என் மலர்
தொழில்நுட்பம்

X
ரூ.295 விலையில் ஐடியா செல்லுலார் புதிய சலுகை அறிவிப்பு
By
மாலை மலர்17 Oct 2018 11:46 AM IST (Updated: 17 Oct 2018 11:46 AM IST)

ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.295 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Idea
ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஐடியா அறிவித்து இருக்கும் புதிய சலுகை விலை ரூ.295 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.
42 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள ஐடியா செல்லுலார் புதிய பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 5 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் வழங்கப்படுகிறது. எனினும் வாய்ஸ் கால் அளவு தினசரி அடிப்படையில் 250 நிமிடங்களும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவுற்றதும், வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா என்றும், சலுகையில் வழங்கப்படும் 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், 10 கே.பி. டேட்டா கட்டணம் 4 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் ரூ.299 விலையில் வழங்கும் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகையில் டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. சில வட்டாரங்களில் மட்டும் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ரூ.299 சலுகையில் எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் ரூ.279 விலையில் வழங்கும் சலுகை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. அதிக வேலிடிட்டி வழங்கும் விலை குறைந்த சலுகையாக இது இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
எனினும் ஐடியா சலுகையை போன்று வோடபோன் சலுகையிலும் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
Next Story
×
X