search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுப்பினர்"

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
    • குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட ஆண்கள், பெண்கள் என மொத்தம் 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்பட்ட வகுப்பினர், மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த (ஆண், பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்து பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும். பின்னர் அந்த விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிந்துரை செய்யப்படும்.

    விண்ணப்பதாரர்களின் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:

    குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழு விற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதர வற்ற விதவை பெண்கள் அமைந்துள்ன குழு விற்கு முன்னுரிமை அளிக் கப்படும். 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருந்தல் அவசியம், குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    மேலும் கூடுதல் விவரங்க ளுக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாலா அமைப்பு செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார்.
    • மனிதனின் சிந்தனையை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.

    திருப்பூர்:

    மெட்ராஸ் லைப்ரரி அசோசியேஷன் (மாலா), நடவு பதிப்பகம், முத்தமிழ் சங்கம் சார்பில் திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள மக்கள் மாமன்ற நூலகத்தில் பாராட்டு விழா நடந்தது.திருவள்ளுவர், தமிழன்னை சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாலா அமைப்பு செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார். நூலகர் வாசகர் வட்ட தலைவர் புருஷோத்தமன் முன்னிலைவகித்தார். 'மாலா' தலைவர் அனுராதா பேசினார்.எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.மனிதனின் சிந்தனையை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும். நூலகம் என்பது தாய்மடி போன்றது. ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் உள்ள நூலகங்களில் கட்டாயம் உறுப்பினராக இணைய வேண்டும் என்றார்.

    • டெக்பா சங்க நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • வர்த்தக வாரிய உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வர்த்தக வாரிய உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து, பின்னலாடை தொழில் அமைப்பு பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார், பொருளாளர் ஞானகுரு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன், பொருளாளர் மாதேஸ்வரன், டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் உட்பட நிர்வாகிகள் ராஜாசண்முகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், இ.பி.சி.ஜி., திட்டத்தில், வரியின்றி மெஷின்களை இறக்குமதி செய்வதில் நீடிக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணவேண்டும். மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகங்களின் (டி.ஜி.எப்.டி.,) கவனத்துக்கு கொண்டுசென்று இக்கோரிக்கையை நிறைவேற்றித்தரவேண்டும்என டெக்பா சங்க நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    • உள்ளாட்சி ேதர்தலில் போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மீதமுள்ள 6 பதவிக்கு 29 பேர் போட்டியிட்டுள்ளனர். இதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதம் உள்ள 6 பதவிகளுக்கு நாளை 9ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார்.

    மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    இதற்கான பிரசாரம் நேற்று ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகி–றார்கள்.

    சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று மாலைக்க ள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபடுகிறார்கள்.

    ×