search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதை கண்டித்து போராட்டம்
    X

    ஆரல்வாய்மொழியில் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதை கண்டித்து போராட்டம்

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே அரசு தொழிற்சாலை கன்யா ஸ்பின் கூட்டுறவு நூற்பாலை.
    • தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆலையில் இதுவும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே அரசு தொழிற்சாலை கன்யா ஸ்பின் கூட்டுறவு நூற்பாலை.

    தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆலையில் இதுவும் ஒன்று. இந்த ஆலையில் 94 நிரந்தர தொழிலாளர்களும், தினக்கூலியாக 206 பேரும் வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஆைல நிர்வாகம் பஞ்சு விலை அதிகரிப்பை காரணம் காட்டி பாதிக்குமேல் எந்திரங்களை நிறுத்திவிட்டது.

    மேலும் தொழி லாளர்களை விடுப்பு களை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறி வேலைக்கு வரவேண்டாம் என கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் குறைந்த சம்பளத்துக்கு படிப்படியாக வடநாட்டு வாலிபர்களை வேலைக்கு அமர்த்த முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

    இதற்காக சிலருக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., அ.தி.மு.க., சி.ஐ.டி.யு .தொழிற்சங்கம் ஆகியவை ஆலைக்கு முன்பு சி.ஜ.டி.யு. சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் தி.மு.க. தொழில் சங்க பொதுச்செயலாளர் மகாராஜாபிள்ளை, மாவட்ட தலைவர்மாடசாமி மாநில தி.மு.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் இளங்கோ, அழகம்பெருமாள், நம்பி ராஜன் சி.ஐ.டி.யு. சங்க பொறுப்பாளர் வடிவேல், குமார், தாலுகா செயலாளர் மிக்கேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாசானம் ஜெயக்குமார் உள்பட பலர் கொட்டும் மழையில் ஆண்களும், பெண்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் அறைக்கு முன்பு அவர்களை வெளியேறும் வரை காத்திருப்புப் போராட் டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை சரியான முறையில் வழங்க வேண்டும், வடமாநில தொழிலாளர்கள் உள்ளே புகுவதை நிறுத்த வேண்டு மென்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×