search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth attack"

    மூலகுளத்தில் மதுக் கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தரையர் பாளையம் பாப்பாத்தி நகரை சேர்ந்தவர் ஜோதி (வயது 39). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை மூலகுளம் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் அமர்ந்து மது அருந்தினார்.

    அப்போது எதிர் திசையில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ் (22) உள்ளிட்ட 4 பேர் குடிபோதையில் ஜோதியிடம் தகராறு செய்தனர்.

    இதனை தட்டிக்கேட்ட ஜோதியை அவர்கள் சரமாரியாக தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து ஜோதி ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்.

    பாபநாசம் அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாபநாசம்:

    பாபநாசம் பேஸ்வா அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் மகன் சண்முகம் (வயது 27), பாபநாசம் சின்னக்கடைத்தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் மகன் ரவிச்சந்திரன்(26) இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

    இந்நிலையில் சண்முகமும், அவரது நண்பர் பிரவீனும் சேர்ந்து ரவிச்சந்திரனை கட்டையால் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்து சண்முகம், பிரவீன் இருவரையும் தேடிவருகிறார்.

    திருவோணம் அருகே வாலிபரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை, கரம்பக்குடி அருகே உள்ள தென்நகரைச் சேர்ந்தவர் முத்து (வயது 37). டெய்லர். இவரது மனைவி விஜயலட்சுமி.

    முத்து நேற்று கரம்பக்குடியில் இருந்து ஊரணிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவோணம் அருகே பணிகொண்டான் விடுதி பிரிவு சாலையில் சென்றபோது கையில் முறுக்கு கம்பியுடன் வாலிபர் ஒருவர் முத்துவை வழிமறித்தார். இதை பார்த்து முத்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது அந்த நபர் கையில் வைத்திருந்த கம்பியால் முத்துவின் தலை மற்றும் உடலில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் தலையில் பலத்த காயத்துடன் முத்து கீழே சாய்ந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார் முத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை தாக்கிய நபர் யார்? எதற்காக தாக்கினார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்துவாச்சாரி புதுவசூரில் வடமாநில வாலிபர் மீது தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் பீதியில் வடமாநிலத்தவர்கள் மற்றும் மனநலம் பாதித்தவர்கள் என அப்பாவிகள் தாக்கப்படுவது தொடர்கிறது. சில நாட்கள் முன்பு செய்யாறில் திருட்டு பீதியில் கல்லூரி மாணவன், குழந்தை கடத்தல் பீதியில் குடியாத்தத்தில் வடமாநில வாலிபர் மற்றும் போளூர் அருகே சென்னை மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டனர்.

    பெரும் அதிர்வலைகளை இச்சம்பவங்கள் ஏற்படுத்தியது. இதையடுத்து, குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. பகலவன் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், வடமாநில வாலிபர் ஒருவர் மீண்டும் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதுகுறித்த விபரம்:-

    சத்துவாச்சாரி அடுத்த புதுவசூர் கிராமத்தில் நேற்று நள்ளிரவு வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். சந்தேகம் ஏற்பட்ட அப்பகுதி மக்கள், அந்த வாலிபரை பிடித்து கொடூரமாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

    தகவலறிந்ததும், சத்துவாச்சாரி போலீசார் விரைந்து வந்து வடமாநில வாலிபரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    விசாரணையில் அவர், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரசாத் சட்டர்ஜி (வயது 30) என்பது தெரிய வந்தது. அவரை தாக்கிய புகாரில், புதுவசூரை சேர்ந்த பார்த்திபன் (38) என்பவரை கைது செய்தனர்.

    குழந்தை கடத்தல் பீதியில் வாலிபரை பைக்கில் தூக்கிச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக பொன்னேரியில் 2 பேர் போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஊருக்குள் புகும் வெளியாட்களை பொதுமக்கள் தாக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

    நேற்று முன்தினம் பழவேற்காட்டில் குழந்தை கடத்தல் பீதியில் மனநோயாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து பீதி நிலவுவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதனை போக்க போலீசார் கிராமப்பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். குழந்தை கடத்தல் பீதி குறித்து அவர்கள் பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    என்றாலும் குழந்தை கடத்தல் பீதியில் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து வருகிறது. பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியரை குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பொன்னேரியை அடுத்த இருளிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். தனியார் நிறுவன ஊழியர். இவர் வேலை பார்க்கும் மெதூரைச் சேர்ந்த நண்பரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் பஸ் ஏறுவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் லட்சுமணனிடம் விசாரித்தனர். ஆனால் அவரது விளக்கத்தை கேட்காத வாலிபர்கள் குழந்தையை கடத்த வந்ததாக நினைத்தனர்.

    பின்னர் லட்சுமணனை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரை மோட்டார்சைக்கிளில் தூக்கிச் சென்று கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லட்சுமணனை தாக்கினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார்.

    தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து லட்சுமணனை மீட்டனர். அவருக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக மெதூர் காலனியைச் சேர்ந்த சரண்ராஜ், மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி அருகே சொத்து பிரச்சனையில் வாலிபரை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே அமச்சியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது34). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பூவலிங்கம். இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இதனால் கடந்த 11 வருடங்களாக 2 குடும்பத்தினரும் தனித்தனியாக கோவில் திருவிழாவை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று கோவில் திருவிழா நடந்தபோது அங்கு வந்த ராஜேஸ்வரனிடம், பூவலிங்கம் அவரது மகன்கள் விஸ்வநாதன், தண்டாயுதபாணி ஆகியோர் மீண்டும் சொத்து தொடர்பாக வாக்குவாதம் செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து ராஜேஸ்வரன் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×