search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் வாகனம்"

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
    • புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் ஹீரோ கூட்டணி அமைக்கிறது.

    இந்திய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் ஜீரோ நிறுவனம் பவர்டிரெயின்களை உருவாக்குகிறது. உற்பத்தி, உதிரிபாகங்கள் மற்றும் விளம்பர பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் மேற்கொள்ள இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக குழு ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் 60 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 491 கோடியை முதலீடு செய்ய அனுமதி அளித்தது.

     

    எனினும், இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் வாகனங்கள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சர்வதேச வலைத்தளத்தில் ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு மாடல்களை பட்டியலிட்டுள்ளது. இவற்றில் ரோட்ஸ்டர், ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் அட்வென்ச்சர் பிரிவு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இடம்பெற்றுள்ளன.

    இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வினியோகம் செய்யும் பணிகளை துவங்கிவிட்டது. இதுதவிர பொது சார்ஜிங் உள்கட்டமைப்புகளையும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. முதற்கட்டமாக இந்நிறுவனத்தின் சார்ஜிங் சேவைகள் பெங்களூரு, டெல்லி மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் செயல்படுகிறது.

    தற்போது பெங்களூரு, டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிட்டத்தட்ட 300 சார்ஜிங் பாயிண்ட்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டு இருக்கிறது. 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உள்ளது.
    • டாடா நெக்சான் EV சீரிஸ் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய விற்பனையில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் டியாகோ EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இருக்கும் டாடா மோட்டார்ஸ், தனது வாகன உற்பத்தியை இருமடங்கு அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் 50 ஆயிரம் யூனிட்களை கடக்க இருக்கிறது.

    அந்த வகையில், அடுத்த சில மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபரத்தின் மூலம் பில்லியன் டாலர் வருவாய் எட்டி விடும். நெக்சான் மற்றும் டிகோர் EV மாடல்களின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆண்டிற்கு 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனிட்கள் வரை எட்டியிருக்கிறது. தற்போது 2024 நிதியாண்டு வாக்கில் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த 12-இல் இருந்து 18 மாதங்களுக்குள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவகதாக தகவல் வெளியாகி உள்ளது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையை சீராக வைத்திருக்கும் பட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் கோடிகளை வருவாயாக ஈட்ட முடியும்.

    இது மூன்று ஆண்டுகளுக்கு முன் கார் வியாபாரத்தில் இருந்து கிடைத்த வருவாய்க்கு இணையானது ஆகும். டியாகோ EV மாடலின் விலை அறிவிக்கப்பட்ட பத்தே நாட்களில், இந்த காரை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர். இதுதவிர 50 ஆயிரம் பேர் டியாகோ EV மீது விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 23 சதவீதம் பேர் முதல் முறை கார் வாங்குவோர் ஆவர்.

    • மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
    • சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக பிரிட்டன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது.

    இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா தனது பொலிரோ பிக்கப் டிரக்-இன் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

    டீசர் வீடியோவின் படி எலெக்ட்ரிக் பொலிரோ பிக்கப் டிரக் முழுக்க லைட்டிங் செய்யப்பட்டு சில பாகங்கள் மட்டும் காட்சியளிக்கிறது. இதன் டிசைன் அம்சங்கள் நீல நிற லைட்டிங் கொண்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் பொலிரோ போன்றே இருக்கிறது. இதில் சதுரங்க வடிவம் கொண்ட ஹெட்லைட் வழங்கப்படுகிறது.


    மேலும் இந்த வாகனத்தில் பழைய மஹிந்திரா லோகோ இடம்பெற்று இருக்கிறது. புது எலெக்ட்ரிக் பொலிரோ மாடல் பிக்கப் வாகனங்களின் எதிர்காலம் என டீசரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புது பொலிரோ பிக்கப் எலெக்ட்ரிக் மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

    தற்போது மஹிந்திரா நிறுவனம் ஐந்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயணிகள் வாகன பிரிவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது எலெக்ட்ரிக் வாகனங்கள் EV கோ நிறுவனத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயணிகள் வாகனம் மட்டுமின்றி பிக்கப் டிரக் மற்றும் வர்த்தக வாகனங்களையும் எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கும் பணிகளை மஹிந்திரா துவங்கி விட்டது. அந்த வரிசையில், பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக், வர்த்தக பிரிவில் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும்.

    • இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தான் பிரபல அம்பாசடர் மாடல்களை விற்பனை செய்து வந்தது.
    • இந்த நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருக்கிறது.

    இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்த அம்பாசடர் மாடல்களை விற்பனை செய்து வந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு புது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துவங்கும் போது இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 400 ஊழியர்களை பணி அமர்த்த முடிவு செய்து உள்ளது. தற்போது இரு நிறுவனங்கள் இணைந்து நிதி சார்ந்த திட்டமிடல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவு பெற இரண்டு மாதங்கள் ஆகும்.


    இதைத் தொடர்ந்து இரண்டு நிறுவனங்களும் இணைந்து முதலீட்டை ஈர்ப்பது, புது நிறுவனத்தை துவங்குவது என பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள இருக்கிறது. இது சார்ந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வாக்கில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிகரமாக கூட்டணி அமைத்த பின் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள மேலும் இரண்டு காலாண்டுகளே தேவைப்படும்.

    அந்த வகையில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் ஐரோப்பிய நிறுவன கூட்டணியில் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அடுத்த நிதியாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

    • இந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்குகிறது.
    • புதிய ஹெச்.எம். காண்டெசா எலெக்ட்ரிக் வெளியீடு பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் பணிகளில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது. முன்னதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும், அம்பாசடார் மாடல் புது மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    அந்த வரிசையில், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் காண்டெசா பிராண்டிற்கான் காப்புரிமை கோரி விண்ணப்பித்து உள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் காண்டெசா பிராண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1980-க்களில் இந்திய சந்தையில் அதிக பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக காண்டெசா விளங்கியது குறிப்பிடத்தக்கது.


    அதன்படி காண்டெசா பிராண்டை தூசி தட்டி இம்முறை எலெக்ட்ரிக் வடிவில் காண்டெசா கார் அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஹெச்.எம். காண்டெசா முற்றிலும் புது பவர்டிரெயின் மற்றும் சேசிஸ் கொண்டிருக்கும். இதன் பாடி மற்றும் இண்டீரியர்களும் புதிய தோற்றம் பெற்று இருக்கும் என தெரிகிறது.

    புதிய கார் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் என இருவித வேரியண்ட்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காண்டெசா மாடலின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன், இன்றைய பாதுகாப்பு வழிமுறைகளுக்கு பொருந்தும் வகையிலான டிசைன் கொண்டிருக்கும். மொத்தத்தில் ஹெச்.எம். காண்டெசா ரெட்ரோ-மாடன் ஸ்டைல் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய அம்பாசடர் மாடலை தொடர்ந்து ஹெச்.எம். காண்டெசா வெளியீடும் நடைபெறும் என கூறப்படுகிறது. புதிய ஹெச்.எம். அம்பாசடர் மாடல் 2023 அல்லது 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ×