search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Open"

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் நடால் 9-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தீயமை கடுமையாக போராடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு நுழைந்தார். #USOpen2018 #nadal
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) கால் இறுதியில் 9-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தீயமை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார்.

    இதன் முதல் செட்டை நடால் ஒரு புள்ளி கூட பெறாமல் 0-6 என்ற கணக்கில் இழந்தார். அதற்கு அடுத்த இரண்டு செட்டை நடால் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 4-வது செட்டை டொமினிக் வென்றார். வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது செட்டை நடால் கைப்பற்றி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 0-6, 6-4, 7-5, 6-7 (4-7), 7-6 (7-5),

    நடால் இந்த வெற்றியை பெற மிகவும் கடுமையாக போராடினார். 4 மணி 48 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே அவரால் வெற்றிபெற முடிந்தது.

    நடால் அரை இறுதியில் 3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோ (அர்ஜென்டினா)வை சந்திக்கிறார். #USOpen2018 #nadal
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னரை வீழ்த்தி டெல்போட்ரா அரை இறுதிக்கு தகுதி பெற்றார். #USOpen2018 #delPotro
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோ (அர்ஜென்டினா) கால்இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னரை (அமெரிக்கா) சந்தித்தார்.

    இதில் டெல்போட்ரோ 6-7 (5-7), 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதியில் நுழைந்தார்.  #USOpen2018 #delPotro
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். #USOpen #SerenaWilliams
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள்  இன்று நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (வயது 36), செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.



    துவக்கத்தில் சற்று பின்தங்கியிருந்த செரீனா, அதன்பின்னர் அபாரமாக விளையாடி 6-4, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் தொடர்ந்து 9 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் லத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை எதிர்கொள்கிறார். இவர் காலிறுதியில் நடப்பு சாம்பியனான ஸ்லோவன் ஸ்டீபன்சை வீழ்த்தியவர். எனவே, அரையிறுதி ஆட்டத்தில் செரீனா கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.

    கடந்த செப்டம்பர் மாதம் குழந்தை பெற்றபிறகு முதல்  கிராண்ட் ஸ்லாம் கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் செரீனா. #USOpen #SerenaWilliams
    அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சிலிச் 7-6, 8-6, 6-2, 6-4 என்ற கணக்கில் டேவிட் கோபினை வீழத்தி கால் இறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷரபோவா அதிர்ச்சிகரமாக தோற்றார். #USOpen
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    7-வது வரிசையில் இருக்கும் சிலிச் (குரோஷியா) 7-6, (8-6), 6-2, 6-4 என்ற கணக்கில் 10-வது வரிசையில் இருக்கும் டேவிட் கோபினை (பெல்ஜியம்) வீழத்தினார். அவர் கால் இறுதியில் நிஷி கோரியை (ஜப்பான்) சந்திக்கிறார். நிஷிகோரி 6-3, 6-2, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரர் பிலிப்பை தோற்கடித்தவர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியனும், தர வரிசையில் 22-வது இடத்தில் இருப்பவருமான ‌ஷரபோவா (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.



    ஸ்பெயினைச் சேர்ந்த கர்லா சுராஸ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற கணக்கில் சிபுல்கோவாவையும் (சுலோவாக்கியா), நவ்மி ஒசாகா (ஜப்பான்) 6-3, 2-6, 6-4 என்ற கணக்கில் ‌ஷப்லென்காவையும் (பெலாரஸ்), லெசியா சுரென்கோ (உக்ரைன்) 6-7 (3-7), 7-5, 6-2 என்ற கணக்கில் வான்ட்ரோ கோவாவையும் (செக்குடியரசு) தோற்கடித்து கால் இறுதியில் நுழைந்தனர்.

    கால் இறுதி ஆட்டங்களில் சுராஸ்-கெய்ஸ், ஒசாகா- சுரென்கோ மோதுகிறார்கள். #USOpen
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் ஜோ சவுசாவை வீழ்த்திய நோவக் ஜோகோவிச் காலிறுதியில் நுழைந்தார். #USOpen2018 #NovakDjokovic #JoaoSousa
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில், செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிக்கும், போர்ச்சுக்கல்லை சேர்ந்த ஜோ சவுசாவும் மோதினர்.

    போட்டியின்  ஆரம்பத்தில் இருந்தே ஜோகோவிச் விட்டுக் கொடுக்காமல் விளையாடினார். இதனால் முதல் செட்டை 6 -3 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6 - 4 என்ற கணக்கிலும் வென்றார். மூன்றாவது சுற்றையும் 6 - 3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
     
    இறுதியில்,  ஜோகோவிச் 6-3 6-4 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் ஜோகோவிச் பரம எதிரியான ரோஜர் பெடரருடன் மோதுகிறார். #USOpen2018 #NovakDjokovic #JoaoSousa
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பிலிப் கோல்ஸ்கரைபரை வீழ்த்திய கெய் நிஷிகோரி காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 KeiNishikori #PhilippKohlschreiber
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில், ஜப்பானை சேர்ந்த கெய் நிஷிகோரியும், ஜெர்மனியை சேர்ந்த பிலிப் கோல்ஸ்கிரைபரும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நிஷிகோரி அபாரமாக ஆடினார். இதனால் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார்.

    இரண்டாவது செட்டை கைப்பற்ற வேண்டும் என இருவரும் தீவிரமாக ஆடினர். ஆனால், நிஷிகோரி திறமையாக விளையாடி 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் வென்றார்.

    மூன்றாவது சுற்றில் கோல்ஸ்க்ரைபர் சற்று நெருக்கடி தந்தாலும், சுதாரித்துக் கொண்ட நிஷிகோரி மூன்றாவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
     
    இறுதியில், நிஷிகோரி 6-3 6-2 7-5 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் நிஷிகோரி மரின் சிலிச் அல்லது டேவிட் கோல்பினுடன் மோதுகிறார். #USOpen2018 KeiNishikori #PhilippKohlschreiber
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்திய ரபெல் நடால் காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 #RafaelNadal
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நிகோலஸ் 
    பாசிலாஷ்விலியும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நடால் அதிரடியக ஆடினார். இதனால் 6-3, 6-3 என முதல் இரண்டு செட்களை  கைப்பற்றினார்.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட நிகோலஸ், மூன்றாவது செட்டை போராடி 7-6 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து, நான்காவது சுற்றில் நடால் 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    இறுதியில், ரபெல் நடால் 6-3 6-3 6-7(6) 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

    காலிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீமுடன்  மோதுகிறார். #USOpen2018 #RafaelNadal
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பெடரர், ஜோகோவிச் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். #USOpen2018 #NovakDjokovic
    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பெடரர், ஜோகோவிச் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். முன்னணி வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.



    ஆண்கள் பிரிவில் 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசை தோற்கடித்து 17-வது முறையாக அமெரிக்க ஓபனில் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை எளிதில் வீழ்த்தினார்.

    முன்னாள் சாம்பியனான குரோஷியாவின் மரின் சிலிச், ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மல்லுகட்டினார். இதில் முதல் இரு செட்டுகளை பறிகொடுத்த (4-6, 3-6) மரின் சிலிச் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு எஞ்சிய மூன்று செட்டுகளை 6-3, 6-4, 7-5 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார்.

    பெண்கள் பிரிவில் 5-ம் நிலை வீராங்கனையான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 5-7, 1-6 என்ற நேர் செட்டில் 20-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவிடம் (பெலாரஸ்) மண்ணை கவ்வினார். இதன் மூலம் சபலென்கா, கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக 4-வது சுற்றை எட்டியுள்ளார்.

    இதே போல் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், விம்பிள்டன சாம்பியனுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் 3-வது சுற்றை தாண்டவில்லை. அவரை 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சுலோவக்கியாவின் சிபுல்கோவா விரட்டினார். இதே போல் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் பிரான்சின் கரோலின் கார்சியா 7-5, 4-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் 24-ம் நிலை வீராங்கனை சுவாரஸ் நவரோவிடம் (ஸ்பெயின்) 2 மணி 24 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரிய ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) துவம்சம் செய்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஜப்பானின் நவோமி ஒசாகா தன்னை எதிர்த்த சாஸ்னோவிச்சுக்கு (பெலாரஸ்) ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி கண்டு மிரட்டினார்.  #USOpen2018 #NovakDjokovic
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் கெவின் ஆண்டர்சனை வீழ்த்திய டொமினிக் தீம் காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 #DominicThiem
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீம் மற்றும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கெவின் ஆண்டர்சனும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே டொமினிக் தீம் அபாரமாக விளையாடினார். இதனால் 7- 5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

    தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டிலும் டொமினிக் தீம் சிறப்பாக விளையாடினார். இதனால் இரண்டாவது செட்டை 6 -2 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 7-6(2) என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், டொமினிக் தீம் 7-5 6-2 7-6(2) என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி போட்டியில் டொமினிக் தீம் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் அல்லது நிகோலஸ் பாசிலாஸ்விலியுடன் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #DominicThiem
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ரஷ்ய வீரர் காரென் கச்சனோவை விழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #RafaelNadal
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்ய வீரர் காரென் கச்சனோவும், ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் கச்சனோவ் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7 - 5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் ரபெல் நடால் சுதாரித்துக் கொண்டு தனது அதிரடியை ஆரம்பித்தார். அதனால் இரண்டாவது செட்டை 6 - 5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    மூன்றாவது மற்றும் நான்காவது செட்களில் கச்சனோவ் நடாலுக்கு கடும் சவாலாக விளங்கினார். மூன்றாவது செட்டை 7 - 6 என்ற கணக்கிலும், நான்காவது செட்டை 7 - 6 என்ற கணக்கிலும் ரபெல் நடால் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், ரபெல் நடால் 5 - 7, 6 - 5, 7- 6, 7 - 6 என்ற கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #RafaelNadal
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பைரேவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர். #USOpen2018 #RogerFederer
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஐந்து முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரரும் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பைரேவும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெடரர் சிறப்பாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7 -5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 6-4 என்ற கணக்கிலும்  பெடரர் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், ரோஜர் பெடரர் பெனோயிட் பைரேவை 7-5, 6-4. 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். முன்னணி வீரரான பெடரர் மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோசுடன் மோதுகிறார். #USOpen2018 #RogerFederer
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் பிரிட்டிஷ் வீரர் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்தார். #USOpen2018 #AndyMurray
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிரிட்டிஷ் வீரர் ஆண்டி முர்ரேவும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெர்னாண்டோ வெர்டஸ்கோவும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆண்டி முர்ரேவுக்கு கடும் சவாலாக விளங்கினார் வெர்டஸ்கோ. இதனால் முதல் செட்டை 7 -5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆண்டி முர்ரே இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    ஆனால் அதற்கு அடுத்த இரு செட்களையும் வெர்டஸ்கோ அபாரமாக ஆடினார். இதனா;, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    இறுதியில், வெர்ட்ஸ்கோ ஆண்டி முர்ரேவை 7-5, 2-6, 6-4. 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். முன்னணி வீரரான ஆண்டி முர்ரே இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். #USOpen2018 #AndyMurray
    ×