search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SI"

    • காவல் துறையினர் ரசிகர்கள் கையில் இருந்த இந்திய தேசிய கொடிகளை பறிமுதல் செய்தனர்.
    • இந்திய தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயன்றார்.

    உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை கண்டுகளிக்க ரசிகர்கள் அதிகளவில் மைதானத்திற்கு வந்தனர்.

    அவ்வாறு மைதானத்திற்கு வந்த ரசிகர்களில் பலர் இந்திய தேசிய கொடியுடன் மைதானத்திற்குள் செல்ல முயற்சித்தனர். அப்போது மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் ரசிகர்கள் கையில் இருந்த இந்திய தேசிய கொடிகளை பறிமுதல் செய்தனர்.

    அந்த வகையில், காவல் துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் ரசிகர் ஒருவரிடம் இருந்து வாங்கிய இந்திய தேசிய கொடியை அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட முயன்றார். இந்த சம்பம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை விளக்கம் அளித்து இருந்தது.

    அதன்படி இந்திய தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற காவல் துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் துறை ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.

    • காவலர் செந்தில் குமார் சேர்ந்து பாஸ்கரை சரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.
    • சம்பந்தப்பட்டபோலீசார் மீது உயர் அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த முகவனூர் அருகே உள்ள பாம்பாட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவரின் தாத்தா மருதை என்பவர் அவரின் சகோதரியான பெரியக்காள் (85) என்பவரை பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.

    இதனால் ஆத்திரமடைந்த பேரன் பாஸ்கர் பாட்டியை எப்படி முதியோர் இல்லத்தில் சேர்த்தீர்கள் என கேட்டு மருதையிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மருதை வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்தார். அதன்படி வையம்பட்டி போலீசார் பாஸ்கரிடம் விசாரித்து உள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில் குமார் சேர்ந்து பாஸ்கரை சரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.

    பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். மறு நாள் பாஸ்கர் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் சம்பவம் பற்றி கூறி உள்ளார். பாஸ்கரின் தொடை பகுதியில் போலீசார் தாக்கியதில் ரத்த உறைந்து காப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மண ப்பாறை அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    தாத்தா பேரன் தகராறில் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வாலிபரின் காலில் ரத்தம் உறைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டபோலீசார் மீது உயர் அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில் குமார் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    தியேட்டரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபரை முறையாக விசாரிக்காததால் எஸ்.ஐ. மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள திருத்தாலா பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மைதீன்(வயது60).

    இவர் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் வைத்து 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த காட்சி அந்த தியேட்டரில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவானதை தொடர்ந்து அது பற்றி சங்கரன்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    ஆனால் போலீசார் இந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சிறுமிக்கு தொழில் அதிபர் பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சி அங்குள்ள டி.வி.சானல்களில் ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டுச் செல்லப்பட்டது. கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா இந்த சம்பவம் தொடர்பாக நேரடி விசாரணை நடத்தினார்.

    அதைத் தொடர்ந்து சங்கரன் குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும் தொழில் அதிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது அதை தடுக்காமல் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அந்த சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை முறையாக விசாரிக்காததால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.#tamilnews
    ×