search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    மின்கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
    • தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், தலைமையிலும், கோவில்பட்டியில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கோவை:

    மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அ.தி.மு.க. சார்பில் சென்னையை தவிர தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடத்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

    கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., தலைமையிலும்

    மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., தலைமையிலும், உடுமலையில் முன்னாள் அமைச்சர் கே. ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கடலூரில் மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமையிலும், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், சி.வி.சண்முகம் எம்.பி. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், தலைமையிலும், கோவில்பட்டியில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தென்காசியில் புது பஸ் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையிலும் கடையநல்லூரில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் புறநகர் மாவட்ட செயலாளரும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் தலைமையிலும், சேலத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மதுரை முனிச்சாலை சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை கருப்பாயூரணியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையிலும் மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி. உதய குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையிலும், காரியாபட்டியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சிவகங்கையில் செந்தில் நாதன் தலைமையிலும், ராமநாதபுரத்தில் எம்.ஏ. முனியசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பொருளாளரும், மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். பழனி பஸ்நிலையம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.

    குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தக்கலையில் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குமரி கிழக்கு மாவட்டத்தில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    தமிழகம் முழுவதும் இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×