search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRAINING WORKSHOP"

    • கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார்.
    • தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறையின் ஐ.இ.(ஐ), ஸ்கேன் ஆகிய துறை சார்ந்த கழகங்களின் சார்பில், 'ஜாவா மென்பொருளை பயன்படுத்தி எந்திரவழி கற்றல்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். இணை பேராசிரியர் கேசவராஜா வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்களின் செயல்திட்ட பணி, அதன் முக்கியத்துவம் மற்றும் எந்திரவழி கற்றல், அதனால் ஏற்படும் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி இனிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கேசவராஜா, பவானி மற்றும் கணினிதுறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற பேராசிரியர் தணிகாசலம் கலந்து கொண்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அகதர உறுதிப் பிரிவின் சார்பில், 'அனுபவ கற்றல்- தொடர்பு திறனை மேம்படுத்தும் பயனுள்ள கருவி' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் லெனின் வரவேற்று பேசினார்.

    கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தணிகாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனுபவ கற்றலின் வகைகளை எடுத்துரைத்தார். மேலும் பல்வேறு பயிற்சிகள், செயல்பாடுகள் மூலம் தொடர்பு திறனை மேம்படுத்துவது குறித்தும் விளக்கி கூறினார். பேராசிரியர்கள் பாலு, ஷோலா பெர்னாண்டோ, முத்துகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி உள்தர மதிப்பீட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் நன்றி கூறினார்.

    • மதுரையில் சித்த மருத்துவமனைகள் சார்பில் பயிற்சி பட்டறை முகாமை நடத்தியது.
    • வங்கிக்கடன் பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பித்தல், பட்ஜெட் தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

    மதுரை

    மதுரையில் மடீட் ஷியா மற்றும் சித்த மருத்துவமனைகள், கிளீனிக் சங்கம் இணைந்து பயிற்சி பட்டறை முகாமை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவமனை மற்றும் கிளீனிக் சங்கத்தலைவர் ஜெ.ஜெயவெங்கடேஷ் வரவேற்றார். மடீட்சியா தலைவர் சம்பத் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், சித்த மருந்து நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து கிளஸ்டர் என்ற அமைப்பை ஏற்படுத்த மடீட்சியா முயற்சி செய்து வருகிறது. ஆயுஷ் தொழில்துறை வளர்ச்சிக்கு மடீட்சியா பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளது என்றார்.

    திரவியம் ஏற்றுமதி நிறுவனத்தின் விற்பனை நிர்வாகி பாஸ்டின் மதிப்புக்கூட்டிய மூலிகை உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் விதம் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஷியாம் நாராயணன், வங்கிக்கடன் பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பித்தல், பட்ஜெட் தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

    ஆதித்யா தொழிற் பயிற்சி தலைவர் செல்வ சுந்தர்ராஜன் நாட்டு மருந்துகளை பதிவு செய்தல், விற்பனை செய்தல் குறித்தும், மானியம், வங்கி கடன் குறித்தும் பேசினார்.

    சித்த மருத்துவமனைகள் சங்க பொருளாளர் மணிகண்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் சுவடியில் பயிற்சி பட்டறை வகுப்பு நடந்தது.
    • தொல்ஆவணங்கள் பட்டயவகுப்பு பயிலும் 44 மாணவிகளும், தமிழ்த்துறை பேராசிரியர்கள் 17 பேரும் பங்கேற்று பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறையில் தொல் ஆவணங்கள் பட்டய வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு "சுவடியியல்" பயிற்சிப்பட்டறை நடந்தது. முதல்வர் பழனீஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் பொன்னி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார். மதுரை அரசு அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் மருதுபாண்டியன் "சுவடி - ஓர் அறிமுகம், சுவடிப்பதிப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மதுரை, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு ஆய்வாளர். உதயகுமார் "சுவடி அழிவிற்கான காரணங்கள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பூங்கோதை, நன்றி கூறினார். இதில் தொல்ஆவணங்கள் பட்டயவகுப்பு பயிலும் 44 மாணவிகளும், தமிழ்த்துறை பேராசிரியர்கள் 17 பேரும் பங்கேற்று பயனடைந்தனர்.

    • பாசறை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
    • அப்துல்லா எம்.பி., தமிழன் பிரசன்னா ஆகியோர் இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்தனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி வரவேற்றார். கூட்டத்தில் திராவிட இயக்க வரலாறு குறித்து அப்துல்லா எம்.பி., மாநில சுயாட்சி குறித்து மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்ற 540 இளைஞரணி நிர்வாகி களுக்கு பயிற்சியளித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துவேல் நன்றி கூறினார்.

    முன்னதாக கடையநல்லூருக்கு வருகை தந்த அப்துல்லா எம்.பி.க்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா, ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், ரவிசங்கர், திவான் ஒலி, அழகுசுந்தரம், நகர செயலாளர்கள் அப்பாஸ், வக்கீல் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பனை ஓலையை பயன்படுத்தி பல்வேறு பொருட்களை உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி பட்டறையை நடந்தது
    • பல்வேறு பொருட்களை செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மத்திய மனிதவள மேம்பாடு மையத்தின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டியூசன் இன்னோவேசன் கவுன்சில் மற்றும் கல்லூரியின் தொழில் முனைவோர் அலகு இணைந்து பனை ஓலையை பயன்படுத்தி பல்வேறு பொருட்களை உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி பட்டறையை நடத்தியது.

    இதன் தொடக்க விழா கல்லூரியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது. முனைவர் மாலைசூடும் பெருமாள் இறைவணக்கம் பாடினார். இன்னோவேசன் கவுன்சில் அமைப்பாளர் முனைவர் நித்யானந்த ஜோதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, இன்னோவேசன் கவுன்சில் பணிகளை பாராட்டினார்.

    கல்லூரி செயலர் முனைவர் ஜெயக்குமார், பயிற்சி பட்டறையின் நோக்கங்களை விளக்கி பேசினார். மல்லிகை பனை பொருள் அங்காடியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் கிரேஷ் ஜூலியட் டயானா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பல்வேறு பொருட்களை செய்தனர். பயிற்சி பட்டறையின் முடிவில், இன்னோவேசன் கவுன்சில் செயல் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீேதவி நன்றி கூறினார்.


    • செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் போட்டானிக்ஸ் என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நடந்தது
    • பயிற்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஐ.இ.இ.இ. மாணவர்கள் பிரிவு எண் 61401 மற்றும் மின்னணுவியல் தொடர்பியல் துறை சார்பில், ஐ.இ.இ.இ. சென்னை பிரிவு நிதியுதவியுடன், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் போட்டானிக்ஸ்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், இணை பேராசிரியருமான மஞ்சித் வரவேற்று பேசினார்.

    ராம்கோ பொறியியல் கல்லூரி துறைத்தலைவர் காளியப்பன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணை பேராசிரியர் கேசவராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 'செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் போட்டானிக்ஸ்' என்ற தலைப்பில் பயிற்சி அளித்தனர். பேராசிரியர் பெனோ வாழ்த்தி பேசினார். முன்னதாக ஐ.இ.இ.இ. மாணவர் தலைவி கவுசியா, துணைத்தலைவி முத்து சுவேதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தனர். இப்பயிற்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • சாக்கடைகள் மற்றும் நச்சுத் தொட்டிகளில் அபாயகரமான கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும் கருத்து பட்டறை நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர், நகராட்சி துப்புரவு அலுவலர், ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் சாக்கடைகள் மற்றும் நச்சுத் தொட்டிகளில் அபாயகரமான கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும் கருத்து பட்டறை நடந்தது. இதில் ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் கலந்துகொண்டு பேசினார்.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் சிவா, லோகநாதன், மணிவண்ணன் மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்சி ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உயிர்காக்கும் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது
    • பயிற்சி மூலம் 100 மாணவ, மாணவிகள் உயிர்காக்கும் அடிப்படை பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது

    திருச்சி:

    திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா உயிர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதில் ரோஸ் கார்டன் இணை மருத்துவ கல்லூரி, சர்வைட் கல்லூரி, பெரியார் மணியம்மை கல்லூரி, இந்திரா கணேசன் இணை மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த செவிலிய மாணவ, மாணவிகள் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் ஏகநாதன், டாக்டர் மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியினை யோககுரு சின்னையன் பயிற்றுவித்தார்

    அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி கல்வி பயிலரங்கம் டாக்டர்கள் கே. குணசேகரன், ராதாகிருஷ்ணன், சாய் விஸ்வநாத் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோரால் நடத்தப்பட்டு செயல்முறை பயிற்சி விளக்கம் அளிக்கப்பட்டது.

    முன்னதாக கல்வி பயிலரங்கத்திற்கு வந்திருந்தவர்களை ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.கோவிந்தராஜ் வரவேற்று பேசினார்.

    மேலும் ரோஸ் கார்டன் இணை மருத்துவ கல்லூரியின் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைகளும் கல்வி புத்தகங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் பி.சசிப்பிரியா கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    கல்வி பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற உதவி செய்த ஐதராபாத் அரவிந்த பார்முலா லிமிடெட் மற்றும் ஐதராபாத் தெர்போஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    பயிற்சி மூலம் 100 மாணவ, மாணவிகள் உயிர்காக்கும் அடிப்படை பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    ×