search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Premier League"

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது.
    • டெல்லி அணியின் துவக்க வீராங்கனைகள் கேப்டன் மெக் லேனிங்- ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.

    டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    துவக்க வீராங்கனைகள் கேப்டன் மெக் லேனிங்- ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். ஷபாலி வர்மா 21 ரன்களும், மெக் லேனிங் 39 ரன்களும் விளாசினார். முன்னதாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த மாரிசான் கேப்- அலைஸ் கேப்சி இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த சூழ்நிலையில், அலைஸ் கேப்சி 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜெஸ் ஜோனாசன் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார். பின்னர் மாரிசான் அடுத்த இரண்டு பந்துகளில் வெற்றியை உறுதி செய்தார். அவர் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    13 பந்துகள் மீதமிருந்த நிலையில், டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    • தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் குவித்தார்.
    • டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய துவக்க வீராங்கனை ஸ்வேதா ஷெராவத் 19 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் அலிசா ஹீலி 36 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சிம்ரன் ஷாயிக் 11 ரன்களிலும், கிரண் 2 ரன்னிலும், தீப்தி சர்மா 3 ரன்னிலும், ஷோபி ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர்.

    அதேசமயம் மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய தஹ்லியா மெக்ராத் அரை சதம் கடந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.

    டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, அந்த அணியின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் மும்பை அணியை சமன் செய்யும். இதில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். எனவே, இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெறுவதடன், மும்பை அணியைவிட அதிக ரன் ரேட் பெறவேண்டும். 

    • முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
    • அமலியா கெர் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் தலா 29 ரன்கள் எடுத்தனர். மும்பை தரப்பில் அமலியா கெர் 3 விக்கெட் கைப்பற்றினார். நாட் ஷிவர் பிரண்ட், இஸ்சி வாங் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகள் ஹெய்லி மேத்யூஸ் 24 ரன்களும், யஸ்திகா பாட்டியா 30 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அதன்பின் நாட் ஷிவர் பிரண்ட் 13 ரன், கேப்டன் கவுர் 2 ரன், பூஜா வஸ்த்ராகர் 19 ரன் என ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அபாரமாக ஆடிய அமலியா கெர், 21 பந்துகள் மீதமிருந்த நிலையில் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்ததால், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமலியா கெர் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார். அவர் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. டெல்லி அணி 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது.
    • 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின.

    முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்தார். இஸ்சி வாங்கி 23 ரன், அம்ஜோத் கவுர் 19 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஷபாலி வர்மா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் மெக் லேனிங் (32 நாட் அவுட்), அலைஸ் கேப்சி (38 நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர். இதனால் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது. அத்துடன் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. 

    • மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்தார்.
    • டெல்லி அணி தரப்பில் மாரிசான் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய மும்பை இந்தியன்ஸ், டாப் ஆர்டர் வீராங்கனைகளை விரைவில் இழந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (23 ரன்கள்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ராகர் 26 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இஸ்சி வாங்கி 23 ரன், அம்ஜோத் கவுர் 19 ரன் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது.

    டெல்லி அணி தரப்பில் மாரிசான் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    • முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
    • உ.பி.வாரியர்ஸ் அணியில் அதிரடியாக ஆடிய மெக்ராத் 57 ரன்னிலும், ஹாரிஸ் 72 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலாவது ஆட்டத்தில் குஜராத் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய கார்ட்னர் 39 பந்தில் 60 ரன்னும், ஹேமலதா 33 பந்தில் 57 ரன்னும் விளாசினர்.

    இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. அணியின் துவக்க வீராங்கனைகள் விரைவில் அவுட் ஆகினர். தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினர். மெக்ராத் 57 ரன்னிலும், ஹாரிஸ் 72 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் உ.பி.வாரியர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. தற்போது 3வது அணியாக உ.பி.வாரியர்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேமலதா 30 பந்தில் அரைசதத்தை அடித்து அசத்தினார்.
    • கார்ட்னர் 39 பந்தில் 60 ரன் எடுத்தார்.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.இதில் முதலாவது ஆட்டத்தில் குஜராத் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷோபியா டங்க்லி மற்றும் லாரா வோல்வார்ட் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 41 ரன்னில் பிரிந்தது. லாரா வோல்வார்ட் 17 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

    இதையடுத்து களம் இறங்கிய ஹார்லீன் தியோல் 4 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷோபியா டங்க்லி 23 ரன்னிலும் வீழ்ந்தனர். இதையடுத்து தயாளன் ஹேமலதா மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி உ.பி. அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேமலதா 30 பந்தில் அரைசதத்தை அடித்து அசத்தினார். அவர் 33 பந்தில் 57 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஆஷ்லே கார்ட்னருடன் சுஷ்மா வெர்மா ஜோடி சேர்ந்தார்.

    இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியில் மிரட்டிய கார்ட்னர் 39 பந்தில் 60 ரன்னும், ஹேமலதா 33 பந்தில் 57 ரன்னும் எடுத்தனர்.

    உ.பி.வாரியர்ஸ் அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட், பர்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், அஞ்சலி ஷர்வானி, ஷோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி ஆடி வருகிறது.

    • 4 புள்ளியுடன் உள்ள குஜராத் ஜெயன்ட்சை பொறுத்தவரை தனது இறுதி லீக்கில் உ.பி. வாரியர்சுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும்.
    • இரவு 7.30 மணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியுடன் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக்(டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.

    இதுவரை 16 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மும்பை இந்தியன்சும் (10 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்சும் (8 புள்ளி) பிளே-ஆப் சுற்றை எட்டி இருக்கின்றன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு உ.பி. வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.

    3 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ள உ.பி. வாரியர்ஸ் அணி எஞ்சிய இரு லீக்கில் (குஜராத் மற்றும் டெல்லிக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் போதும். அடுத்த சுற்றை எட்டி விடலாம். சொல்லப்போனால் இன்றைய ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி விட்டால் மற்ற இரு அணிக்குரிய வாய்ப்பு தகர்ந்து விடும்.

    2 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ள பெங்களூரு அணி தனது கடைசி லீக்கில் நாளை பலம் வாய்ந்த மும்பையை அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதே சமயம் உ.பி. வாரியர்ஸ் தனது கடைசி இரு லீக்கிலும் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் உ.பி., குஜராத், பெங்களூரு மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட்டில் பெங்களூரு முன்னிலையில் இருந்தால் வாய்ப்பு கிட்டும்.

    4 புள்ளியுடன் உள்ள குஜராத் ஜெயன்ட்சை பொறுத்தவரை தனது இறுதி லீக்கில் உ.பி. வாரியர்சுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்து, உ.பி. வாரியர்சை விட ரன்ரேட்டில் முந்தினால் ஒரு வேளை குஜராத்துக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சினே ராணா தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, அலிசா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்சை பிரபோர்ன்ஸ் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு சந்திக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி முதலிடத்தை உறுதி செய்யும் முனைப்புடன் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
    • சோபி டிவைன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 99 ரன்கள் விளாசினார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 68 ரன்கள் அடித்தார். ஆஷ்லி கார்ட்னர் 41 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, சோபி டிவைன் இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தனர். அதிரடியாக ஆடிய மந்தனா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். சிக்சர் மழை பொழிந்த சோபி டிவைன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 99 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மகளிர் பிரீமியர் லீக்கில் அவர் ஒரு ரன்னில் முதல் சதத்தை தவறவிட்டார். அதன்பின் எலிஸ் பெர்ரி, ஹெதர் நைட் இருவரும் இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.

    27 பந்துகள் மீதமிருந்த நிலையில், பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எலிஸ் பெர்ரி 19 ரன்களுடனும், ஹெதர் நைட் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    • லாரா வோல்வார்ட்- சபினேனி மேகனா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.
    • பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் அணியின் துவக்க வீராங்கனை சோபியா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், லாரா வோல்வார்ட்- சபினேனி மேகனா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. மேகனா 31 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் லாராவுடன் ஆஷ்லி கார்ட்னர் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அரை சதம் கடந்த லாரா 68 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஷ்லி 41 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

    பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட் வீழ்த்தினார். சோபி டிவைன், பிரீத்தி போஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    • உ.பி.வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
    • அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 38 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் அடித்தனர்

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.

    உபி வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய மும்பை அணி, 127 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 35 ரன்களும், இஸ்ஸி வோங் 32 ரன்களும் சேர்த்தனர்.

    இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி, 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது. தஹ்லியா மெக்ராத் 38 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 3வது பந்தில் சோபி எக்லெஸ்டோன் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். உ.பி.வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை 129 ரன்கள் சேர்த்ததால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு உ.பி. வாரியர்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

    • மும்பையில் ஹேலி மேத்யூஸ் 35, இஸ்ஸி வோங் 32, ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.
    • உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. உபி வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு முனையில் இஸ்ஸி வோங் அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்தில் 32 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார்.

    இறுதியில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக ஹேலி மேத்யூஸ் 35, இஸ்ஸி வோங் 32, ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.

    உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ×