search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூலகங்கள்"

    • மாலா அமைப்பு செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார்.
    • மனிதனின் சிந்தனையை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.

    திருப்பூர்:

    மெட்ராஸ் லைப்ரரி அசோசியேஷன் (மாலா), நடவு பதிப்பகம், முத்தமிழ் சங்கம் சார்பில் திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள மக்கள் மாமன்ற நூலகத்தில் பாராட்டு விழா நடந்தது.திருவள்ளுவர், தமிழன்னை சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாலா அமைப்பு செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார். நூலகர் வாசகர் வட்ட தலைவர் புருஷோத்தமன் முன்னிலைவகித்தார். 'மாலா' தலைவர் அனுராதா பேசினார்.எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.மனிதனின் சிந்தனையை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும். நூலகம் என்பது தாய்மடி போன்றது. ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் உள்ள நூலகங்களில் கட்டாயம் உறுப்பினராக இணைய வேண்டும் என்றார்.

    • வீட்டுக்கு ஒரு விருட்சம்-ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை உலக புவி தினத்தன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
    • 75 அமைப்புகளை சேர்ந்தவர்கள் நூலகங்கள், கோவில்கள், குளக்கரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    தஞ்சாவூர்:

    75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக்குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம்-ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை உலக புவி தினத்தன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    அதன்தொடர்ச்சியாக 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 அமைப்புகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் 75 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கீழ்கோவில்பத்து ஊராட்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இதில் இந்திய செஞ்சிலுவை சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இன்னர்வீல் சங்கம், ஜே.சி.ஐ. அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெண்கள் இயக்கம், நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றங்கள், தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை தன்னார்வலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 75 அமைப்புகளை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்கள், ஆஸ்பத்திரிகள், போலீஸ் நிலையங்கள், நூலகங்கள், கோவில்கள், குளக்கரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் அனைத்து அமைப்புகளுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டுக்க ளையும், வாழ்த்து களையும் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் வேளா ண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், கும்ப கோணம் கோட்டாட்சியர் லதா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், இணை செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை,நூலகங்களில், தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.
    • தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, வீடுதோறும் தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, நூலகர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.இது குறித்து, மாவட்ட நூலக ஆணைக்குழு வாயிலாக நூலகர்களுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டுதல்கள் வருமாறு:-

    சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை,நூலகங்களில், தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதற்காக, ஊராட்சித்தலைவர்களுடன் திட்டம் குறித்த ஆலோசனை நடத்தி சிறப்பு கூட்டங்கள் வாயிலாக அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி திட்டத்தை விளக்க வேண்டும்.நூலகப்பணியாளர்கள், நூலகத்திலும், வீடுகளிலும், தேசியக்கொடி ஏற்றி, அதன் விபரங்களை,நூலக ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாசகர் வட்டம் வாயிலாக தேசியக்கொடி திட்டத்தை விளக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×