search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker sacrifice"

    • கணேசன் வயது 38, தொழிலாளியான இவர் நேற்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி அருகே உள்ள நரசிம்மசெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் வயது 38, தொழிலாளியான இவர் நேற்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரைண நடத்தி அவர் மீது மோதி வி ட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் தேடி வருகிறார்கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பின்னோக்கி வந்து வாலிபர் மீது ஏறியது

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் பகுதியில் சென்னை- பெங்களூர் அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல் விரைவு சாலை அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் ரோடு ரோலர் மெக்கானிக்காக பணியாற்றி வந்த மத்தியபிரதேச மாநிலம், மொரனா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 34). ரோடு ரோலர்களுக்கு ஆயில் கிரீஸ் அடிக்கும் பணிகளை மேற்கொண்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ரோடு ரோலர் ஒன்று பின்னோக்கி வந்து ரஞ்சித் மீது ஏறியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்நிலையில் அங்கு அவர் சிகிக்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் பழுதான மற்றும் புதிய மின் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மின் கம்பங்கள் ஏற்றி கொண்டு டிராக்டர் சோதனை சாவடி வழியாக நாட்டறம்பள்ளி நோக்கி சென்றது. டிராக்டரை டிரைவர் அரியானா மாநில வாலிபர் சம்ராடு (வயது 29) என்பவர் ஓட்டி சென்றார்.

    பங்காளமேடு அருகே சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் டிரெய்லர் சாலையின் நடுவில் கவிழ்ந்தது.

    இதில் டிரெய்லரில் இருந்த மின் கம்பம் சரிந்து விழுந்ததில் மின் கம்பம் மீது அமர்ந்து இருந்த அரியானா மாநிலம் பகத்சிங் மகன் அனில் (வயது 37) என்பவரும் சரிந்து விழுந்தார்.

    இதில் அவர் மின் கம்பங்களுக்கு இடையில் சிக்க தலை நசுங்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சுவர் இடிந்து விழுந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கீழ் கொத்தூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலியாகினார்.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சல்லாபுரி (வயது 55) தொழிலாளி.

    இவர் கீழ்க்கத்தூர் அருகே இருக்கும் புளியங்குடிசை கிராமத்தில் தேவன் என்கின்ற வரின் வீடு கட்டும் பணி செய்து வந்தார். வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    • வேட்டுவம்பாளையம் பகுதியை சேர்ந்த தனமணி (65) என்பவரும், உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
    • சரக்கு ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்து, மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த முத்துசாமி மற்றும் தனமணி மீது மோதினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உலகப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 50).

    இவரும் இவரது மாமியார் கபிலர்மலை அருகே வேட்டுவம்பாளையம் பகுதியை சேர்ந்த தனமணி (65) என்பவரும், உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    சித்தளந்தூர்- ஜேடர்பாளையம் சாலையில், உப்புபாளையம் பிரிவு அருகே சாலையின் ஓரமாக மண் ரோட்டில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அதே சாலையில், ஈரோடு அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பவர் சரக்கு ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்து, மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த முத்துசாமி மற்றும் தனமணி மீது மோதினார்.

    இதில் முத்துசாமி, தனமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து, தனமணியை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், முத்துசாமியை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    அங்கு முத்துசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து முத்துசாமியின் மனைவி கோமதி (40), நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர், சரக்கு ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை,

    வாலாஜா அடுத்த பாலாறு அணைக்கட்டு இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50) கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பன்னீர் செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்கை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கொய்யா பறிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிகுப்பம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில், நடேசன் நேற்று கத்தாரிகுப்பம் அருகே அம்மனூர் கிராமத்தில் கொய்யா தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்றார்.

    அப்போது, தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாருக்கு செல்லும் ஒயரை மிதித்து உள்ளார்.

    அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து நடேசன் தூக்கி வீசப்பட்டார். மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட சக தொழிலாளி அவரது வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    விரைந்து வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவம் இடத்துக்கு சென்ற போலீசார் நடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், நடேசன் மகன் அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோட்டை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கண்ணடிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மாயன் (வயது 50).கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மின்னூர் மின்வாரிய அலுவலகம் அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாயன் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட மாயன் சம்பவம் இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மாயன் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • நேற்று இரவு கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50) தச்சு தொழிலாளி. இவர் நேற்று இரவு கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்து விட்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், கொண்டலாம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மணி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு காந்திமதி என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வந்த ரெயில், மணி மீது மோதியது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள திட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மணி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு காந்திமதி என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் மணி காலைக் கடனை கழிப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வந்த ரெயில், மணி மீது மோதியது. இதில் ரெயிலில் சிக்கிய மணி, அரை கிலோ மீட்டர் இழுத்து செல்லப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் நகர போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் நடைபெற்று வருகிறது.
    • அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆலூத்து பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்( வயது 32) கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் பல்லடம் மங்கலம் சாலையில், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் நடைபெற்று வருகிறது.

    அங்கு இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அங்கு எந்திரம் மூலம் குழி எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன முத்துக்குமாருக்கு மைதிலி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

    • கடந்த 4-ந் தேதி தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
    • வேலகவுண்டம்பட்டியில் இருந்து பெரியமணலி நோக்கி அதிவேகமாக வந்த கார், செல்வராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கோட்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெரிய மணலி பகுதியில் கோட்டம்பட்டி பிரிவு சாலையில் வலது புறமாக திரும்பியபோது வேலகவுண்டம்பட்டியில் இருந்து பெரியமணலி நோக்கி அதிவேகமாக வந்த கார், செல்வராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

    இதில் அவர் படுகாயம்

    அடைந்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்தார். அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று செல்வ ராஜ் உயிரிழந்தார். விபத்து குறித்து வேலக

    வுண்டம்பட்டி போலீசில்

    புகார் செய்தனர். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான நாமக்கல், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகன் (49) என்பவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×