search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைக்கூட்டம்"

    • ராமேசுவரத்தில் 11-ந் தேதி நடைபெறும் அனைத்து கட்சி மனித சங்கிலி குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • மக்கள் ஒற்றுமை, சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்ற வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடக்கிறது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் வருகிற 11-ந் தேதி அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி இயக்கம் நடத்தப்படுகிறது.

    மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்ற வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது.

    இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

    இதில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கு அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், ராமேசுவரம் தாலுகா செயலாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் முருகானந்தம்,, காங்கிரஸ் நகர் பொறுப்பாளர் ராஜீவ் காந்தி, ம.தி.மு.க. நகர் செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தை நகர செயலாளர் நாகராஜன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர பொருளாளர் மரியா ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

    • அரசு பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது
    • உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ம்வகுப்பு முடித்துசென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்துப்பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பி இருந்தது. இதன் அடிப்படையில் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளித்தலைமையாசிரியர் நவநீதகிருஸ்ணன் தலைமைவகித்தார். ஆசிரியர்கள் ரமேஸ் கண்ணதாசன் செம்மலர் ஜெயக்குமார் மகாலிங்கம் கையூம் ஆகியோர் இந்தப்பள்ளியில் 12ம்வகுப்பு முடித்து உயர் கல்வி படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு வழிமுறைகள் குறித்தும் மேற்படிப்பின் அவசியம் வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கிப்பேசினார்கள். இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மேல்படிப்புக்கு விண்ணப்பித்துள்ள படிப்புகள் குறித்து விளக்கினர்.

    • வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகளில் சுதந்திர தினத்தை கொண்டாட தொழிலாளர்துறை வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
    • அமுதப்பெருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.

    மதுரை

    மதுரை மண்டலத்திற்கு உதமிழக தொழிலாளர் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் அறிவுரைப்படி, மதுரை கூடுதல் கமிஷனர் குமரன் வழிகாட்டுதலின் படி 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.

    மதுரை மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கடைகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அப்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி, வருகிற 15-ந் தேதி 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா அனைத்து தரப்பினரும் கொண்டாட வேண்டும். எனவே அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர், ஆஸ்பத்திரிகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றிலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வீடுகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசியக்கொடி ஏற்றி வைக்க வேண்டும்.

    அன்றைய நாட்களில், விளம்பர பலகைகளில் மூவர்ணம் இருக்க வேண்டும். பணியாளர்கள் தேசியக்கொடி அணிந்து பணியாற்ற வேண்டும். நிறுவனத்தின் வலைத்தளங்களில் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    அத்துடன்வெளிமாநில தொழிலாளர்களின் பணி நிலைமை மற்றும் நலன்களை முறைப்படுத்தும் வகையில், வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நிறுவன உரிமையாளர்கள், அவர்களின் பெயர், ஆதார் எண், செல்போன் எண், தொழிலாளி சார்ந்துள்ள மாநிலத்தில் உள்ள வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை தொழிலாளர் துறை இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால பலன்களை வழங்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது.

    துணை கமிஷனரிடம் ஆன்லைனில், பணி நியமனம் குறித்து பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர் உதவி கமிஷனரிடம் (அமலாக்கம்) உரிமம் பெற வேண்டும். கடைகள், நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு 8 மணி நேர வேலையின் போது, உட்கார்ந்து பணியாற்ற வசதியாக இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.அன்றைய நாட்களில், விளம்பர பலகைகளில் மூவர்ணம் இருக்க வேண்டும். பணியாளர்கள் தேசியக்கொடி அணிந்து பணியாற்ற வேண்டும். நிறுவனத்தின் வலைத்தளங்களில் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் பங்கேற்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் உடுமலை வடக்கு, தெற்கு, நகர் மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் உடுமலையில் நடந்தது. இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் வீரப்பன் மற்றும் பபீஸ், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள், விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் பங்கேற்றனர்.

    • ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள கருமாரி யம்மன் கோவில் அருகே கூட்டம் நடந்தது.
    • இக்கூட்டத்திற்கு, 29-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    ஓசூர் 29-வது வார்டு அ.தி.மு.க.செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள கருமாரி யம்மன் கோவில் அருகே நடந்த இக்கூட்டத்திற்கு, 29-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    கிழக்கு பகுதி அ.தி.மு.க. அவைத்தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிழக்கு பகுதி அ.தி.மு.க.செயலாளர் ராஜி, மண்டல தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், புருஷோத்தம ரெட்டி ஆகியோர் கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள். வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சங்கர் என்ற குபேரன் உள்பட பலர் பேசினர்.

    கூட்டத்தில் வட்ட பொருளாளர் மகாதேவன், மோகன்ராஜ், வெங்கடேஷ், தனபால் சுரேஷ், மதுராஜ் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

    • ஆலோசனை கூட்டம், மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
    • (ஆகஸ்ட்) மாதம் 25-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர தே.மு.தி.க உட்கட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம், மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, மாநகர கட்சிப் பொறுப்பாளர் சீனிவாச மூர்த்தி, அவைத்தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில், அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 25-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    மேலும், நாளை ( 27-ந் தேதி) மின்சார கட்டண உயர்வு, ஜிஎஸ்டி ஆகியவற்றை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தின்போது, விண்ணப்ப படிவங்கள், கட்சியினருக்கு வழங்கப்பட்டது.

    இதில், ஒன்றிய செயலாளர் கண்டராயன், மாநகர பொருளாளர் அப்பய்யா, அறிவழகன், வெங்கடேஷ், மணி, உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் உட்கட்சி அமைப்புத் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வட்டாரத் தலைவர் இளவரசன், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் குமார் வரவேற்றார். கூட்த்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தலா 10 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் 40 ஆயிரம் உறுப்பினர்களை டிஜிட்டல்முறையில் காங்கிரஸ்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் பூத் கமிட்டி தேர்தலை நடத்தி முடித்த பின்னர்வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் படிப்படியாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும். தேர்தல் முடிவுகளை மாநிலத் தலைமைதான் அறிவிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அமைப்பு தேர்தல் நடத்துவதற்கான பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், வழக்கறிஞர் இளையராஜா, வழக்கறிஞர் ராஜ்மோகன், ஆகியோர் கலந்து கொண்டு உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினர். இதில் வட்டார தலைவர்கள் கிருபானந்தம், சின்னையன், கணேசன், அப்துல்கலாம், பெரியசாமி, கொளஞ்சி யப்பன், நகர தலைவர்கள் ஏழுமலை, கபீர் பாஷா, செந்தமிழ்ச்செல்வன் சோசியல் மீடியா கார்த்தி, சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    ×