search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசுரவதம்"

    • மகேஸ்வரியை “குமாரி” வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.
    • குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.


    வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

    பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

    திதி : பிரதமை

    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

    பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

    மகேஸ்வரி அலங்காரம்

    நவராத்திரி முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான தேவியை மகேஸ்வரியாக வழிபட வேண்டும்.

    மகேஸ்வரியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் "குமாரி" வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.

    இந்த "குமாரி" தேவிக்கு, மல்லிகை விசேஷம்.

    எனவே மல்லிகை அர்ச்சனை உகந்தது.

    அம்பாள், சங்கீதப்பிரியை ஆயிற்றே... எனவே, தினமும் சுவாரஸ்யமான சங்கீதம் வீட்டில் தவழ்ந்தால் சுபிட்சம் பெருகும்.

    முதல் நாளில் தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளை பாடினால் விசேஷம்.

    குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.

    பிரதமை திதியில் இரண்டு வயதுக் குழந்தையை (தன் வீட்டுக் குழந்தை அல்ல) அழைத்து வந்து அவளை அன்னை குமாரியாகவே பாவித்து, அவளுக்கு ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த ஆடை, அணிகலன்களைத் திரும்ப வாங்கி விடக்கூடாது.

    தேவி பாகவதத்தின் முதல் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதித் துதித்தால் குமாரி தேவியின் அருள் பரிபூரணமாய்க் கிட்டும்.

    பிரதமை திதியில் நாம் வணங்கும் குமாரி தேவி நமக்கு குறைவற்ற வாழ்வு தருவாள்.

    குழந்தையின் கள்ளம், கபடமற்ற மன நிலை நமக்கு வந்தால் தான் இறைவனை நாம் அடைய முடியும்.

    மகேஸ்வரி சிவனின் சக்தி. வெள்ளை நிறம் கொண்டவள்.

    இவளுக்கு ஐந்து முகம் உண்டு.

    • முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.
    • இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள்.

    முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.

    அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இந்த ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும்.

    பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

    இனி வரும் பதிவுகளில் இந்த 9 நாட்களும் அன்னையை எப்படி வழிபட வேண்டும் என்பதை காணலாம்....

    • பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்துள்ளாள்.
    • எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, முதன்மை வழிபாடாக பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    பராசக்தியை வழிபட்டால் எல்லா கடவுள் அவதாரங்களையும் வழிபடும்போது என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அத்தனை பலன்களும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பராசக்தியான அம்பிகை ஒருத்திதான்.

    ஆனால் அவள் பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்து நல்வழி காட்டியுள்ளாள்.

    அதை பிரதிபலிக்கவே ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    நவ என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு.

    ஒன்பது நாட்கள் இரவில் அம்பிகையை வழிபடுவதே நவராத்திரி ஆகும்.

    • உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.
    • பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகிஷாசுரன் என்னும் கொடூரமான அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

    அவன் பராசக்தியை நோக்கி தவம் இருந்து அன்னையிடம் ஆற்றல்மிகு பல வரங்களைப் பெற்றான்.

    மகிஷாசுரன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை செய்தான்.

    தேவர்களும் & முனிவர்களும் பார்வதியை நோக்கி தவம் புரிந்தனர்.

    பார்வதி தேவியும் அவர்களுக்கு காட்சி அளித்தாள்.

    அவர்களின் குறைகளைக் களைய கருணை உள்ளம் கொண்டாள்.

    தகுதியற்ற ஒரு அரக்கனுக்கு தேவையற்ற வரங்களை வழங்கிவிட்டோம் என்று வருந்தினாள்.

    ஒரு முறை வழங்கி விட்ட வரங்களைத் திருப்பிப் பெறுதல் மரபன்று.

    இருப்பினும் தர்மத்தின் பொருட்டு தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தாள்.

    உடனே பார்வதிதேவி, லலிதை என்னும் காமேஸ்வரியாக அவதாரம் எடுத்து ஈஸ்வரனைத் திருமணம் புரிந்து கொண்டாள்.

    ஈசனிடம் அஸ்திரங்களைப் பெற்று மகிஷாசுரனை எதிர்த்து போருக்கு புறப்பட்டாள்.

    மகிஷாசுரன் இதனை அறிந்து அன்னையை எதிர்க்க தனது தம்பிமார்களான விசக்கனையும், விஷக்கரனையும் ஏவினான்.

    உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.

    அந்த இரு அசுரர்களையும் விழுங்கினாள்.

    பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    மகிஷாசுரன் எவ்வளவோ சாமர்த்தியமாக மாயா ஜாலத்துடன் போர் புரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியில் உறைந்தான்.

    ஆக்ரோஷத்துடன் எழுந்த துர்க்காதேவி மகிஷாசுரனின் தலையைத் துண்டித்து வதம் செய்தாள்.

    இதனைக் கண்ட தேவர்களும் & முனிவர்களும் மகிஷாசுரமர்த்தினி என்று துர்க்கையை வாயார போற்றி துதித்தனர்.

    இதனைக் குறிப்பது தான் நவராத்திரி என்பதாகும்.

    ×