search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zero Motorcycles"

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
    • புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் ஹீரோ கூட்டணி அமைக்கிறது.

    இந்திய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் ஜீரோ நிறுவனம் பவர்டிரெயின்களை உருவாக்குகிறது. உற்பத்தி, உதிரிபாகங்கள் மற்றும் விளம்பர பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் மேற்கொள்ள இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக குழு ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் 60 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 491 கோடியை முதலீடு செய்ய அனுமதி அளித்தது.

     

    எனினும், இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் வாகனங்கள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சர்வதேச வலைத்தளத்தில் ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு மாடல்களை பட்டியலிட்டுள்ளது. இவற்றில் ரோட்ஸ்டர், ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் அட்வென்ச்சர் பிரிவு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இடம்பெற்றுள்ளன.

    இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வினியோகம் செய்யும் பணிகளை துவங்கிவிட்டது. இதுதவிர பொது சார்ஜிங் உள்கட்டமைப்புகளையும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. முதற்கட்டமாக இந்நிறுவனத்தின் சார்ஜிங் சேவைகள் பெங்களூரு, டெல்லி மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் செயல்படுகிறது.

    தற்போது பெங்களூரு, டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிட்டத்தட்ட 300 சார்ஜிங் பாயிண்ட்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டு இருக்கிறது. 

    ×