என் மலர்

  நீங்கள் தேடியது "Kei Nishikori"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை ஜப்பான் வீரர் நிஷிகோரி வீழ்த்தினார். #ATPFinal #RogerFederer #KeiNishikori
  லண்டன்:

  ‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலை நகர் லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)-9-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் மோதினார்கள். 1 மணி 27 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் பெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கினார்.  ‘குயர்டன்’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 7-6 (7-5), 7-6 (7-1) என்ற நேர்செட்டில் 7-ம் நிலை வீரர் மரின் சிலிச்சை (குரோஷியா) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடம் நீடித்தது.  #ATPFinal #RogerFederer #KeiNishikori
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். #USOpen #Djokovic
  நியூயார்க்:

  கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) மூன்றாம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் போது நடாலின் வலது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டதால் பாதியில் விலகினார். எனவே, டெல்போட்ரோ வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார்.

  மற்றொருஅரையிறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி பலப்பரீட்சை நடத்தினர். இதில், ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.  அமெரிக்க ஓபனில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை எதிர்கொள்ள உள்ளார். இப்போட்டியில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றால், அமெரிக்காவின் பீட் சாம்ராசின் சாதனையை (14 கிராண்ட் ஸ்லாம்) சமன் செய்வார். #USOpen #Djokovic

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பிலிப் கோல்ஸ்கரைபரை வீழ்த்திய கெய் நிஷிகோரி காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 KeiNishikori #PhilippKohlschreiber
  நியூயார்க்:

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

  இதில், ஜப்பானை சேர்ந்த கெய் நிஷிகோரியும், ஜெர்மனியை சேர்ந்த பிலிப் கோல்ஸ்கிரைபரும் மோதினர்.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நிஷிகோரி அபாரமாக ஆடினார். இதனால் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார்.

  இரண்டாவது செட்டை கைப்பற்ற வேண்டும் என இருவரும் தீவிரமாக ஆடினர். ஆனால், நிஷிகோரி திறமையாக விளையாடி 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் வென்றார்.

  மூன்றாவது சுற்றில் கோல்ஸ்க்ரைபர் சற்று நெருக்கடி தந்தாலும், சுதாரித்துக் கொண்ட நிஷிகோரி மூன்றாவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
   
  இறுதியில், நிஷிகோரி 6-3 6-2 7-5 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் நிஷிகோரி மரின் சிலிச் அல்லது டேவிட் கோல்பினுடன் மோதுகிறார். #USOpen2018 KeiNishikori #PhilippKohlschreiber
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜப்பான் வீரர் நிஷிகோரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் செர்பியா வீரர் ஜோகோவிச். #Wimbledon2018 #Djokovic #nishikori
  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

  முதல் காலிறுதியில் 12-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 24-ம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை நிஷிகோரி 6-3 எனக் கைப்பற்றினார்.  அதன்பின் இரண்டு செட்டுகளையும் 6-2, 6-2 என எளிதில் கைப்பற்றி ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த முதல் சுற்றில் செர்பிய வீரர் டுகோவிச் மற்றும் ஜப்பான் வீரர் நிஷிகோரி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். #ItalianOpen #NovacDjokovic #KeiNishikori
  ரோம்:

  இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நேற்று முதல் தொடங்கியது. இந்த தொடர் வரும் 20-ம் தேதி வரை நடக்கிறது.

  இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. இதில் செர்பிய வீரர் நோவாக் டுகோவிச் மற்றும் உக்ரேனிய வீரர் அலெக்சாண்டர் டோகோபோலோவ் ஆகியோர் மோதினர்.

  முதலில் இருந்தே டுகோவிச் சிறப்பாக விளையாடினார். இதனால் 6-1 என்ற கணக்கில் எளிதில் முதல் சுற்றை கைப்பற்றினார். இதேபோல் இரண்டாவது பொறுப்பாக விளையாடியதால் 6-3 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றிலும் வென்றார்.

  இறுதியில், டுகோவிச் 6-1 6-3 என்ற கணக்கில் டோகோபோலோவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

  இதேபோல், மற்றொரு போட்டியில் ஜப்பான் வீரர் நிஷிகோரியும், ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபசும் மோதினர். இந்த போட்டியில் நிஷிகோரி போராடி 7-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
  #ItalianOpen #NovacDjokovic #KeiNishikori
  ×