search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாளால்"

    • நாமக்கல் வசந்தபுரம் நாகராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் (வயது 52). இவர் அதே பகுதியில் ெசாந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • அருள் லாரியில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கோபாலின் கையை வெட்டினார். இதனால் கோபால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வசந்தபுரம் நாகராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் (வயது 52). இவர் அதே பகுதியில் ெசாந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கோபால் (42) என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பருப்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்து நேற்று இரவு லாரியை வீட்டின் முன்பு சாலையில் நிறுத்தி இருந்தார்.

    அரிவாள் வெட்டு

    அப்போது அந்த வழியாக லாரியில் வந்த அருள், கோபாலிடம் லாரியை ஓரமாக நிறுத்தாமல் ஏன் இடையூறாக நிறுத்தி இருக்கிறாயே, நான் எப்படி போவது என கூறி யுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள் லாரியில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கோபாலின் கையை வெட்டினார். இதனால் கோபால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

    கைது

    இதையடுத்து கோபாலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் நாமக்கல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்தார்.

    • கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
    • இவர் பல முறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார்

    கன்னியாகுமரி:

    நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் சுடலைகோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி அபிஷா (வயது 21). இவர் பறக்கையில் உள்ள ஒரு பாங்கியில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று மாலை அபி ஷாவை அழைத்துச் செல்வதற்காக, தினேஷ் குமார் காரில் பறக்கை வந்தார். அவர் வடக்கு செட்டிதெரு பகுதியில் காத்திருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் என்ற பறக்கை மணிகண்டன் (37) அங்கு வந்தார்.

    அவர், தினேஷ்குமாரிடம் ரூ.5 ஆயிரம் கேட்டு கார் சாவியை எடுத்ததோடு அபிஷாவை அவதூறாக பேசியதாகவும் தெரிகிறது. மேலும் இதனை தட்டிக் கேட்ட சுசீந்திரம் அருகே உள்ள தேரூரை சேர்ந்த இந்திரகுமார் (36) என்ப வரை மணிகண்டன் அரிவா ளால் தலையில் வெட்டி உள்ளார்.

    படுகாயம் அடைந்த இந்திரகுமார் சுசீந்திரம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்ப ள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அபிஷாவின் உறவினருடைய காரை மணிகண்டன் எடுத்துச் சென்றதாகவும் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் அபிஷா புகார்செய்தார்.

    புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் ராபர்ட் செல்வசிங் ஆகியோர் விசாரணை நடத்தி மணி கண்டன் என்ற பறக்கை மணிகண்டன் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணிகண்டன் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப் பிடத்தக்கது. இவர் பல முறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×