search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரல்வாய்மொழி"

    • நகையை விட்டு விட்டு பணத்தை மட்டும் எடுத்துச் சென்ற கொள்ளையன்
    • தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே உள்ள பெருமாள்புரம் கன்னி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 56). இவர் செண்பகராமன்புதூர் துணை மின்நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு உமா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனும் மகளும் பெங்களூரில் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டிற்கு பால கிருஷ்ணன் மனைவி உமா வுடன் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் உள்பக்க கதவு பூட்டு உடைந்து கிடப்பதை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்கள் பார்த்து உள்ளனர். இது பற்றி அவர்கள் போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த யாரோ திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இதற்கிடையில் கொள்ளை சம்பவம் பற்றி தெரிய வந்ததும் பாலகிருஷ்ணன் உடனடி யாக ஊர் திரும்பினார். வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் மேசையில் இருந்த 25 ஆயிரம் ரூபாயில் ரூ.10 ஆயிரம் மட்டும் எடுத்துச் சென்றிருப்பதாக பாலகிருஷ்ணன் கூறினார்.

    மேலும் பணத்தின் அருகில் இருந்த தங்கநகைகளை கொள்ளையன் எடுக்காமல் விட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நூதன முறையில் நடந்த இந்த திருட்டு அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே பகுதியில் ஏற்கனவே பைக் திருட்டு உள்பட பல சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது மீண்டும் மின்வாரிய அலுவலர் வீட்டில் நடந்த திருட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டவுன் டி.எஸ்.பி. மற்றும் அதிகா ரிகள் வந்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்தில் பாதி மற்றும் நகையை விட்டு விட்டு கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே அரசு தொழிற்சாலை கன்யா ஸ்பின் கூட்டுறவு நூற்பாலை.
    • தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆலையில் இதுவும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே அரசு தொழிற்சாலை கன்யா ஸ்பின் கூட்டுறவு நூற்பாலை.

    தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆலையில் இதுவும் ஒன்று. இந்த ஆலையில் 94 நிரந்தர தொழிலாளர்களும், தினக்கூலியாக 206 பேரும் வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஆைல நிர்வாகம் பஞ்சு விலை அதிகரிப்பை காரணம் காட்டி பாதிக்குமேல் எந்திரங்களை நிறுத்திவிட்டது.

    மேலும் தொழி லாளர்களை விடுப்பு களை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறி வேலைக்கு வரவேண்டாம் என கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் குறைந்த சம்பளத்துக்கு படிப்படியாக வடநாட்டு வாலிபர்களை வேலைக்கு அமர்த்த முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

    இதற்காக சிலருக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., அ.தி.மு.க., சி.ஐ.டி.யு .தொழிற்சங்கம் ஆகியவை ஆலைக்கு முன்பு சி.ஜ.டி.யு. சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் தி.மு.க. தொழில் சங்க பொதுச்செயலாளர் மகாராஜாபிள்ளை, மாவட்ட தலைவர்மாடசாமி மாநில தி.மு.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் இளங்கோ, அழகம்பெருமாள், நம்பி ராஜன் சி.ஐ.டி.யு. சங்க பொறுப்பாளர் வடிவேல், குமார், தாலுகா செயலாளர் மிக்கேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாசானம் ஜெயக்குமார் உள்பட பலர் கொட்டும் மழையில் ஆண்களும், பெண்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் அறைக்கு முன்பு அவர்களை வெளியேறும் வரை காத்திருப்புப் போராட் டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை சரியான முறையில் வழங்க வேண்டும், வடமாநில தொழிலாளர்கள் உள்ளே புகுவதை நிறுத்த வேண்டு மென்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

    • மர்ம நபர்கள் கைவரிசை
    • சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் செல்வமணி.இவரது மகன் விநாயக சங்கர் வயது 43.இவர் ஓமன் நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி சிவசெல்வி. கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் சிவ செல்வி அவரது தாயார் வீடு வீட்டில் வசித்து வந்தார்.

    இதனால் தெற்கு பெருமாள்புரத்தில் உள்ள வீட்டை விநாயக சங்கரின் தந்தை செல்வமணி பராம ரித்து வந்தார். இன்று காலையில் செல்வமணி வீட்டிற்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப் பட்டு இருந்தது.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பீரோவில் இருந்த 5 கிராம் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. விநாயகர் சங்கர் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டே மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள்.இதனால் பழைய கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • ஆரல்வாய்மொழி போலீசில் புகார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி மீன மங்களம் காலனியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மணிக்கலா (வயது 46). நேற்று பாபு காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் மனைவி மணிகலா இல்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங் களில் தேடினார்.ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து பாபு ஆரல்வாய்மொழி போலீ சில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணிகலாவை தேடி வருகிறார்கள்.

    • கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தாழக்குடி அருகே வீரநாராயணமங்கலம் தெற்கு தெருவில் தூய்மை பணியாளர் வீட்டில் மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அதே பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

    அந்த பகுதியில் வசிப்பவர் உதயகுமார். இவர், வாத்துகளை வளர்த்து வருகிறார். அடிக்கடி வாத்துகளை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வார். சம்பவத்தன்று அப்படி சென்று விட்டார்.

    அப்போது யாரோ பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த அருள்பாய் என்பவர் வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தபோது பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி அருகே வடக்கு பெருமாள்புரத்தில் மோட்டார் சைக்கிளை திருடி விட்டதாக கூறி இரண்டு வாலிபர்களை பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்ட தால் நாகர்கோவில் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த கொள்ளையர்களை மீட்டனர்.

    மீட்கப்பட்ட இருவரி டமும் விசாரணை நடத்தியபோது அவர்கள் தடிக்காரன்கோ ணம் அண்ணா நகரை சேர்ந்த ஆகாஷ் என்பதும் மற்றொருவர் தடிக்கா ரன்கோணம் ரெத்தின புரத்தை சேர்ந்த ஜோசப் ராஜ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து தெற்கு பெருமாள் புரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆகாஷ், ஜோசப்ராஜ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் ஜோசப்ராஜ் புகார் மனு ஒன்று அளித்தார்.அதில் நானும்,ஆகாசும் வடக்கு பெருமாள்புரத்தில் சந்திரகுமார் என்பவரது இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தபோது பொதுமக்கள் எங்களை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ள னர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இது தொடர்பாகவும் கண்டால் தெரியும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வேவிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.
    • கொரோனா காலத்திற்கு பிறகு 16321 பாசஞ்சர் ரெயில் விரைவு ரெயிலாக மாற்றப்பட்டு பெயரளவில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக உள்ளதே தவிர வேறு எந்த வசதிகளும் இல்லை.

    கன்னியாகுமரி:


    மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே குமரி மாவட்டம் வந்தார். மார்த்தாண்டம் சுவாமியார் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


    பின்னர் நாகர்கோவில் அருகே கீழ குஞ்சன்விளை யில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து வடசேரியில் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். பாரதிய ஜனதா மகளிரணி பொறுப்பாளர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் கன்னியாகுமரி யில் நடந்த 75-வது சுதந்திர தினவிழா புகைப்படக்கண்காட் சியிலும் கலந்து கொண்டார். மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வேவிடம் தளவாய்சுந்த ரம் எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-


    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் கோயம்புத்தூருக்கு 16321 எண்ணுள்ள பாசஞ்சர் ரெயில் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு தோவாளை, ஆரல்வாய் மொழி ரெயில் நிலையங் களில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வள்ளியூர், திருநெல்வேலி, மதுரை வழி யாக கோயம்புத்தூருக்கு இரவு 7 மணிக்கு சென்ற டைந்து வருகிறது.

    கொரோனா காலத்திற்கு பிறகு இந்த பாசஞ்சர் ரெயில் விரைவு ரெயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதில் விரைவு ரெயில் வண்டிக ளுக்குரிய எந்த வசதிகளும், பயணிகளுக்கு செய்யாத நிலையே காணப்படுகிறது. பெயரளவில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக உள்ளதே தவிர வேறு எந்த வசதிகளும் இல்லை.


    மேலும் ஏற்கனவே நின்று சென்ற தோவாளை, ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களில் நிற்காமல் சென்று வருகிறது. இதனால் இப்ப குதியிலிருந்தும், சுற்று வட்டார கிராமங்க ளிலிருந்தும் திருநெல்வேலி, கோவில் பட்டி பகுதிகளுக்கு அரசு பணி மற்றும் தனியார் பணிக்கு செல்பவர்கள், உயர்கல்வி படிக்க கல்லூரி செல்லும் மாணவர்கள் பிற தொழில் மற்றும் வியாபாரத் திற்கு செல்பவர்கள், திருக் கோவில்களுக்கு செல்பவர் கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    மறுமார்க்கமாக கோவை யிலிருந்து 16322 எண்ணுள்ள ரெயில் காலை 8 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவி லுக்கு இரவு 8.10 மணிக்கு வருகிறது. ஆரல்வாய்மொழி, தோவாளை ரெயில் நிலை யங்களில் இந்த ரெயில் நிற் காமல் செல்வதால், மேற் கூறியபடி பணிக்கு சென்ற வர்கள் இந்த ரெயில் நிலை யங்களில் இறங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் எந்த வசதிகளும் செய்யாமல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்குரிய கட்டணம் இந்த ரெயிலில் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலை பயணிகளுக்கு வருத் தத்தை ஏற்படுத்துகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த ரெயில் தோவாளை மற்றும் ஆரல் வாய்மொழி ரெயில் நிலையங்களில் நின்று செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    • மக்களுக்கு நல்லதை செய்ய விரும்பியவர் புனிதர் தேவசகாயம்
    • போப் ஆண்டவரின் இந்திய தூதர் புகழாரம்

    நாகர்கோவில்:


    குமரி மாவட்டம் நட்டா லத்தை சேர்ந்த தேவச காயத்துக்கு கடந்த மாதம் 15-ந் தேதி வாடிகனில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோட்டார், குழித்துறை மறை மாவட்டம் சார்பில் தேசிய அளவிலான நன்றி விழா கொண்டாட்டம் நேற்று ஆரல்வாய்மொழி காற்றா டிமலை அருகே நடந்தது.


    விழாவில் முதலில் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த வாழ்வு நாட்டியம் நடந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் நடனமாடினர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பொன் னாடை அணிவிக்கப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது.


    தேவசகாயம் நினைவு மலரை போப் பிரான்சி ஸின் இந்திய தூதர் லெயோ போல்டாஜிரல்லி வெளியிட புனித திருப்பண்ட பணி ஒருங்கிணைப்புக் குழு அமலகிரி எழில் பெற்றுக் கொண்டார்.

    தேவசகாயத்தின் வர லாற்று புத்தகம், ஆய்வு க்கட்டுரை, தேவசகாயம் நவ நாள் புத்தகம், பாடல் புத்தகம் ஆகிய புத்தக ங்களை அகில இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் வெளியிட்டார். புத்தகங்களை பாலபிரஜாபதி அடிகளார் பெற்று கொண்டார்.


    மாலை 5 மணிக்கு ஆடம்பரத் திருப்பலி நடந்தது. திருப்ப லிக்கு வந்தவர்களுக்கு தமிழ்நாடு கலாசார முறைப்படி பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. போப் பிரான்சிஸிசின் இந்திய தூதர் லெயோ போல்டா ஜிரஸ்லி தலைமையில் பேராயர்கள், ஆயர்கள் திருப்பலி நிறைவேற்றினர்.

    தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றப்பட்டது. போப் பிரான்சிஸ் இந்திய தூதர், இந்திய ஆயர் பேரவை தலைவர் ஆகியோருடன் நட்டாலம், வடக்கன்குளம், பெருவிளை, கோட்டார் ஆகிய பங்கு நிர்வாகிகள் குத்து விளக்கு ஏற்றினர். அதைத் தொடர்ந்து புனித தேவசகாயத்தின் உருவப்படத்தை போப் பிரான்சிஸின் இந்திய தூதர் திறந்து வைத்தார்.


    பின்னர் அவர் கூறியதா வது:-

    இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் ஏற்பாட்டில் தேவச காயத்தின் புனிதர் பட் டத்திற்கான தேசிய நன்றி விழாவில் நான் பங்கேற்றிருப்பது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

    புனிதர் தேவசகாயத்தின் வாழ்க்கை மற்றும் முன் னுதாரணத்திற்காக கடவு ளுக்கு நன்றியை உரித்தாக்கு கிறோம். கடவுளின் முன்நிலை யில் இருந்து, எங்களுடனான அன்பையும் ஒற்றுமை யையும் பாதுகாக்கும் அனைத்து புனிதர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.

    ஒவ்வொரு துறவியின் வாழ்க்கையும் கிறிஸ்துவின் முன்மாதிரியான பிரதிப லிப்பைக் காட்டுகிறது. அது விசுவாசிகளின் போற்றுத லுக்கு தகுதியானது. புனிதர் தேவசகாயம் கிறிஸ்துவுக்காகவும். திருச்சபையின் அன்பிற்காக வும் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கக்கூடி யவராக இருந்தார்.


    கடந்த மே மாதம் 15-ந்தேதி வாடிகனில் நடந்த புனி தர் பட்டமளிப்பு விழாவின் போது போப் ஆண்டவர் பிரான்சிஸ் பத்து புதிய புனிதர்களை அறிவித்தார். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புனிதர் தேவசகாயமும் ஒருவர்.

    கடவுள் நம்மை எப்படி நிபந்தனையின்றி நேசிக்கி றார் என்பதையும், பரிசுத்தத்திற்கான பாதை எப்படிப்பட்டது? என்பதையும், ஏசுவை மற்றவர்களிடம் பார்க்க வேண்டும் என்பதையும், நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் எப்படி ஒரு கனவைக்கொண் டிருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


    இயேசுவின் சீடர்களாக இருப்பதும், பரிசுத்தத்தின் பாதையில் முன்னேறுவதும் முதலில் கடவுளின் அன்பின் வல்ல மையால் நம்மை உரு மாற்ற அனுமதிப்பதாகும். என்றார். போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனிதர் தேவசகா யம்தனது வாழ்வில் உண்மை யாக வாழ்ந்தார்.


    கடவுளால் படைக்கப் பட்ட நாம் அனைவரும் கட வுளின் அன்புக்குரியவர்கள் என்பதை அவர் புரிந்து கொண்டார். புனிதர் தேவச காயம் படித்தவர். சமூகத்தில் நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பம் கொண்டிருந்தார். கடவு ளுக்கான அரிப்பணிப்பு மற்றும் மனிதகுலத்திற்கான சேவைக்காக அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.

    புனிதர் தேவசகாயத்தின் அர்ப்பணிப்பு வாழ்வு மூலம், அவருடைய வழியைப் பின்பற்றவும்! நல்லொழுக்கமான வாழ்க் கையை நடத்தவும், அன்பி லும், சேவையிலும் அனைவ ரையும் சென்றடையவும் நம் மைத் தூண்டுகிறார். உங்கள் மீது கடவுளின் ஆசீர்வாதங் களை வேண்டி. உங்கள் ஒவ் வொருவருக்கும் ஆசீர்வா தத்தை நான் வழங்குகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


    நிகழ்ச்சியில் அகில இந்திய பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ் வால்டு கிராசியாஸ், சீரோ மலபார் கத்தோலிக்கத் திருஅவையின் முதல் நிலைப் பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, கோவா டாமன் பேராயர் பிலிப் நேரி பெர்றாவோ, தமிழக ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, மதுரை பேராயரும் குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரகப் பரிபா லகர் அந்தோணி பாப்புசாமி, புதுவை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், போபால் பேராயர் துரைராஜ், நாக்பூர் பேராயர் எலியாஸ்,


    மற்றும் தமிழக அமைச்சர்கள் மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ் ணன், சபாநாயகர் அப்பாவு, மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.,க்கள் விஜய் வசந்த், ஞானதிரவியம், நாகர் கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.,க்கள் தளவாய் சுந்தரம், பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் எம்.பி.,க்கள் ஹெலன் டே விட்சன், நாஞ்சில் வின்சென்ட், முன்னாள், எம்.எல்.ஏ., ஆஸ்டின் மற்றும் பால பிரஜாபதி அடிகளார்,


    ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், குமரி மாவட்ட திருவட்பேரவை நிர்வாகிகள், பல்சமய பிரதிநிதிகள், குமரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களின் வசதி க்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டார், குழித்துறை மறை மாவட்டங்களின் பிஷப்புகள் தலைமையில், அருட்பணியாளர்கள், பொது நிலையில் செய்திருந்தனர்.

    ×