search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman jewelry theft"

    சென்னையில் செயின்- செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி கொண்டே இருக்கிறது. ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் செயின்- செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி கொண்டே இருக்கிறது.

    நேற்று 3 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா டான்சரான சவிதா தனது தாலி செயினை வீட்டில் கழற்றி வைத்து விட்டு தூங்கினார். காலையில் கண்விழித்த போது அதனை காணவில்லை. அவரது 15 பவுன் தாலி செயினை யாரோ திருடிச் சென்று உள்ளனர்.

    கொளத்தூர் சாந்தி நகரைச் சேர்ந்த ரூபா என்ற பெண்ணிடம் 8 பவுன் செயினும், வில்லிவாக்கத்தில் அகிலா என்பவரிடம் 25 பவுன் தாலி செயினும் பறிக்கப்பட்டுள்ளது.

    கரூர் காகித ஆலையில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வரும் முருகேசன் சென்னையில் தனது நண்பரை பார்க்க வந்தார். பாண்டி பஜாரில் அவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
    மணவாளக்குறிச்சி அருகே கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    மணவாளக்குறிச்சி அருகே கல்படி கழுவன்தட்டு விளை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உஷா (வயது 55).

    இவர் சம்பவத்தன்று மாலையில் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் காட்டுகுளத்தின் கரை அருகே நடந்து வரும்போது அவருக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் உஷாவின் அருகே வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி உஷாவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட உஷா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்.. என கூச்சலிட்டு அலறினார். ஆள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால் யாரும் வரவில்லை. மோட்டார் சைக்கிளில் வந்த அந்த மர்ம நபர் உஷாவின் கையை தட்டிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

    இதுகுறித்து உஷா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு கொள்ளையன் குறித்த தடயங்களை சேகரித்தனர்.

    உஷா கூறிய அடையாளங்களை வைத்து அந்த பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை ராமநாதபுரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கீதா (வயது 52).

    இவர் நேற்று இரவு அப்பகுதியில் செல்போனில் பேசிய படி நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் கீதா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார்.

    சுதாரித்துக் கொண்ட கீதா நகையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு நகைபறிக்க முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் குனியமுத்தூரை சேர்ந்த ரசூல்(19) என்பது தெரிய வந்தது. இருசக்கர வாகன திருட்டு வழக்கு ஒன்றில் கைதான இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

    இந்நிலையில் பெண்ணிடம் நகைபறிக்க முயன்று மீண்டும் சிக்கி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை சரவணம்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 6 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சாந்தி(வயது 50).

    இவர் நேற்று இரவு மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்தனர்.

    அதிர்ச்சியடைந்த அவர் திருடன்...திருடன்... என சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் நகை பறித்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி மாநகர் முழுவதும் போலீஸ் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. எனினும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    மதுரை காளவாசலில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள எச்.எம்.எஸ். காலனி புதுவாழ்வு நகரை சேர்ந்தவர் ரமேஷ் கண்ணன் (வயது 31). இவரது மனைவி குருதேவி. நேற்று இவர்கள் இருவரும் இரவு காட்சி சினிமாவுக்கு சென்றனர்.

    படம் முடிந்து நள்ளிரவு ஒரு மணிஅளவில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சம்மட்டி புரம் தாழம்பூ தெரு ஜங்சன் பகுதியில் வந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென்று குருதேவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இதுகுறித்து ரமேஷ் கண்ணன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    மதுரையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலுசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை புதூர் அருகே உள்ள பரசுராம் பட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி சாந்தி (வயது 51). இவர் சம்பவத்தன்று மாலை அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென மர்ம நபர்கள் சாந்தியை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுரை கரிமேடு பாஸ்டின் நகரைச் சேர்ந்தவர் அருண் ஜெகநாதன் (52). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த ரூ.10,500-யை திருடிக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    சேலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சடையப்பன். இவரது மனைவி ஜம்பு . இவர் நேற்று லீ-பஜார் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை எடுத்துக் கொண்டு பஸ்சில் வந்து இறங்கினார். லீ பஜாரில் பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பும்போது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் ஜம்பு அதிர்ச்சி அடைந்தார்.

    யாரோ நைசாக நகையை திருடி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவிலில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் மர்மநபர்கள் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் காந்தி நகர் 2-ம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (53). சம்பவத்தன்று இவரது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் கணேசன் மற்றும் அவரது மனைவி, மகள் தூங்கி கொண்டிருந்துள்ளனர். நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த கணேசனின் மகள் கழுத்தில் இருந்த செயினை அறுத்து கொண்டு செல்ல முயன்றுள்ளான்.

    சத்தம் கேட்டு எழுந்த கணேசனின் மகள் திருடனுடன் போராடிய போது பாதி செயினை மட்டும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டானாம்.

    பின்னர் அருகில் உள்ளவர்கள் தொடர்ந்து விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. திருடனின் கையில் கிடைத்த செயின் மட்டும் 28 கிராம் என கூறப்படுகிறது.

    இது குறித்து புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவட்டார் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 2½ பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குலசேகரம் பொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி வசந்தகுமாரி (வயது 54). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திருவட்டார் இட்டகவேலி வந்தார். பின்னர் அங்கிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் வசந்த குமாரி அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் அவர் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட வசந்தகுமாரி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன் திருடன் கூச்சலிட்டு அலறினார்.

    ஆனாலும் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அவரது கையை தட்டிவிட்டு கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயினை பறித்துக் கொண்டு பின்னல் வேகத்தில் மறைந்தனர்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    சேலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மகும்பல் பெண்ணிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், ஓமலூர் செல்லப்பிள்ளை குட்டை, புதூர் நல்ல கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 67). இவரது மனைவி சரோஜா(53). இந்த தம்பதியினர் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி எதிரே பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.

    நேற்று மதியம் அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து கடையில் இருந்த ஆறுமுகத்திடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.

    அவர், தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது சரோஜா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை அந்த மர்ம நபர் பறித்து விட்டு ஓட முயன்றார். சத்தம் கேட்டு ஓடி வந்த ஆறுமுகம் அவர்களை பிடிக்க முயன்றார். இதில் ஒருவன் சிக்கினான். அவன் ஆறுமுகத்தை தாக்கி கீழே தள்ளி விட்டு, தப்பி ஓடி விட்டார்.

    இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரையில் இன்று காலையில் பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சங்கரசுப்பிரமணியன். இவரது மனைவி ஸ்ரீமதி (வயது 45). இவர் இன்று காலை குப்பை கொட்டுவதற்காக வீட்டில் இருந்து தெருமுனைக்கு நடந்து வந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென்று ஸ்ரீமதியை வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள், ஸ்ரீமதி கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியிலேயே கொள்ளையர்கள் இன்று காலை துணிகரமாக நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சோலையழகுபுரம், சுப்பிரமணியபுரம், எம்.கே.புரம், ஜீவாநகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. மனைவியிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜி.கே.பிள்ளை. டி.ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பொன்னாள்.

    இவர் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பொன்னாள் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து பொன்னாள் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்பது பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
    ×