search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாமியர்கள்"

    • ரம்ஜான் நோன்பை தொடங்கிய இஸ்லாமியர்கள் தொடங்கினர்.
    • பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்

    இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் நோன்பு நோற்பது முக்கிய மானதாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

    ரம்ஜான் மாதத்தில் முதல் பிறை பார்த்த பின்னர் நோன்பு உறுதி செய்யப்படும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று (24-ந் தேதி) முதல் நோன்பு நோற்கும்படி இஸ்லாமிய மக்களுக்கும், அனைத்து பேஷ் இமாம்க ளுக்கும் மாவட்ட அரசு சலாஹூத்தீன் தகவல் தெரிவித்தார்.

    முன்னதாக நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்க ளிலும் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல்களிலும், அரபி மதராசக்களிலும் நடை பெற்றன.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமநாதபுரம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று முதல் நோன்பு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். பின்பு மாலையில் தொழுகை செய்து பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி உட்கொண்டு விர தத்தை முடித்துக் கொள் வார்கள். இதே போல் தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு விரதத்தை இஸ்லா மியர்கள் கடைப்பிடிப்பார்கள்.

    • இஸ்லாமியர்களின் பங்கு குறித்த விளக்க கூட்டம் நடந்தது.
    • ஹாஜி மவுலானா மவுலவி முஹம்மது பாரூக் ஆலிம் மன்பஈ தலைமை தாங்கினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் இணைந்து ''இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு'' குறித்த விளக்க கூட்டத்தை நடத்தியது.

    சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி மவுலானா மவுலவி முஹம்மது பாரூக் ஆலிம் மன்பஈ தலைமை தாங்கினார். பெரிய பள்ளிவாசல் துணைத்தலைவர் பாபா அமீர் பாதுஷா முன்னிலை வகித்தார். மதரசா ஆசிரியர் மவுலானா ஷேக் பாசில் யூசுப் கிராஅத் ஓதினார். மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளி மவுலானா முஹம்மது சிராஜுதீன் கீதம் பாடினார், இமாம் ஹிதாயா ஜும்மா பள்ளிவாசல் இமாம் மவுலானா நூருல் அஜீம் மிப்தாஹி தொகுத்து வழங்கினார். திருப்பத்தூர் வட்டார உலாமா சபை தலைவர் மவுலானா சையது முகமது இல்ஹாமி வரவேற்றார்.

    திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசல் செயலாளர் சிக்கந்தர் பாதுஷா, தாருல் உலூம் தாவத்துல் ஹூதா மதரஸா தலைமை ஆசிரியர் மவுலானா மவுலவி முஹம்மது ஆதில் தாவூதி, கவிஞர் பாரதன், சிவகங்கை மாவட்ட உலமா சபை தலைவர் மவுலானா முஹம்மது ரிலா பாக்கவி ஆகியோர் ஆகியோர் பேசினர். மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் அலி நன்றி கூறினார்.

    • இந்து சுடுகாட்டை இஸ்லாமியர்கள் சுத்தம் செய்தனர்.
    • அதன் பிறகு அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலம், கல்மேடு அன்னை சத்யா நகரில் இந்துக்களுக்கு என்று சுடுகாடு உள்ளது. அது கடந்த சில மாதங்களாக குப்பை-கூளங்களுடன் காட்சி அளித்தது. அதனை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் பலன் இல்லை. சக்கிமங்கலம் சுடுகாட்டை தாங்களாகவே முன்வந்து புனரமைப்பது என்று மதுரை எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப் பட்டது. சுமார் மூன்று மணி நேரத்துக்கு பிறகு சக்கிமங்கலம் சுடுகாட்டில் குப்பை குளங்கள் அகற்றப்பட்டன. அதன் பிறகு அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கிளை தலைவர் கரீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனி சிக்கந்தர், செயலாளர் ஜாபர் சாதிக், துணைத் தலைவர்கள் செல்வகனி, அப்துல் ரஹீம், வர்த்தக அணி இணைச் செயலாளர் முகம்மது அலி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மதுரை சக்கிமங்கலத்தில் இந்துக்களுக்கான சுடுகாட்டை இஸ்லாமியர்கள் புனரமைத்து மத நல்லிணக்கம் பேணிய சம்பவம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது.

    இஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை என்பதால் அவர்களுக்காக எந்த வேலையும் செய்யாதீர்கள் என கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GowdaPatil #BJP
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.

    இந்தநிலையில் பிஜாப்பூர் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஓன்றில் பங்கேற்று பேசிய அந்த தொகுதியின் எம்.எல்.ஏ  பசன்கவுடா பாட்டீல் பேசியதாவது:

    பா.ஜ.க. கவுன்சிலர்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இஸ்லாமியர்கள் யாரும் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவில்லை.

    எனவே இந்துக்களுக்கு மட்டுமே உதவ வேண்டும். மேலும் தனது அலுவலகத்திற்கு தொப்பி மற்றும் புர்காவுடன் யாரும் வரக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

    கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 25 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பாரம்பரிய முறை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு காலத்தில் அதிகாலை நேரத்தில் உணவு உண்ட பின்னர், அன்றைய நோன்பை தொடங்குவார்கள். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நோன்பு வைப்பவர்களை அதிகாலையில் எழுப்புவதற்காக குரான் வரிகளை கூறிகொண்டு ஒரு குழு வீதி வீதியாக செல்வார்கள்.

    இந்த பாரம்பரிய முறை கடந்த 25 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் நிலவிய பயங்கரவாத செயல்பாடுகள் காரணமாக இந்த பாரம்பரிய முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை குரான் வரிகளை மைக்கில் கூறிக்கொண்டே குழு ஒன்று வீதி வீதியாக சென்று நோன்பு கடைப்பிடிப்பவர்களை எழுப்பியுள்ளது. ரமலான் மாதத்தில் காஷ்மீரில் ராணுவம் தனது வழக்கமான சோதனை மற்றும் சிறப்பு ஆபரேஷன்களை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×