என் மலர்

  நீங்கள் தேடியது "Karolina Pliskova"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
  • மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.

  நியூயார்க்:

  கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

  இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அரினா சபலென்கா, அமெரிக்காவின் டேனியல் கொலின்சுடன் மோதினார். இதில் சபலென்கா 3-6, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

  இதேபோல், செக் குடியரசைச் சேர்ந்த பிளிஸ்கோவா, பெலாரசைச் சேர்ந்த விக்டோரியா அசரென்காவுடன் மோதினார். இதில் பிளிஸ்கோவா அபாரமாக விளையாடி 7-5, 6-7, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எட்டு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடும் உலக பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் கரோலினா பிளிஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #WTAFinals
  பெண்களுக்கான டென்னிஸ் அசோசியேசன் சார்பில் உலக டென்னிஸ் பைனல்ஸ் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் 8 பேர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

  8 வீராங்கனைகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியில் நான்கு பேர் இடம்பெறுவார்கள். லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு பேர் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

  ‘ஒயிட் (White) பிரிவில் இடம்பிடித்துள்ள கரோலினா பிளிஸ்கோவா, பெட்ரா கிவிட்டோவை எதிர்கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். #USOpen #SerenaWilliams
  நியூயார்க்:

  கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள்  இன்று நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (வயது 36), செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.  துவக்கத்தில் சற்று பின்தங்கியிருந்த செரீனா, அதன்பின்னர் அபாரமாக விளையாடி 6-4, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் தொடர்ந்து 9 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் லத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை எதிர்கொள்கிறார். இவர் காலிறுதியில் நடப்பு சாம்பியனான ஸ்லோவன் ஸ்டீபன்சை வீழ்த்தியவர். எனவே, அரையிறுதி ஆட்டத்தில் செரீனா கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.

  கடந்த செப்டம்பர் மாதம் குழந்தை பெற்றபிறகு முதல்  கிராண்ட் ஸ்லாம் கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் செரீனா. #USOpen #SerenaWilliams
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கால்இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவிடம் தோல்வி அடைந்தார். #SimonaHalep #MadridOpen
  மாட்ரிட்:

  மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா), 6-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். இதில் பிளிஸ்கோவா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் மாட்ரிட் ஓபனில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஹாலெப்பின் ‘வீறுநடை’ முடிவுக்கு வந்தது.


  கரோலினா

  மற்றொரு கால்இறுதியில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 4-6, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் புயல் மரிய ஷரபோவாவை (ரஷியா) தோற்கடித்தார்.

  ஆண்கள் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் டேவிட் கோபினை (ஸ்பெயின்) வெளியேற்றினார். இன்னொரு ஆட்டத்தில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் மிலோஸ் ராவ்னிக்கை வீழ்த்தினார்.

  இதன் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் கூட்டணி 6-4, 6-7 (4), 5-10 என்ற செட் கணக்கில் ரவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா)- மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடியிடம் போராடி வீழ்ந்தது.   #SimonaHalep #MadridOpen
  ×