search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பேருந்து"

    • வெளிநாட்டு பயணிகளையும் கவரக்கூடிய அடிப்படையில் தமிழ்நாடு சுற்றுலா போக்கு வரத்துக் கழகத்துடன் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்கள் இணைக்கப்பட வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசவும் திருச்சியில் 3 நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகதொழிலா ளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 20 ஆயிரத்து 304 பஸ்கள் உள்ளன. இவற்றில் 19, 290 பஸ்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

    தற்போது நடைபெற்ற 14 -வது ஊதிய ஒப்பந்த த்தில் மூன்றாண்டுகால ஒப்பந்தம் என்பது நான்காண்டு காலமாக நீட்டிக்கப்ப ட்டுள்ளது. சம்பள உயர்வு குறைவாகவே உள்ளது. 2015ம் ஆண்டு முதல் உயர்ந்துவிட்ட பழைய புதிய அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியத்துடன் இணைக்கப்படவில்லை.

    இது தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசவும் திருச்சியில் 3 நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது. நாளை மாலை பேரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 3, 4 ம் தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள மஹாலில் நடைபெறுகிறது .

    இந்த மாநாட்டில் பஸ்க ளில் பயன்படுத்தப்படும் டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருளை சுற்றுச்சூ ழலுக்கு கேடு விளைவிக்காத மரபுசாரா எரிபொருளை பயன்படுத்துவது, தமிழ்நா ட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    வெளிநா ட்டு பயணிகளையும் கவர க்கூடிய அடிப்படையில் தமிழ்நாடு சுற்றுலா போக்கு வரத்துக் கழகத்துடன் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்கள் இணைக்கப்பட வேண்டும் .

    இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ஏ.ஐ.டி.யூ.சி தமிழ்மாநில குழு தலைவர் சுப்பராயன்எம்.பி, தமிழ் மாநில குழு பொதுச் செயலாளர் மூர்த்தி , போக்குவரத்து கழக சம்மேளனதலைவர், முன்னாள் எம்எல்.ஏ. ஆறுமுகம், பொதுச்செயலாளர் ஆறுமுகம் , துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தபோது தடுமாற்றத்துடன் பஸ் சென்றது.
    • சில வளைவுகளில் விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது. இதனால் பயணிகள் மனதில் திக்..திக்... பயத்துடன் இருந்தனர்.

    வந்தவாசி:

    காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரிக்கு நேற்று இரவு சுமார் 12 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். காஞ்சிபுரம் பஸ் நிலையத்திலேயே கண்டக்டர் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் வழங்கினார். பின்னர் அவரே பஸ்சை ஓட்ட தொடங்கினார்.

    காஞ்சிபுரத்திலிருந்து பஸ் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தபோது தடுமாற்றத்துடன் பஸ் சென்றது. சில வளைவுகளில் விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது. இதனால் பயணிகள் மனதில் திக்..திக்... பயத்துடன் இருந்தனர். டிக்கெட் கொடுத்தவரே பஸ்சை ஓட்டி வந்ததால் அதிலிருந்த பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதேபோன்று பஸ்சை ஓட்டி வந்தால் பெரும் விபத்து ஏற்படும் என பயணிகள் அச்சமடைந்தனர்.

    நள்ளிரவு சுமார் 1.50 மணிக்கு வந்தவாசி கோட்டை மூலையில் பஸ் வந்தது. அப்போது பயணிகள் அனைவரும் பஸ்சை உடனடியாக நிறுத்த கோரி சத்தம் போட்டனர். அந்த இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது.

    அப்போதுதான் அவர்களுக்கு பஸ்ஸை ஓட்டி வந்தது பஸ்சின் கண்டக்டர் என தெரியவந்தது.

    மேலும் அந்த பஸ்சின் டிரைவர் குடிபோதையில் அதே பஸ்சில் ஒரு இருக்கையில் நிலை மறந்து தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கு மேல் அந்த பஸ்சில் பயணம் செய்ய முடியாது. வேறு பஸ்சில் செல்கிறோம் எனக்கூறி பயணிகள் அனைவரும் கீழே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் நடுரோட்டில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பயணிகளை சமாதானம் செய்தனர்.

    விசாரணையில் அரசு பஸ் டிரைவர் தரனேந்திரன் காஞ்சிபுரத்தில் மது குடித்தார். இதனால் சுயநினைவு நினைவை இழந்து பஸ்சில் இருக்கையில் தூங்கிவிட்டார்.

    இதனால் கண்டக்டர் ஹோலிப் பேஸ் பஸ்சை ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் குடிபோதையில் இருந்த டிரைவர் மற்றும் பஸ்சை ஓட்டி வந்த கண்டக்டரை போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.

    பஸ் திண்டிவனம் போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதுகுறித்து திண்டிவனம் போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணிகளை போலீசார் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வந்தவாசியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் பார்சல் வந்து கொண்டு இருக்கிறது.
    • பொதுமக்கள் எளிதாக சென்று பார்சல் அனுப்ப பஸ் நிலையங்களில் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் சேவை கடந்த 3-ந்தேதி தொடங்கப்பட்டது. அந்த போக்குவரத்து கழக 22 டெப்போவில் இதற்கு பதிவு செய்ய வேண்டும்.

    வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், விவசாயிகள், உணவுப்பொருட்கள் மட்டுமின்றி தங்கள் பகுதியில் விளையும் வேளாண் பொருட்களையும் குறைந்த கட்டணத்தில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் பார்சல் வந்து கொண்டு இருக்கிறது. அண்டை மாநிலத்திற்கும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. தினமும் 30 பார்சல்கள் அரசு பஸ்களில் செல்கின்றன. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை தினமும் வருவாய் தற்போது கிடைக்கிறது.

    பார்சல் அனுப்புவதற்காக வியாபாரிகள் பஸ் டெப்போவை தேடி சென்று பணம் கட்டுவதில் பல்வேறு சிரமம் ஏற்படுவதை அறிந்து அதனை எளிதாக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது வரையில் 22 டெப்போக்களில் பார்சலுக்கான பணம் கட்டி அனுப்பப்பட்டது. இதற்காக நீண்ட தூரம் செல்வதால் சிரமம் ஏற்படுகிறது.

    வியாபாரிகள் பார்சலை எளிதாக அனுப்ப வசதியாக 75 பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்டர்களில் பார்சல் புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

    பொதுமக்கள் எளிதாக சென்று பார்சல் அனுப்ப பஸ் நிலையங்களில் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள 75 பஸ் நிலையங்களில் பார்சல் அனுப்பும் வசதி உள்ளது. முன்பதிவு கவுண்டரில் பணம் செலுத்தி இனி பார்சலை அனுப்பலாம்.

    இதுதவிர செல்போனில் ஆப் மூலமும் எந்த பகுதியில் இருந்தும் பணம் செலுத்தி பார்சல் அனுப்பும் வசதி விரைவில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விரைவு பஸ்களில் பயணத்திற்கு முன்பதிவு செய்வது போல பார்சல் சேவைக்கும் எந்த இடத்தில் இருந்து எங்கு போக வேண்டும், பார்சலின் எடையை குறிப்பிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தி எந்த பகுதியில் இருந்தும் பொருட்களை அனுப்பலாம்.

    இதுதவிர விரைவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் கூரியர் சர்வீஸ் திட்டமும் மாற்றி செயல் படுத்தப்படுகிறது. நகரப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இந்த சேவையை அளிக்க முடியும்.

    உதாரணத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து கூரியர் பார்சல் சேவை சென்னைக்கு ஒருவர் தொடங்க முன்வரும் போது, அந்த நகரில் உள்ள அனைத்து தபால்களையும் சேகரித்து அரசு விரைவு பஸ் வழியாக சென்னைக்கு அனுப்புவார். சென்னையில் அவரது நண்பரோ அல்லது ஊழியரோ அதனை பெற்றுக்கொண்டு வீடுகள், நிறுவனங்களுக்கு நேரடியாக வினியோகிக்கலாம் அல்லது கோயம்பேடு பஸ் நிலையத்திலேயே டெலிவரி செய்யலாம்.

    இதுபோல ஒவ்வொரு நகரங்களிலும் கூரியர் சேவை தொடங்க முன் வரும் இளைஞர்களுக்கு அரசு விரைவு பஸ் பாலமாக இருந்து இந்த சேவையை வழங்கும். தினமும் அரசு பஸ்கள் மூலமாக பல்வேறு நகரங்களில் இருந்து கூரியர் தபால் அனுப்ப இளைஞர்கள் முன்வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆனால் பேருந்தின் வேகம் குறையாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
    • இதற்கிடையே ஒருசிலர் பேருந்தில் இருந்து குதிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மேலும் பலர் பேருந்தின் பின் பகுதிக்கு சென்றுவிட்டனர். ஆனால் அவர்களுக்கு தைரியம் கூறிய டிரைவர் சகாய சவுரிமுத்து, பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அதே வேளையில் சாலையில் சென்று கொண்டிருப்போர் மீது மோதாமல் இருக்கும் வகையிலும் கோர்ட்டு அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவின் சுவற்றில் மோதி பஸ்சை நிறுத்தினார்.

    திருச்சி :

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தில்லை நகர் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் இன்று காலை 11 மணியளவில் திருச்சி நீதிமன்றம் அருகில் எம்ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பேருந்தின் வேகத்தை குறைப்பதற்காக பணியில் இருந்த டிரைவர் சகாய சவுரிமுத்து பிரேக்கை காலால் அழுத்தினார். ஆனால் பேருந்தின் வேகம் குறையாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பிரேக் மீது ஏறி நின்று பார்த்தும் பஸ் நிற்கவில்லை. இதற்கிடையே முன்வரிசையில் அமர்ந்து பயணித்த டிரைவரின் செயல்பாட்டால் குழப்பமும், அச்சமும் அடைந்தனர். அப்போது கண்டக்டர் அருகில் வந்து விபரம் கேட்டபோதுதான், பேருந்தில் பிரேம் செயலிழந்து விட்டதாகவும், பஸ்சை நிறுத்த முடியவில்லை என்ற தகவலும் கிடைத்தது.

    இதைக்கேட்ட பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சென்று கொண்டிருந்த பேருந்து என்ன ஆகப்போகிறதோ, எப்படி நிற்கப்போகிறதோ என்ற திக், திக் மனதுடன் உயிரை கையில் பிடித்தவாறு பயணிகள் அமர்ந்திருந்தனர். இதற்கிடையே ஒருசிலர் பேருந்தில் இருந்து குதிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மேலும் பலர் பேருந்தின் பின் பகுதிக்கு சென்றுவிட்டனர்.

    ஆனால் அவர்களுக்கு தைரியம் கூறிய டிரைவர் சகாய சவுரிமுத்து, பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அதே வேளையில் சாலையில் சென்று கொண்டிருப்போர் மீது மோதாமல் இருக்கும் வகையிலும் கோர்ட்டு அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவின் சுவற்றில் மோதி பஸ்சை நிறுத்தினார்.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் இரண்டு பயணிகள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு சிறுசிறு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் பஸ்சை மீட்டு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு விரைவு பஸ்களில் குறைவான வாடகையில் 150 கிலோ வரை கொண்டு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது.
    • லாரியில் பொருட்களை அனுப்பினால் ஒன்று அல்லது 2 நாட்கள் கழித்து தான் கிடைக்கும்.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் பார்சல் சர்வீஸ் தொடங்கப்பட உள்ளது. நீண்ட தூர பஸ் சேவையை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அளித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 1100 விரைவு பஸ்கள் இயக்கப் படுகின்றன.

    போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பார்சல் சேவையை தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களில் ஏற்கனவே இந்த சேவை கிடைக்கிறது.

    அதுபோல அரசு விரைவு பஸ்களில் குறைவான வாடகையில் 150 கிலோ வரை கொண்டு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளையக்கூடிய விவசாய பொருட்கள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை விவசாயிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல அரசு விரைவு பஸ்களை பயன்படுத்தலாம்.

    இதற்கான கட்டணம் கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக கிளை மேலாளர்களிடம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் பார்சல் சேவைக்கு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் கூரியர் சேவையும் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்கு பிறகு இச்சேவை தொடங்கும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    லாரி, தனியார் பஸ்களை விட அரசு விரைவு பஸ்களில் பொருட்களை கொண்டு செல்ல வாடகை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாரியில் பொருட்களை அனுப்பினால் ஒன்று அல்லது 2 நாட்கள் கழித்து தான் கிடைக்கும். அரசு விரைவு பஸ்களில் ஒரே நாளில் கூட பெறும் வசதி உள்ளது. இரவில் ஏற்றி மறுநாள் காலையில் பஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    இதேபோல கூரியர் சேவையும் தொடங்கப்பட உள்ளது. முதலில் சென்னை, மதுரை, திருச்சி நகரங்களுக்கு மட்டும் கூரியர் சேவை அளிக்கப்படும். அதன் பின்னர் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். இன்று பெறப்படும் தபால் கவர்கள் மறுநாள் பஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தால் சுவிக்கி, சுமோட்டா மூலம் வீடுகளுக்கே கடிதங்கள், உறைகளை (கவர்) வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • பல்வேறு பிரபலமான பொருட்கள் அனைத்தையும் இதன் மூலம் எளிதாக அனுப்பலாம்.

    சென்னை :

    தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில், குறுகிய நேரத்தில் அரசு விரைவு பஸ்களை விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகளின் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

    குறைந்த அளவிலான பொருள்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவில் அனுப்புவதற்கு ஏதுவாக பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாள்தோறும் அனுப்ப வேண்டிய பொருள்களை 2 ஊர்களுக்கு இடையே அனுப்பும் வகையில் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

    இந்த சேவை வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாதம் முழுவதும் பஸ்களில் உள்ள சரக்கு வைக்கப்படும் பெட்டிகளை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோகித்து கொள்ளலாம்.

    சரக்கு பெட்டிகளில் புகழ்பெற்ற நெல்லை அல்வா, ஊத்துக்குளி வெண்ணெய், தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரபலமான பொருட்கள் அனைத்தையும் இதன் மூலம் எளிதாக அனுப்பலாம். சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கு அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம்.

    பிற ஊர்களிலில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடை கொண்ட பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்தவகையில் திருச்சி (331 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, மதுரை (459 கிலோ மீட்டர்) தினசரி ரூ.300, மாதம் ரூ.9 ஆயிரம், கோவை (510 கிலோ மீட்டர்) தினசரி ரூ.330, மாதம் ரூ.9 ஆயிரத்து 900, சேலம் (341 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நெல்லை (622 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, தூத்துக்குடி (601 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, செங்கோட்டை (645 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, நாகர்கோவில் (698 கிலோ மீட்டர்) தினசரி ரூ.420, மாதம் ரூ.12 ஆயிரத்து 600.

    கன்னியாகுமரி (740 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, மார்த்தாண்டம் (728 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி (428 கிலோ மீட்டர்) தினசரி ரூ.270, மாதம் ரூ.8 ஆயிரத்து 100, ஓசூர் (317 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நாகப்பட்டினம் (353 கிலோ மீட்டர்) தினசரி ரூ.240, மாதம் ரூ.7 ஆயிரத்து 200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல்களை அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினார்கள்.

    தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் அரசு பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதிய கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Karimnagaraccident
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று வராங்கல் மாவட்டத்திலிருந்து கரீம்நகருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தானது கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள செங்கர்லா கிராமத்திற்கு அருகில் செல்லும் போது எதிரே வேகமாக வந்த லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் கே.சந்திரசேகர் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் எனஉறுதியளித்தார். #Karimnagaraccident
    ×