search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் பதிவு"

    • 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடக்கிறது
    • தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    தபால்துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், தக்கலை தலைமை தபால் நிலையம், அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி, அருமனை, ஆசாரிபள்ளம், அழகியபாண்டியபுரம், அழகப்பபுரம், பூதப்பாண்டி, குளச்சல், ஈத்தாமொழி, இடைக்கோடு, களியக்காவிளை, கன்னியாகுமரி, காப்புக்காடு, கருங்கல், காட்டாத்துறை, கொல்லங் கோடு, கோட்டார், கொட்டாரம், குலசேகரம், குழித்துறை, மணவா ளக்குறிச்சி, மார்த் தாண்டம், மேக்காமண்டபம், முளகுமூடு, நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதி, நாகர்கோவில் டவுண், நாகர்கோவில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், நெய்யூர், பாலப்பள்ளம், பளுகல், புதுக்கடை, புத்தளம், எஸ்.டி.மாங்காடு, சுசீந்திரம், திக்கணங்கோடு, திருவிதாங் கோடு, வெட்டூர்ணிமடம், வடிவீஸ்வரம் உள்ளிட்ட 40 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் சிறப்பு முகாம் வருகிற 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    காலை முதல் மாலை வரை இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சேவை தொடர்பான ஏதேனும் புகார்களுக்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர், கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் என்ற முகவரியிலும், 04652-232032, 232033 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னிமலைபாளையம் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வருகின்றன.
    • திருப்பி அனுப்பபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி துணை அஞ்சல் நிலையத்திற்கு உட்பட்டு அவரப்பாளையம், நொச்சிப்பாளையம், குப்பாண்டம்பாளையம், வீரபாண்டி, பலவஞ்சிபாளையம், வித்யாலயம்,கரைப்புதூர், சென்னிமலைபாளையம் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வருகின்றன.

    இந்த அஞ்சல் நிலையத்தில் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய காலை 8மணிமுதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    காலை 9மணிக்கு அஞ்சல் நிலையம் திறக்கப்படுகிறது. ஆனால் காலை 10.30 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதனால் வேலைக்கு செல்லாமல் காலையிலிருந்து காத்து நிற்கும் பொதுமக்கள் கவலை அடைகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண அஞ்சல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • முதியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர்.
    • 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் முதியோர் உள்ளிட்ட மாற்றுதிறனாளிகளுக்கு கைரேகை பதிவாகாமல் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் பயன்பெறும் வகையில் அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடந்தது. இதில் முதியோர் உள்ளிட்டநூற்றுக்கு மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர். 10.30 மணி அளவில அலுவலர் வந்து 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அனைவரும் நாங்கள் காலை 8 மணிமுதல் இதற்காக காத்து நிற்கிறோம். அனைவருக்கும் இன்றே பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து ஆதார் பதிவு அலுவலர் கூறுகையில் ,ஒரு நபருக்கு முழுமையாக பதிவு செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது. இரவு 8 மணி வரை எவ்வளவு பேருக்கு பதிவு செய்ய முடியுமோ அதை செய்யஉள்ளதாக கூறினார்.

    ×