search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா"

    • நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.
    • பொதுமக்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் முக்கிய தீவு பகுதியான மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன, அதில் குடியிருந்தவர்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

    சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்துள்ளார்.

    மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமானோர் இருளில் தவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 460 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • தோட்டத்திற்குள் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கலாம்.
    • ஏற்கனவே 2018-ம் ஆண்டு 54 வயதான பெண்ணை இதே போன்று ஒரு மலைப்பாம்பு கொன்று விழுங்கி இருந்தது.

    இந்தோனேசியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 52 வயதான ஜஹ்ரா என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ரப்பர் தோட்டத்துக்கு தேடி சென்றனர். விடிய விடிய தேடியும் ஜஹ்ரா கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மறுநாள் ரப்பர் தோட்டத்திற்கு அருகே 16 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு நகர முடியாமல் கிடந்தது. அந்த பாம்பின் வயிறு மிகவும் வீங்கிய நிலையில் காணப்பட்டது. இதைப்பார்த்த ஜஹ்ராவின் உறவினர்கள் ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு கொன்று விழுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை அடித்துக்கொன்று பாம்பின் வயிற்றை கிழித்தனர். அப்போது பாம்பின் வயிற்றுக்குள் ஜஹ்ரா பிணமாக இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தோட்டத்திற்குள் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இந்தோனேசியாவில் நடப்பது முதல்முறையல்ல. ஏற்கனவே 2018-ம் ஆண்டு 54 வயதான பெண்ணை இதே போன்று ஒரு மலைப்பாம்பு கொன்று விழுங்கி இருந்தது.

    • துப்பாக்கியுடன் பெண் வந்தபோது ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ இல்லை
    • கைது செய்யப்பட்ட பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கியுடன் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் அந்தப் பெண் ஜனாதிபதி மாளிகையின் காம்பவுண்ட் அருகே வந்தபோது அவரை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர்.

    அந்த பெண் ஜனாதிபதி மாளிகையில் நுழையவில்லை என்றும், அவர் துப்பாக்கியுடன் வந்தபோது ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த பெண்ணுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? அவரது நோக்கம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உலகின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில், சில சமயங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கின்றன.

    கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீடு மற்றும் கடையில் வேலை செய்ய இந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை தடை செய்துள்ள சிங்கப்பூர் அரசு, சட்ட ரீதியாகவும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. #Singapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வீடு மற்றும் கடைகளில் வேலையாளாக பணியாற்றுவது இந்தோனேசியர்கள்தான். அங்கு நிலவும் வறுமை காரணமாக சிங்கப்பூரை அவர்கள் நாடி வருகின்றனர். மற்ற நாடுகளை போல இல்லாமல் கடுமையான தொழிலாளர் சட்டங்களை கொண்ட சிங்கப்பூர் அரசு, வேலையாட்களுக்கு தேவையான வசதிகள் மற்ற நாடுகளை விட அதிகமாகவே கிடைக்கும்.

    இந்நிலையில், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று ‘இந்தோனேசிய பணியாளர்கள் விற்பனைக்கு’ என சமீபத்தில் விளம்பரம் செய்துள்ளனர். இது தொடர்பான புகார் அரசுக்கு சென்ற நிலையில், அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை அரசு தடை செய்துள்ளது.

    மேலும், சட்ட ரீதியான நடவடிக்கையையும் சிங்கப்பூர் அரசு தொடங்கியுள்ளது. 
    மாட்டுக்கு புல் அறுக்கச்சென்றவரை முதலை கடித்து கொன்றதற்கு பழி தீர்க்கும் விதமாக முதலை பண்ணைக்குள் புகுந்த ஒரு கும்பல் சுமார் 300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் தனியார் முதலைப்பண்ணை ஒன்று உள்ளது. சமீபத்தில் 45 வயது நபர் தனது மாட்டுக்கு புல் அறுக்க முதலைப்பண்ணை அருகே சென்றுள்ளார். புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது உடைந்த வேலி வழியாக வெளியே வந்த முதலை ஒன்று அந்த நபரை அடித்துகொன்று உண்டது.

    இதனை அடுத்து, பண்ணை உரிமையாளர் உரிய இழப்பீடு தர வேண்டும் என உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அரசிடம் முறையிட்டனர். உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் முதலைப்பண்ணைக்குள் புகுந்து 292 முதலைகளை கொன்று குவித்தனர்.

    இது தொடர்பாக பண்ணை உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், விசாரணை நடந்து வருகிறது. 
    இந்தோனேசியாவில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் 163 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இன்று நடந்த மற்றொரு படகு விபத்து ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர். #Indonesia
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவு அருகே உள்ள தோபா ஏரியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகிலிருந்த 163 பேரில், சிலரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

    இந்நிலையில், சுலாவேஸி தீவு பகுதியில் இன்று காலை ஒரு படகு  விபத்துக்குள்ளானது. 139 பேர் படகில் இருந்ததாகவும் இதுவரை 12 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான படகில் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பயணிகளை ஏற்றுவதே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இம்மாத தொடக்கத்தில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #ModiInIndonesia
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று இந்தோனேசியா சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மோடி கூறியதாவது, ‘இந்தோனேசியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணியில் இந்தோனேசியா உடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என அவர் பேசினார்.

    இந்த மாத தொடக்கத்தில் சுரபயா நகரில் உள்ள மூன்று சர்ச்சுகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 7 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இந்தோனேசியாவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா-இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டார். #ModiinIndonesia #PMModi
    ஜகர்த்தா:

    சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டார். பயணத்தின் முதல்கட்டமாக நேற்று இரவு இந்தோனேசியா சென்றடைந்தார். அவருக்கு அதிபர் சார்பில் உற்றாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று போரில் உயிர்நீத்த ராணுவவீரர்களுக்கு மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவை வலிப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர். பின் இந்தியா-இந்தோனேசியா இடையே பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:-


    பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்தியா எப்போதும் இந்தோனேசியாவிற்கு உறுதுணையாக நிற்கும். சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பல அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டனர். இது மிகவும் கவலை அளிக்கிறது.

    இந்தோ-பசுபிக் பகுதியில் மட்டுமல்லாமல் அதனை தாண்டியும் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தும் ஆற்றல் இந்தியா-ஏசியன் கூட்டுறவிற்கு உள்ளது.

    இந்தியா மற்றும் இந்தோனேசியா ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறது. இந்தோ-பசுபிக் பகுதியினை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.

    என மோடி கூறினார். #ModiinIndonesia #PMModi
    இந்தோனேசியாவின் சுரபாயா நகரில் உள்ள மூன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். #IndonesiaChurchAttack
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், அந்நகரில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.



    இந்த தாக்குதலில் 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்பது தொடர்பான விசாரணையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. 
    ×