search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vodafone"

    ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.295 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Idea



    ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஐடியா அறிவித்து இருக்கும் புதிய சலுகை விலை ரூ.295 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    42 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள ஐடியா செல்லுலார் புதிய பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 5 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் வழங்கப்படுகிறது. எனினும் வாய்ஸ் கால் அளவு தினசரி அடிப்படையில் 250 நிமிடங்களும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவுற்றதும், வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா என்றும், சலுகையில் வழங்கப்படும் 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், 10 கே.பி. டேட்டா கட்டணம் 4 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஏர்டெல் நிறுவனம் ரூ.299 விலையில் வழங்கும் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகையில் டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. சில வட்டாரங்களில் மட்டும் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ரூ.299 சலுகையில் எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது.

    வோடபோன் நிறுவனம் ரூ.279 விலையில் வழங்கும் சலுகை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. அதிக வேலிடிட்டி வழங்கும் விலை குறைந்த சலுகையாக இது இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    எனினும் ஐடியா சலுகையை போன்று வோடபோன் சலுகையிலும் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை மாற்றப்பட்டு தற்சமயம் 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel



    ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.289 பிரீபெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை இந்த சலுகையில் வேலிடிட்டி மற்றும் டேட்டா அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஏர்டெல் ரூ.289 சலுகை தற்சமயம் கொல்கத்தாவில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் 4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.279 விலையில் அறிவித்த சலுகையை தொடர்ந்து ஏர்டெல் தனது சலுகையை மாற்றியமைத்துள்ளது. வோடபோன் சலுகையிலும் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் கிட்டத்தட்ட ஒரே பலன்களை வழங்குகின்றன.

    எனினும் வோடபோன் வழங்கும் சலுகையில், வாய்ஸ் கால் மேற்கொள்ள தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாடு இருக்கிறது. ஏர்டெல் சலுகையில் உண்மையான அன்லிமிட்டெட் சலுகை வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் வரம்பற்ற வாய்ஸ் கால் பேச முடியும்.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலையில் வழங்கும் சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. #Vodafone #offer



    வோடபோன் நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகை ஜியோவுக்கு போட்டியாக அறிவித்துள்ளது. புதிய ரூ.279 சலுகை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய வோடோபன் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவையை நீண்ட நாட்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக டேட்டாவும் வழங்கப்படுகிறது. வோடபோன் வழங்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையில் தினமும் 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    வோடபோனின் புதிய ரூ.279 சலுகை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்குகிறது. கூடுதலாக இந்த சலுகையில் 4 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்குகிறது.

    மேலும் இந்த சலுகை முதற்கட்டமாக கர்நாடகா மற்றும் மும்பை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களில் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    வோடபோன் அறிவித்து இருக்கும் புதிய சலுகை வாய்ஸ் கால் அதிகம் பயன்படுத்துவோரை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வோடபோன் இரண்டு பிரீபெயிட் சலுகையை வாய்ஸ் காலிங் பலன்களுடன் அறிவித்தது. இவை ரூ.99 மற்றும் ரூ.109 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் அதிகபட்சம் 1 ஜி.பி. டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கின.

    இந்திய டெலிகாம் சந்தையில் மற்ற நிறுவனங்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ.300-க்கும் குறைவான விலையில் இதுவரை வழங்கவில்லை. ஜியோவின் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட துவக்க விலை சலுகையின் கட்டணம் ரூ.348 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஐடியா செல்லுலார் நிறுவனம் தனது பயனர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இவை தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. #Idea #Offers



    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து இருக்கும் வோடபோன் ஐடியா லிமிட்டெட் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.

    அந்த வகையில் ஐடியா செல்லுலார் மூன்று புதிய சலுகைகளை ரூ.209, ரூ.479 மற்றும் ரூ.529 விலையில் அறிவித்துள்ளது. மூன்று புதிய சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. முன்னதாக வோடபோன் இந்தியா இதே விலையில் மூன்று சலுகைகளை அறிவித்தது.

    ஐடியா செல்லுலார் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் நாட்டின் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.209 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.



    ரூ.479 சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.529 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஐடியா அறிவித்து இருக்கும் சலுகைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் தினமும் 250 நிமிடங்களும், அதன் பின் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

    வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். ஐடியாவின் மூன்று புதிய சலுகைகளிலும் வாய்ஸ் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாய்ஸ் கால் போன்றே நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு பயன்படுத்தியதும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. #vodafoneidea #offers



    வோடபோன் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் ஆல்-ரவுன்டர் ரீசார்ஜ் சலுகையை வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 

    டாக்டைம் மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை வழங்கும் புதிய சலுகைகளின் துவக்க விலை ரூ.25 ஆகும். குறைந்த விலையில் கிடைப்பதோடு பயனர்களுக்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை பெற முடியும் என வோடபோன் ஐடியா லிமிட்டெட் அறிவித்துள்ளது.



    ரூ.25 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.245 விலை வரை கிடைக்கும் சலுகைகளின் வேலிடிட்டி 28 நாட்களில் இருந்து 84 நாட்கள் வரை வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக புதிய சலுகைகள் சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் பிராட்பேன்ட் சேவையில் நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது. #Jio #broadband
     


    ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது.

    யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தங்களது திட்டத்தை அப்கிரேடு செய்யும் போது நான்கு மாதங்களுக்கு கூடுதல் வேலிடிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் நான்கு மாதங்கள் இலவச சேவையை பெற முடியும்.

    ஆண்டு சந்தாவுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி மொத்தம் 16 மாதங்களுக்கு சேவைகளை பயன்படுத்த முடியும். இதே போன்று காலாண்டு அல்லது அரையாண்டு வரை திட்டங்களை ரீசார்ஜ் செய்வோருக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.



    மேலும் இலவச சேவையை பெற வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் யு பிராட்பேன்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். 

    ஏற்கனவே ஒரு மாத திட்டத்தை பயன்படுத்தும் பயனர்கள் மூன்று மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது ஒரு மாதம் இலவசமாகவும், ஆறு மாதங்களுக்கான திட்டத்திற்கு இரண்டு மாதங்கள் மற்றும் பன்னிரெண்டு மாதங்களுக்கு நான்கு மாதங்கள் இலவச சேவை வழங்கப்படும் என யு பிராட்பேன்ட் அறிவித்துள்ளது.

    தற்சமயம் காலாண்டு திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளரால் ஆறு மாதங்கள் அல்லது பன்னிரெண்டு மாதங்களுக்கான திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். இதேபோன்று அரையாண்டு திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பன்னிரெண்டு மாத திட்டத்திற்கு அப்கிரேடு செய்து கொள்ளலாம்.
    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழக்கத்தை விட பத்து மடங்கு அதிகளவு வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக அறிவித்துள்ளது. #Jio



    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ ஜூலை மாதத்தில் மற்ற நிறுவனங்களை விட சுமார் பத்து மடங்கு அதிக வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளது. 

    ஜூலை மாதத்தில் மட்டும் டெலிகாம் சந்தை வாடிக்கையாளர்கள் ஒரு சதவிகிதம் அதிகரித்து தற்சமயம் 117.93 கோடியாக அதிகரித்துள்ளது. மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 115.7 கோடியாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 கோடி அதிகரித்துள்ளது.

    ஜியோ மட்டும் பத்து மடங்கு வாடிக்கையாளர்களை அதிகளவு சேர்த்து இருக்கும் நிலையில், மற்ற நிறுவனங்கள் மொத்தமாக 11.53 லட்சம் வாடிக்கையாளர்களையே சேர்த்து இருக்கின்றன.

    வோடபோன் நிறுவனம் 6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் 3.13 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2.25 லட்சம் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனம் 5,489 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

    பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களை பொருத்த வரை ஜூன் மாதத்தில் இருந்து 1.3 கோடி வாடிக்கையாளர்கள் அதிகரித்து ஜூலை மாதத்தில் 46 கோடியாக உள்ளது, மொபைல் பிராட்பேன்ட் இணைப்புகள் மட்டும் 44.1 கோடியாக இருக்கிறது. 
    ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா நிறுவனங்கள் இணைப்பு நிறைவுற்றது. இதைத்தொடர்ந்து நாட்டின் முன்னணி நிறுவனமாக வோடபோன் ஐடியா உருவெடுத்துள்ளது. #vodafoneidea



    ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா நிறுவனங்களின் இணைப்பு இன்று நிறைவுற்றது. இதன் மூலம் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் உருவெடுத்துள்ளது.

    ஒன்றிணைந்த புதிய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு சம அளவு போட்டியளிக்கும் நிறுவனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைய முடிவு செய்தன.

    அதன்படி பிப்ரவரி மாதத்தில் இருநிறுவனங்களும் இதற்கான பணிகளை துவங்கின. இந்தியாவில் இவ்விரு நிறுவனங்கள் இணைப்பு மதிப்பு 2300 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.6 லட்சம் கோடி) என கணக்கிடப்பட்டது.

    ஒன்றிணைந்திருக்கும் புதிய நிறுவனம் டெலிகாம் சந்தையின் வருவாயில் 40% பங்குகளை கொண்டிருக்கும் என் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 40 கோடியை எட்டியுள்ளது. புதிய நிறுவனத்தின் நிர்வாக தலைவராக குமார் மங்கலம் பிர்லாவும் புதிய தலைமை செயல் அதிகாரியாக பலேஷ் ஷர்மா செயல்படுகின்றனர்.
    வோடபோன் இந்தியா அறிவித்திருக்கும் புதிய சலுகை பயனர்களுக்கு அன்லிமிட்டெட் சேவைகளை 168 நாட்களுக்கு வழங்குகிறது. #Vodafone

     

    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.597 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகை 168 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ரூ.597 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வோடபோன் சலுகையில், ஏர்டெல் வழங்கும் அதே சலுகைகள் வழங்கப்படுகிறது.

    எனினும் வோடபோன் சலுகையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வோடபோனின் புதிய சலுகை ஸ்மார்ட்போன் பயனர்கள் மற்றும் ஃபீச்சர் போன் பயனர்களுக்கு தனித்தனி வேலிடிட்டி வழங்குகிறது. இதேபோன்ற டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்கும் சலுகையை ஜியோ இதுவரை வழங்கவில்லை.

    வோடபோனின் புதிய ரூ.597 சலுகையில் பயனர்களுக்கு 10 ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இந்தியா முழுக்க ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு 112 நாட்கள் வேலி்டிட்டியும், ஃபீச்சர்போன் பயனர்களுக்கு 168 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

    இத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகளில் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களும், வேலிடிட்டி முழுக்க வாய்ஸ் கால் அளவு 100 எண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய சலுகை இந்தியா முழுக்க அனைத்து 4ஜி வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் புதிய சலுகையை செயலி மற்றும் வலைத்தளம் உள்ளிட்டவற்றிலும் பெற முடியும்.

    ஏர்டெல் சார்பில் 168 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையில் 10 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த சலுகைக்கான கட்டணம் ரூ.597 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் ஃபீச்சர்போன் பயனர்களுக்கான வேலிடிட்டி குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஏர்டெல் ரூ.597 சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.159 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களின் சலுகைக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அமைந்துள்ளது. #Vodafone #offers


    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடனான போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் வோடபோன் இந்தியா புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

    புதிய வோடபோன் சலுகை ரூ.159 விலையில் கிடைக்கிறது. புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிகளவு டேட்டா வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.159 சலுகை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கி வரும் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    வோடபோன் ரூ.159 புதிய சலுகையில் 28 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அனைத்து 4ஜி வட்டாரங்களிலும் வோடபோன் புதிய சலுகை வழங்கப்படுகிறது, மேலும் இந்த சலுகை அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய சலுகை வோடபோன் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை.

    இத்துடன் புதிய சலுகை சென்னை, ஆந்திரா, மும்பை, டெல்லி மற்றும் குஜராத் போன்ற வட்டாரங்களிலும் இதுவரை வழங்கியதாக தகவல் இல்லை. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வோடபோன் ரூ.159 சலுகையில் 28 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும், முழு வேலிடிட்டிக்கும் 100 பிரத்யேக நம்பர்களுக்கு அழைக்க முடியும் என வோடபோன் தெரிவித்துள்ளது. 28 ஜிபி டேடட்டா, தினமும் 1 ஜிபி வீதம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வெவ்வேறு வட்டாரங்களில் எஸ்.எம்.எஸ். சலுகையை மாற்றுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். சில இடங்களில் முழு சலுகைக்கும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து வழங்கி வரும் ரூய149 சலுகையில், எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. 

    ஏர்டெல் வழங்கும் ரூ.149 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றியும், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் வரை இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
    கேரளாவில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஏர்டெல் போன்றே ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFlood #TelecomOffers


    கேரளாவில் கனமழை பெய்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் மக்களுக்கு இலவச சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. ஏர்டெல் நிறுவன சலுகை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வோடபோன், ஜியோ, பி.எஸ்.என்.எல். மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது.

    பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகைகளும், போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு தங்களது கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் சார்பில் பல்வேறு பகுதிகளில் இலவச வைபை, வாய்ஸ் கால் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் ஸ்டோர்களில் பயனர்கள் தங்களின் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ சார்பில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா சலுகை ஒரு வாரத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 


    கோப்பு படம்

    வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.30 டாக்டைம், 1 ஜிபி மொபைல் டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு டேட்டா தானாக தங்களது அக்கவுன்ட்-இல் கிரெடிட் செய்யப்படுகிறது.வாய்ஸ் கால் சேவையை ஆக்டிவேட் செய்ய CREDIT என டைப் செய்து 144 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியோ அல்லது *130*1# டையல் செய்ய வேண்டும். வோடபோன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகள் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.

    ஐடியா பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.10 கிரெடிட் வழங்கப்படுகிறது. பயனர்கள் *150*150# என டையல் செய்து உடனடியாக டாக்டைம் பெறலாம். அனைத்து பிரீபெயிட் பயனர்களுக்கும் 1 ஜிபி இலவச டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச டேட்டா பயனர்களுக்கு தானாக ஆக்டிவேட் செய்யப்படும். ஐடியாவும் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகள் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். சார்பில் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா அடுத்த ஏழு நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
    வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைப்புக்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் உருவெடுக்கிறது. #Vodafone #idea


    வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைப்புக்கு அரசு சார்பில் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் புதிய டெலிகாம் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கிறது. ஒட்டுமொத்த டெலிகாம் சந்தையில் 35 சதவிகித பங்கு மற்றும் 43 கோடி பயனர்களுடன் முதலிடம் பிடிக்கிறது. தற்சமயம் 34.4 கோடி பயனர்களுடன் பாரதி ஏர்டெல் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருக்கிறது.

    இருநிறுவனங்கள் இணைப்பு சார்ந்த விவரம் தெரிந்த மூத்த டெலிகாம் அதிகாரி கூறும் போது, இருநிறுவனங்கள் இணைப்புக்கு இறுதி ஒப்புதல் அளித்து விட்டது. இனி இருநிறுவனங்களும் கம்பெனிகள் பதிவாளர் மூலம் ஏற்கனவே பெற்ற அனுமதிகள் மூலம் இறுதிகட்ட பணிகளை துவங்குகின்றன.

    டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இதர நீதிமன்றங்களின் முடிவுகளுக்கு கட்டுப்படும் பட்சத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    ஜூலை 9-ம் தேதி மத்திய டெலிகாம் துறை இருநிறுவனங்கள் இணைப்புக்கு நிபந்தணைகள் நிறைந்த ஒப்புதலை வழங்கி, இணைப்பை பதிவு செய்ய நிபந்தனைகளை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் ரூ.7,268.78 கோடியை அரசாங்கத்திற்கு செலுத்தின. இதில் ரூ.3,926.34 கோடி ரொக்கமாகவும், ரூ.3,342.44 கோடி வங்கி கியாரண்டி மூலம் செலுத்தப்பட்டன.

    ஐடியா மற்றும் வோடபோன் இணைப்புக்கு பின் டெலிகாம் நிறுவன மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக தலைவராக குமார் மங்கலம் பிர்லாவும் புதிய தலைமை செயல் அதிகாரியாக பலேஷ் ஷர்மா செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒன்றிணைந்த நிறுவனத்தில் வோடபோன் நிறுவனம் 45.1% பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமம் 26% மற்றும் பங்குதாரர்கள் 28.9 சதவிகித பங்குகளை வைத்திருப்பர்.  #Vodafone #idea
    ×