search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக போராட்டம்"

    • அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருச்சி:

    மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் கழக அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பெரியார் திடலில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையிலும் புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மு. பரஞ்சோதி தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட ஆர்ப்பாட்டங்களில் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு ரூ.90 ஆயிரம் வரை கிடைக்கும்.
    • தற்போது மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் மூலம் 3 வருடத்திற்கு ரூ.36,000 மட்டும்தான் கிடைக்கும்.

    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தருமபுரியில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

    கடந்த 10 வருடங்களாக ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சி காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    ஆனால் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி என்று ஒவ்வொன்றாக உயர்த்தப்பட்டு வருகிறது. பொய்யான வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டனர்.

    ஆனால் தருமபுரி மக்கள் ஏமாறவில்லை. இங்குள்ள 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

    தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு ரூ.90 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் தற்போது மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் மூலம் 3 வருடத்திற்கு ரூ.36,000 மட்டும்தான் கிடைக்கும்.

    ஜெயலலிதா செயல்படுத்திய ஒவ்வொரு நலத்திட்டங்களாக முடக்கி வருகின்றனர். விரைவில் 100 யூனிட் இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
    • அ.தி.மு.க. அரசு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தி.மு.க. அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    அ.தி.மு.க. அரசு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது.

    உதாரணமாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், கிராமப்புறங்களில் பெண்களை மேம்படுத்த ஆடு, மாடு, கோழிகள் வழங்கும் திட்டம், சுகாதாரத்துறையில் மினி கிளினிக் திட்டம் என பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது.

    இப்படி இருக்கும் பட்சத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இனிவரும் காலங்களில் தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கும் என இறுமாப்புடன் பேசி வருகிறார். அவருக்கு இந்த ஆர்ப்பாட்டம் காதுகளில் இடியாக விழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான்.
    • தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான்.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்-அமைச்சராகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். 15 மாத கால சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒரு துளி நன்மையும் கூட ஏற்படவில்லை.

    வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல். சொத்து வரி உயர்வுதான் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ். திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    ரூ.1000 வீட்டு வரி செலுத்தியவர்கள் இன்று ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டிய அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கூரை வீட்டுக்கு கூட வரி போட்டு மக்களை துன்புறுத்தும் அரசுதான் தி.மு.க. அரசு.

    32 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களும், நன்மைகளும் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கியது அ.தி.மு.க.தான்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. தான். ஏரியில் இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்து அவர்களுக்கு உதவியது அ.தி.மு.க.

    ஈசூர், வள்ளிபுரம், வாயலூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய சீவரத்தில் தடுப்பணை கட்டி உள்ளோம்.

    அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் பாசனம் அமைத்து கொடுத்து உள்ளோம்.

    தமிழகத்தில் 52 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பாடாய்படுத்துகிறது தி.மு.க. அரசு. மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது? 500 யூனிட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் கூடுதலாக மின்சார கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மக்களை மின் கட்டணம், சொத்து வரி உயர்வின் மூலம் கொடுமைப்படுத்துகிறார்கள்.

    தமிழகத்தின் நிதிச்சுமையை ஏழை, எளிய மக்களின் தலையில் கட்டி துன்புறுத்துகிறார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். மின்சார கட்டண உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

    ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா கிளினிக்குகளை மூடியவர்தான் ஸ்டாலின். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்படும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படி இருந்தது என்று அதை வாங்கிய மக்களுக்கு தெரியும். ஒழுகிய வெல்லமும், இலவம் பஞ்சு கொட்டையும்தான் பொங்கல் தொகுப்பில் இருந்தது. நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்லி மக்களையும், மாணவர்களையும் தி.மு.க. ஏமாற்றியது.

    நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான். இன்றைக்கும் நீட் தேர்வை உண்மையாக எதிர்க்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு 569 மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறி உள்ளது.

    தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான். போதைப் பொருள் புழக்கத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தி.மு.க. அரசு தடுக்க தவறி உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறிதான் நடக்கிறது. போதைப் பொருளை தடுக்காமல் தமிழக காவல் துறை தூங்குகிறதா? போதைப் பொருளை விற்பனை செய்வதே தி.மு.க.வினர் என்பதால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லையா?

    ஆன்லைன் ரம்மியை சட்ட ரீதியாக தடை செய்தது அ.தி.மு.க. அரசுதான். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய 15 மாதங்களாக குழு மட்டுமே போட்டுக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய யாராவது மக்களிடம் கருத்து கேட்பார்களா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அேமாகமாக நடக்கிறது.

    தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து உதவியது அ.தி.மு.க. ஆனால் முதியோர் உதவித்தொகையை தடுத்து அவர்களை திமு.க. வஞ்சித்து வருகிறது. 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும் தமிழகத்தில் குறைக்காதது ஏன்?

    அ.தி.மு.க. நன்றாக இருக்கிறது. யாரும் அறிவுரை கூற தேவை இல்லை. தொண்டனாக இருந்து தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண விவசாயி நான். 4 ஆண்டு 2 மாதம் ஆட்சி, கட்சியை அம்மா வழியில் கட்டுக்கோப்பாக நடத்தியதால் தொண்டர்களின் ஆதரவோடு தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையடுத்து செங்கல்பட்டு டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
    • வாகனங்கள் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு கிழக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்காக பிரமாண்ட மேடை போடப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கனிதாசம்பத், தண்டரை மனோகரன், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், குமரவேலு, நகர செயலாளர் ரவிக்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையடுத்து செங்கல்பட்டு டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வாகனங்கள் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கட்சி மாவட்டங்கள் 9 உள்ளன. இதன்படி 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என். ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கமலக்கண்ணன், சாமிநாதன், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சேக்கலி, சைதை சுகுமார் மற்றும் வெற்றிவேல், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, வைகுண்டராஜன், இனியன், மாவட்ட, வட்ட பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நிர்வாகிகள் கணேசன், சீனிவாச பாலாஜி, நித்யானந்தம், வியாசை இளங்கோ, பாஸ்கர், ஜனார்த்தனன், சேவியர், லயன் ஜி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் செம்பியம் மின்சார அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருமங்கலம் மோகன், கோகுல், சாரதி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா தலைமை தாங்கினார். ராயபுரம் மனோ முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் துறைமுகம் எம். பயாஸ், ஆவின் அருள் வேல், எம். கண்ணன், எம்.சரவணன், எம்.பத்மநாபன், கே. பாலசுப்பிரமணியம், வெற்றிலை மாரிமுத்து, சந்தான கிருஷ்ணன், அருள்வேல், கண்ணன், சரவணன், சுரேஷ்பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் தி.நகரில் மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா கலந்து கொண்டார்.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், எம்.கே.சிவா, புஷ்பா நகர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் பட்டாளத்தில் மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் சோழிங்கநல்லூரில் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரும்பாக்கம் ராஜசேகர் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

    தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் தலைமையில் அடையார் டெலிபோன் எக்சேஞ்ச் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் போரூர் காரம்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் பெஞ்சமின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    திருப்பூரில் குமரன் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகிலும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    மாநில அம்மாபேரவை இணை செயலாளர் காந்தி, தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் மருத்துவ கல்லூரி பகுதி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொண்டர்களால் கோவிலாக மதிக்கப்படும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    • அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வதுண்டு. அதன்படி இந்த செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை நீக்குவதும், பின்னர் சேர்ப்பதும் போன்ற அறிக்கையை தினந்தோறும் வெளியிட்டு வருகிறார். ஆனால் அதைப்பற்றி அ.தி.மு.க. தொண்டர்களுக்கோ, நிர்வாகிகளுக்கோ கவலை இல்லை. அவருக்கு கொடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

    தொண்டர்களால் கோவிலாக மதிக்கப்படும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வதுண்டு. அதன்படி இந்த செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது.

    இதன்மூலம் அ.தி.மு.க.வுக்கு யார்? தீங்கு செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் ஆன்மா தண்டனை வழங்கும். தி.மு.க. ஆட்சியில் சாமானிய மக்கள் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்.

    இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வால் தோல்வி அடைந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின்பு சுதாரித்துக்கொண்ட சீனிவாசன், நான் மாற்றி கூறி விட்டேன். அவர் நீட் தேர்வால் உயிரிழக்கவில்லை என்று சமாளித்து பதில் அளித்தார்.

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
    • தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், தலைமையிலும், கோவில்பட்டியில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கோவை:

    மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அ.தி.மு.க. சார்பில் சென்னையை தவிர தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடத்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

    கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., தலைமையிலும்

    மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., தலைமையிலும், உடுமலையில் முன்னாள் அமைச்சர் கே. ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கடலூரில் மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமையிலும், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், சி.வி.சண்முகம் எம்.பி. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், தலைமையிலும், கோவில்பட்டியில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தென்காசியில் புது பஸ் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையிலும் கடையநல்லூரில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் புறநகர் மாவட்ட செயலாளரும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் தலைமையிலும், சேலத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மதுரை முனிச்சாலை சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை கருப்பாயூரணியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையிலும் மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி. உதய குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையிலும், காரியாபட்டியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சிவகங்கையில் செந்தில் நாதன் தலைமையிலும், ராமநாதபுரத்தில் எம்.ஏ. முனியசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பொருளாளரும், மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். பழனி பஸ்நிலையம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.

    குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தக்கலையில் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குமரி கிழக்கு மாவட்டத்தில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    தமிழகம் முழுவதும் இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தக்கலையில் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தக்கலையில் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமரி கிழக்கு மாவட்டத்தில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    • விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டு கொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.

    விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாவட்டத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டதால் தேனியில் நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    தேனி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டதால் தேனியில் நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதனால் காரணமாக தேனியில் நாளை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் தேனியில் மட்டும் தொண்டர்கள் ஒருங்கிணைப்பு இல்லாததால் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

    • சென்னையில் மட்டும் 27-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

    சென்னையில் மட்டும் 27-ந் தேதி (புதன்கிழமை) அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    27-ந் தேதி காலை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க திரண்டு வருமாறு சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சென்னையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை முழுவதிலும் இருந்து அ.தி.மு.க.வினரை திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    ×