search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்- நடால் போராடி வெற்றி
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்- நடால் போராடி வெற்றி

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் நடால் 9-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தீயமை கடுமையாக போராடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு நுழைந்தார். #USOpen2018 #nadal
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) கால் இறுதியில் 9-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தீயமை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார்.

    இதன் முதல் செட்டை நடால் ஒரு புள்ளி கூட பெறாமல் 0-6 என்ற கணக்கில் இழந்தார். அதற்கு அடுத்த இரண்டு செட்டை நடால் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 4-வது செட்டை டொமினிக் வென்றார். வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது செட்டை நடால் கைப்பற்றி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 0-6, 6-4, 7-5, 6-7 (4-7), 7-6 (7-5),

    நடால் இந்த வெற்றியை பெற மிகவும் கடுமையாக போராடினார். 4 மணி 48 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே அவரால் வெற்றிபெற முடிந்தது.

    நடால் அரை இறுதியில் 3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோ (அர்ஜென்டினா)வை சந்திக்கிறார். #USOpen2018 #nadal
    Next Story
    ×