search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக்கோப்பை"

    • டெல்லியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு இடையே போட்டி நடைபெற்றது.
    • ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன் எடுத்தது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் குர்பாஸ் 80 ரன், இக்ராம் 58 ரன் எடுத்தனர். இதையடுத்து 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ 2 ரன், மலான் 32 ரன், அடுத்து களம் இறங்கிய ரூட் 11 ரன், பட்லர் 9 ரன், லிவிங்ஸ்டன் 10 ரன், சாம் கரன் 10 ரன், வோக்ஸ் 9 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

    மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புரூக் 66 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 169 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதையடுத்து அடில் ரஷீத், மார்க் வுட் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

    • பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.
    • பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

    உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    அகமதாபாத்தில் இன்று இந்திய அணி அனைத்து விதங்களிலும் சிறப்பான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டுகள். இனி வரும் போட்டிகளுக்கும் வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார்.
    • 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று 5-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வருகிறது.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது.

    இதில், அலெக்ஸ் கேரி ரன் எடுக்காமல் அவுட்டானார். இந்திய அணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி பின்னர் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சால் தடுமாறியது.

    இதில், 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எடுக்க முடிந்தது.

    இதைதொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
    • அடிடாஸ் நிறுவனம் இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை வடிவமைத்துள்ளது.

    இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ம் தேதி சென்னையில் மோதுகிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை வடிவமைத்துள்ளது.

    இந்திய அணியின் புதிய ஜெர்சியின் அறிமுக வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டது.

    • உலக கோப்பை ஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • இந்திய ஹாக்கி அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    புவனேஸ்வர்:

    2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    உலக கோப்பைஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் 'டி' பிரிவில் இந்தியா உள்ளது.

    இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணி :

    கோல்கீப்பர் - கிரிஷன் பகதூர் பதக், ஸ்ரீஜேஷ் ரவீந்திரன்

    பின்களம் - ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் செஸ்

    நடுகளம் - மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங்

    முன்களம் - மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்

    மாற்று வீரர்கள் - ராஜ்குமார் பால், ஜுக்ராஜ் சிங்

    ×