என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஒவ்வொருவரும்  நூலகங்களில்  உறுப்பினராக இணைய வேண்டும்- எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேச்சு
  X

  கோப்புபடம். 

  ஒவ்வொருவரும் நூலகங்களில் உறுப்பினராக இணைய வேண்டும்- எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாலா அமைப்பு செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார்.
  • மனிதனின் சிந்தனையை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.

  திருப்பூர்:

  மெட்ராஸ் லைப்ரரி அசோசியேஷன் (மாலா), நடவு பதிப்பகம், முத்தமிழ் சங்கம் சார்பில் திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள மக்கள் மாமன்ற நூலகத்தில் பாராட்டு விழா நடந்தது.திருவள்ளுவர், தமிழன்னை சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாலா அமைப்பு செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார். நூலகர் வாசகர் வட்ட தலைவர் புருஷோத்தமன் முன்னிலைவகித்தார். 'மாலா' தலைவர் அனுராதா பேசினார்.எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.மனிதனின் சிந்தனையை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும். நூலகம் என்பது தாய்மடி போன்றது. ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் உள்ள நூலகங்களில் கட்டாயம் உறுப்பினராக இணைய வேண்டும் என்றார்.

  Next Story
  ×