என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்து வட மாநில தொழிலாளி பலி
- தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் பழுதான மற்றும் புதிய மின் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மின் கம்பங்கள் ஏற்றி கொண்டு டிராக்டர் சோதனை சாவடி வழியாக நாட்டறம்பள்ளி நோக்கி சென்றது. டிராக்டரை டிரைவர் அரியானா மாநில வாலிபர் சம்ராடு (வயது 29) என்பவர் ஓட்டி சென்றார்.
பங்காளமேடு அருகே சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் டிரெய்லர் சாலையின் நடுவில் கவிழ்ந்தது.
இதில் டிரெய்லரில் இருந்த மின் கம்பம் சரிந்து விழுந்ததில் மின் கம்பம் மீது அமர்ந்து இருந்த அரியானா மாநிலம் பகத்சிங் மகன் அனில் (வயது 37) என்பவரும் சரிந்து விழுந்தார்.
இதில் அவர் மின் கம்பங்களுக்கு இடையில் சிக்க தலை நசுங்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






