search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth attack"

    பொன்னேரி அருகே ஓசியில் பிரியாணி கேட்டு ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரியாணி கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர்கள் வசிம், லிசன். இரவில் கடைக்கு வந்த 3 வாலிபர்கள் பணம் கொடுக்காமல் பிரியாணி, காடை வருவல் கேட்டனர். இதனை கடையில் இருந்த ஊழியர்கள் கண்டித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்கள் வசிம், லிசனை சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலாடு பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ், கும்மங்குளம் பாலாஜி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பரிக்கபட்டை சேர்ந்த பிரகாசை தேடி வருகிறார்கள்.

    ஏழுகிணறு பகுதியில் செல்போன்கடை ஊழியரை வெட்டி ரூ.60 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    ஏழுகிணறு பெரியண்ணா தெருவில் செல்போன் மொத்த வியாபார கடை வைத்திருப்பவர் ஜாபர்.

    இந்த கடையில் ஏழுகிணறு ஆனைக்கார தெருவைச் சேர்ந்த ரபீக்கான் (34) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மொத்த கடையில் இருந்து மற்ற கடைகளுக்கு செல்போன்கள் வினியோகிக்கப்படுகின்றன.

    இந்த கடைகளில் பணம் வசூல் செய்வதற்காக ரபீக்கான் நேற்று சென்றார். இரவு 11 மணியளவில் வசூலான பணப்பையுடன் மோட்டார் சைக்கிளில் தான் வேலைபார்க்கும் கடைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    ஏழுகிணறு பெரியண்ணா தெருவுக்கு வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர், ரபீக்கானை வழிமறித்தனர். திடீர் என்று அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றனர். இதில் அவரது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இதற்குள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் பறித்துச்சென்ற பையில் ரூ.60 லட்சம் வசூல் பணம் இருந்தது.

    இதுகுறித்து ஏழுகிணறு போலீசில் புகார் செய்யப்பட்டது. அரிவாளால் வெட்டப்பட்ட ரபீக்கான் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கொள்ளை சம்பவம் குறித்து ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ரூ.60 லட்சத்தை கொள்ளையடித்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஏழுகிணறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டிணம் காவல் சரகத்திற்குட்பட்ட அண்டகதுறை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர் நேற்று அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமி மகேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முன்பு ஓடி வந்து விட்டார். இதை சுதாரித்து கொண்ட அவர் உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டார். பின்னர் ஆத்திரமடைந்த மகேந்திரன் அந்த சிறுமியை அழைத்து இப்படி சாலையில் வந்து விளையாடலாமா? என்று அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தந்தை பாரதி (45). ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதனால் தனது மகளை மகேந்திரன் எப்படி அடிக்கலாம் என்று ஆவேசம் அடைந்த பாரதி, அவரது உறவினரான தமிழ்ச்செல்வம் (26). என்பவருடன் மகேந்திரன் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் இது குறித்து கரியாப்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி வழக்கு பதிவு செய்து பாரதி மற்றும் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்ட வட மாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஆயிரம் பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் அங்கு வந்தார்.

    அவர் திடீரென ரகளையில் ஈடுபட்டார். ஆஸ்பத்திரிக்கு வந்த ஆண்களின் சட்டையை பிடித்து இழுத்து கிழித்தார். பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்கதாக கூறப்படுகிறது.

    மேலும் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நர்சுகளை அடிக்க பாய்ந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். அவர்களது கையில் சிக்காமல் அங்குமிங்கும் ஓடினார்.

    பின்னர் பொதுமக்கள், ஆஸ்பத்திரி காவலாளிகள் அவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து திமிற தொடங்கினார். அவரது கை, கால்களை கட்டி தர்ம அடி கொடுத்தனர்.

    இதில் அவரது கண், வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் விசாரித்த போது இந்தியில் பேசினார். இதனால் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    அவர் தனது பெயரை மாறி, மாறி கூறி வருகிறார். சிகிச்சை முடிந்து வெளியே வந்தால் தான் அவரிடம் விசாரணை நடத்தி முழு விவரங்களை பெற முடியும். அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கூடலூர் அருகே பணம் கேட்டு வாலிபரை பிளேடால் கீறிய ரவுடிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கூடலூர் அருகே உள்ள கலிமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 33). இவர் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இரும்புக்கடை முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் நாங்கள் இந்த பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் எனக் கூறி பணம் கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே அவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க முயன்றனர்.

    இதனால் அவர் சத்தம் போடவே பிளேடால் புகழேந்தியை கீறி கொலை மிரட்டல் விடுத்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு அவர்களை பிடித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சஞ்சய் (23), வடக்கு ரத வீதியைச் சேர்ந்த அஜித் (19) என தெரிய வந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பள்ளப்பட்டி முதல் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் குபேந்திரன் (வயது26). இவருக்கும் அவரது அண்ணன் அழகுராஜா என்பவருக்கும் பூர்வீக சொத்தை பிரிப்பதில் முன்வி ரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அழகுராஜா கத்தியால் குத்துவதுபோல வந்தார். அதை தடுக்க முயன்றபோது குபேந்திர னுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த குபேந்திரன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

    கண்டமனூர் அருகில் உள்ள பொன்னம்மாள்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன்கள் சிவக்குமார் (40), முத்தையா (30). இதில் முத்தையா வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பெரியப்பா மகன் ஜெகன் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சிவக்குமார் தனது தம்பி என்றும் பாராமல் முத்தையாவை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தினார். இது குறித்து கண்டமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகமலை புதுக்கோட்டை அருகே முன்விரோத தகராறில் 2 வாலிபர்களை பீர்பாட்டிலால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள சம்பக்குடியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் வினோத்குமார் (வயது32). இவர் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகமலை புதுக்கோட்டைக்கு சென்றார். பின்னர் இருவரும் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (23), குமார் (27) வழிமறித்து தகராறு செய்தனர். அவர்கள் பீர்பாட்டிலால் குத்தியதில் வினோத்குமார் மற்றும் கார்த்திக் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி குமார், முருகனை கைது செய்தனர்.

    திருவள்ளூர் அருகே கைப்பந்து போட்டியில் தகராறில் வாலிபரின் கையை துண்டித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டில் வசிப்பவர் பால்தினகரன். இவர்கடந்த வாரம் ரெயில் நிலைய மேம்பாலம் அருகே கை வெட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கிடந்தார்.

    அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து செவ்வாப்போட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் இதில் தொடர்புடைய வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்கிற ஜெபராஜ்,லல்லு என்கிற சார்லஸ்ராஜ்,மோகன்குமார், குமார்,தினேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த மாதம் கைப்பந்து போட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர்கள் பால் தினகரனின் கையை வெட்டியது தெரிய வந்தது. கைதான ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    கூடலூர் அருகே சாக்கடை தகராறில் 2 பேரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 48). அதே பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (42). சம்பவத்தன்று நகராட்சி துப்புரவு ஊழியர்கள் கால்வாயை தூர் வாறி அந்த குப்பையை குபேந்திரன் வீட்டு முன்பு கொட்டி விட்டனர்.

    இதற்கு ராமர்தான் காரணம் என்று நினைத்த குபேந்திரன் அவரிடம் தகராறு செய்தார். மேலும் அரிவாளால் அவரை கடுமையாக தாக்கினார். இதனை தடுக்க வந்த தாத்தப்பன் என்பவரையும் அவர் தாக்கினார்.

    படுகாயமடைந்த 2 பேரும் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து ராமர் கொடுத்த புகாரின் பேரில் குபேந்திரன் மீது கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் மண்டை உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் வழியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது.

    இந்த பங்க் அருகே நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ் டிரைவர் பாலு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது கையில் இரும்பு ராடுடன் 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென பாலுவின் தலை, கை, கால் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்கினார். மேலும் அந்த வழியாக சென்ற காரின் கண்ணாடியையும் உடைத்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் அந்த நபர் சரமாரியாக தாக்கினார். ஆனாலும் சுற்றி வளைத்து பிடித்த அவர்கள் அந்த நபரை பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலையில் பலத்த காயம் அடைந்த பாலு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாப்பூரில் கடன் பணத்தை கேட்டு வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    வெட்டுவாங்கேணி கஸ்தூரிபா நகரை சேர்ந்தவர் மகேஷ் கிருஷ்ணன் (வயது 32) மயிலாப்பூர் பஜார் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் தண்ணீர் கேன் போடும் வியாபாரம் செய்து வருகிறார்.

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பாட்ஷா தோட்டம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். மாதம் தோரும் ரூ.7 ஆயிரம் வட்டி செலுத்தி வந்தார். இந்தநிலையில் கார்த்திக் 5 பேருடன் சென்று மகேஷ் கிருஷ்ணனிடம் கடன் பணம் முழுவதையும் திருப்பி தருமாறு கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து மகேஷ் கிருஷ்ணன் மயிலாப்புர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். #tamilnews

    ராணிப்பேட்டையில் பீர் பாட்டிலை உடைத்து 3 பேரை குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை ஆர்.எப். ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 28). இவர், நேற்று மாலை பைக்கில் சென்ற போது ஒரு டீக்கடை முன்பு உட்கார்ந்து இருந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் மீது மோதி விட்டார்.

    இதனால் இருத்தரப்பினர் பயங்கரமாக மோதி கொண்டனர். கண்ணன் தரப்பினர் பீர் பாட்டிலை உடைத்து பைக்கை மோதிய சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பிரதாப், கலைவாணனை சரமாரியாக குத்தினர். இதில் 3 பேருக்கும் மார்பு, முதுகில் குத்துப்பட்டு ரத்தம் பீறிட்டு கொட்டியது.

    படுகாயமடைந்த அவர்களை, பொதுமக்கள் மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து பீர் பாட்டிலால் தாக்கிய கண்ணன் மற்றும் அவரது மைத்துனர் விஜய் (20), நண்பர் வீரமணி (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×