வீராணத்தை சேர்ந்த முருகராஜ் மகன் ராஜ்குமார் (25) என்பவரை கைது செய்தனர். பொதுமக்கள் முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    தியேட்டரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபரை முறையாக விசாரிக்காததால் எஸ்.ஐ. மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள திருத்தாலா பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மைதீன்(வயது60).

    இவர் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் வைத்து 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த காட்சி அந்த தியேட்டரில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவானதை தொடர்ந்து அது பற்றி சங்கரன்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    ஆனால் போலீசார் இந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சிறுமிக்கு தொழில் அதிபர் பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சி அங்குள்ள டி.வி.சானல்களில் ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டுச் செல்லப்பட்டது. கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா இந்த சம்பவம் தொடர்பாக நேரடி விசாரணை நடத்தினார்.

    அதைத் தொடர்ந்து சங்கரன் குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும் தொழில் அதிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது அதை தடுக்காமல் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அந்த சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை முறையாக விசாரிக்காததால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.#tamilnews
    ×