search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையில் பயிற்சி பட்டறை
    X

    ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையில் பயிற்சி பட்டறை

    • திருச்சி ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உயிர்காக்கும் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது
    • பயிற்சி மூலம் 100 மாணவ, மாணவிகள் உயிர்காக்கும் அடிப்படை பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது

    திருச்சி:

    திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா உயிர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதில் ரோஸ் கார்டன் இணை மருத்துவ கல்லூரி, சர்வைட் கல்லூரி, பெரியார் மணியம்மை கல்லூரி, இந்திரா கணேசன் இணை மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த செவிலிய மாணவ, மாணவிகள் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் ஏகநாதன், டாக்டர் மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியினை யோககுரு சின்னையன் பயிற்றுவித்தார்

    அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி கல்வி பயிலரங்கம் டாக்டர்கள் கே. குணசேகரன், ராதாகிருஷ்ணன், சாய் விஸ்வநாத் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோரால் நடத்தப்பட்டு செயல்முறை பயிற்சி விளக்கம் அளிக்கப்பட்டது.

    முன்னதாக கல்வி பயிலரங்கத்திற்கு வந்திருந்தவர்களை ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.கோவிந்தராஜ் வரவேற்று பேசினார்.

    மேலும் ரோஸ் கார்டன் இணை மருத்துவ கல்லூரியின் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைகளும் கல்வி புத்தகங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் பி.சசிப்பிரியா கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    கல்வி பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற உதவி செய்த ஐதராபாத் அரவிந்த பார்முலா லிமிடெட் மற்றும் ஐதராபாத் தெர்போஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    பயிற்சி மூலம் 100 மாணவ, மாணவிகள் உயிர்காக்கும் அடிப்படை பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×