search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து சுடுகாடு"

    • இந்து சுடுகாட்டை இஸ்லாமியர்கள் சுத்தம் செய்தனர்.
    • அதன் பிறகு அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலம், கல்மேடு அன்னை சத்யா நகரில் இந்துக்களுக்கு என்று சுடுகாடு உள்ளது. அது கடந்த சில மாதங்களாக குப்பை-கூளங்களுடன் காட்சி அளித்தது. அதனை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் பலன் இல்லை. சக்கிமங்கலம் சுடுகாட்டை தாங்களாகவே முன்வந்து புனரமைப்பது என்று மதுரை எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப் பட்டது. சுமார் மூன்று மணி நேரத்துக்கு பிறகு சக்கிமங்கலம் சுடுகாட்டில் குப்பை குளங்கள் அகற்றப்பட்டன. அதன் பிறகு அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கிளை தலைவர் கரீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனி சிக்கந்தர், செயலாளர் ஜாபர் சாதிக், துணைத் தலைவர்கள் செல்வகனி, அப்துல் ரஹீம், வர்த்தக அணி இணைச் செயலாளர் முகம்மது அலி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மதுரை சக்கிமங்கலத்தில் இந்துக்களுக்கான சுடுகாட்டை இஸ்லாமியர்கள் புனரமைத்து மத நல்லிணக்கம் பேணிய சம்பவம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது.

    ×