search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உ.பி. வாரியர்ஸ்"

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ் 47 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார்.
    • கிரண் நவ்கிர் 31 பந்தில் 4 சிக்ஸ், 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவினார்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ் 47 பந்தில் 55 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீராங்கனை யாசிகா பாட்டியா 22 பந்தில் 26 ரன்கள் அடித்தார். உ.பி. வாரியர்ஸ் அணி சார்பில் அஞ்சலி சர்வானி, கிரேஸ் ஹாரிஸ், எக்லெஸ்டோன், தீப்தி சர்மா, கயக்வாட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான அலிசா ஹீலி 29 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், கிரண் நவ்கிர் 31 பந்தில் 4 சிக்ஸ், 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் விளாசி நெருக்கடியை குறைத்தார்.

     தஹிலா மெக்ராத் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த கிரேஸ் ஹாரிஸ் 17 பந்தில் 38 ரன்களும், தீப் சர்மா 20 பந்தில் 27 ரன்களும் ஆட்டமிழக்காமல் விளாச உ.பி. வாரியர்ஸ் 16.3 பந்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. உ.பி. வாரியர்ஸ் அணிக்கு இது முதல் வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளில் 2-ல் தோல்வியடைந்து 4-வது இடத்தில் உள்ளது.

    ஆர்சிபி அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் 3-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் கடைசி இடத்திலும் உள்ளது.

    • 4 புள்ளியுடன் உள்ள குஜராத் ஜெயன்ட்சை பொறுத்தவரை தனது இறுதி லீக்கில் உ.பி. வாரியர்சுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும்.
    • இரவு 7.30 மணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியுடன் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக்(டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.

    இதுவரை 16 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மும்பை இந்தியன்சும் (10 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்சும் (8 புள்ளி) பிளே-ஆப் சுற்றை எட்டி இருக்கின்றன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு உ.பி. வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.

    3 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ள உ.பி. வாரியர்ஸ் அணி எஞ்சிய இரு லீக்கில் (குஜராத் மற்றும் டெல்லிக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் போதும். அடுத்த சுற்றை எட்டி விடலாம். சொல்லப்போனால் இன்றைய ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி விட்டால் மற்ற இரு அணிக்குரிய வாய்ப்பு தகர்ந்து விடும்.

    2 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ள பெங்களூரு அணி தனது கடைசி லீக்கில் நாளை பலம் வாய்ந்த மும்பையை அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதே சமயம் உ.பி. வாரியர்ஸ் தனது கடைசி இரு லீக்கிலும் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் உ.பி., குஜராத், பெங்களூரு மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட்டில் பெங்களூரு முன்னிலையில் இருந்தால் வாய்ப்பு கிட்டும்.

    4 புள்ளியுடன் உள்ள குஜராத் ஜெயன்ட்சை பொறுத்தவரை தனது இறுதி லீக்கில் உ.பி. வாரியர்சுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்து, உ.பி. வாரியர்சை விட ரன்ரேட்டில் முந்தினால் ஒரு வேளை குஜராத்துக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சினே ராணா தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, அலிசா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்சை பிரபோர்ன்ஸ் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு சந்திக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி முதலிடத்தை உறுதி செய்யும் முனைப்புடன் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    ×