search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Governor"

    • சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த காட்டியது பெருமை அளிக்கிறது.
    • காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.

    2022-2023-ம் ஆண்டில் 7.2 சதவீத நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சராசரி பண வீக்கத்தை பொருத்தவரை 2022-23-ம் ஆண்டிலும் நாட்டின் 6.65 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே கால கட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நமது மாநிலம் திறம் பட செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளது.

    மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால் 2021-2022-ல் 4-ம் இடத்தில் இருந்த நமது மாநிலம் 2022-2023-ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

    சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த காட்டியது பெருமை அளிக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.

    அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.

    மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகும்.

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைபடுத்த அனுமதிப்பதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

    மத்திய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

    நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் 16.85 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    முதலமைச்சரின் கனவுத்திட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிறுபான்மையினர், மீனவர்களை காப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

    பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. 5.59 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடியை உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.

    வரலாற்றிலேயே முதல்முறையாக பால் கொள்முதல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது.

    2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.

    மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வித்திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்.

    மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. விளையாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.

    3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.18,228 கோடியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.294 கோடியில் திட்டம் உள்ளது.

    ரூ.76 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.
    • தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.

    சென்னை:

    சட்டசபை நிகழ்விற்கு பின்னர் வெளியே வந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்தின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார்.

    * கோட்சே, சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் இல்லை தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி என்று சபாநாயகர் கூறினார்.

    * சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.

    * பாஜக வெளிநடப்பு செய்திருக்கலாம், ஆனால் அவை மாண்புக்கான அமர்ந்திருந்தோம்.

    * கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.

    * அவை மரபை மீறி, நிதி கோரிக்கை மற்றும் சாவர்க்கர், கோட்சே பற்றி சபாநாயகர் பேசி உள்ளார்.

    * கோட்சே என்று பேசி மரபில் இல்லாத வழியை சபாநாயகர் பின்பற்றி உள்ளார்

    * தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.

    * சபாநாயகர் தேவையில்லாத விஷயங்களை பேசியதால், கவர்னர் அவையில் இருந்து வெறியேறினார் என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குற்றச்செயல்களை தடுப்பதில் தமிழக அரசு சமரசம் இன்றி செயல்பட்டு வருகிறது.
    • நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு படித்த கவர்னர் உரையில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்:

    * புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

    * குற்றச்செயல்களை தடுப்பதில் தமிழக அரசு சமரசம் இன்றி செயல்பட்டு வருகிறது.

    * ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே அரசின் நோக்கம்.

    * குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழ்நாட்டில் ஒருபோதும் அமல்படுத்தப்போவதில்லை என்பதில் அரசு உறுதி.

    * மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்த பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை.

    * நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.

    * மருத்துவ சுற்றுலாவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.

    * கிண்டியில் குறுகிய காலத்தில் 1000 படுக்கைகளுடன் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.

    * ரூ.218 கோடி செலவில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பலன்.

    * முந்தைய ஆண்டுகளை விட 203 சதவீதம் அதிகமாக தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    * காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    * ரூ.4,861 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * 2ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை.

    * மீனவர்களின் நலனை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

    • கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முடித்துக்கொண்டார்.
    • தமிழக அரசின் உரையை கவர்னர் முழுமையாக படிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சட்டசபைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தலைமைச் செயலகத்தில் பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி உரையை தொடங்கினார். இதைத்தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.

    கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முடித்துக்கொண்டார்.

    உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுடன் முரண்படுகிறேன் என்று கூறிய கவர்னர் ஆர்.என்.ரவி 2 நிமிடங்களில் உரையை முடித்துக்கொண்டார்.

    தமிழக அரசின் கொள்கை விளக்க உரையை கவர்னர் முழுமையாக படிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.

    சபாநாயகர் வாசித்து வரும் உரையை, சட்டசபையில் அமர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டு வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வழக்கமாக சட்டசபை கூடும். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சட்டசபைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தலைமைச் செயலகத்தில் பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

    கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி உரையை தொடங்கினார். அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முடித்துக்கொண்டார்.

    • கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.
    • கடந்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வழக்கமாக சட்டசபை கூடும். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

    இதில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்புமரியாதை வழங்கப்படுகிறது.

    கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். கவர்னரின் செயலாளர் குமார் ஜெயந்தும் உடன் வருகிறார். சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

    சரியாக, காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்குகிறது. காலை 10.02 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த தொடங்குவார். சுமார் 40 நிமிடங்கள் அவரது உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, கவர்னர் உரையிலும் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். அந்த வகையில், இன்றைய கவர்னர் உரையிலும் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததும், அவரது ஆங்கில உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிக்க இருக்கிறார். அவர் பேசி முடித்ததும் இன்றைய கூட்டம் முடிவடையும். தொடர்ந்து, சபாநாயகர் அறையில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.

    அந்த கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது?, முதலமைச்சரின் பதில் உரை இடம் பெறும் தினம் ஆகியவை குறித்து முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

    கடந்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். தனது உரையில் பல பகுதிகளை அவர் தவிர்த்து பேசினார் என்று சர்ச்சை எழுந்தது. சற்று நேரத்தில் அவையில் இருந்து அவர் வெளியேறவும் செய்தார். அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த முறையும் அதுபோல் பரபரப்பு சம்பவம் எதுவும் நடந்துவிடுமோ? என்ற அச்சம் இருந்தது. ஆனால், அவ்வாறு நடக்க வாய்ப்பு இல்லை என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

    தொடர்ந்து வரும் 19-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அடுத்த நாள் (செவ்வாய்க்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

    இந்த விவாதம் 23-ந்தேதி வரை நடக்க வாய்ப்பு இருக்கிறது. நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றுகிறார்.

    அத்துடன், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும். பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதமும் தொடர்ந்து நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், மானிய கோரிக்கை விவாதம் ஜூன் மாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும்.

    • இந்தியா ஒரு பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக மட்டுமே பார்க்கப்பட்டது.
    • உலக நாடுகள் ஏங்கிய போது இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.

    திருச்சி:

    திருச்சி தனியார் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் செயலர்கள் முதல்வர்கள், நீண்ட காலமாக சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி கௌரவித்தார்.

    மேலும் கல்வி, கலை மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

    இந்தக் கல்லூரி மற்ற கல்லூரிகளை போல் அல்லாமல் ஆசிரமம் மூலமாக சிறப்பாக இயங்கி வருகிறது.

    இந்த நாட்டிற்கு என்னென்ன தேவையோ அதை உணர்ந்த பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார். இந்த பாரத பூமி புண்ணிய பூமி. இங்கு ஞானிகள் ரிஷிகள், முனிவர்கள் நிரம்ப இருக்கிறார்கள்.

    இந்த நாடு உலகத்தை ஒரு குடும்பமாக பாவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக மட்டுமே பார்க்கப்பட்டது.

    ஆனால் இன்றைக்கு உலக நாடுகள் நம்மை உற்று நோக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளால் இந்தியா பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.


    எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கம் இந்திய மக்களுக்கு மட்டு மல்லாமல் உலக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என தேசம் விரும்புகிறது.

    ஜி. 20 மாநாடு நடத்தி அதன் வாயிலாக இந்தியாவின் வளர்ச்சி உலகிற்கு பறைசாற்றப்பட்டது.

    கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரன் என்றில்லாமல் எல்லோரையும் உயிர்பலி வாங்கியது.

    அதில் இருந்து தப்பிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கமாட்டார்களா? என உலக நாடுகள் ஏங்கிய போது இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.

    பின்னர் அந்த தடுப்பூசி உலக நாடுகளுக்கும் சப்ளை செய்யப்பட்டது.

    அப்போது நாட்டு மக்களை காப்பாற்றாமல் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதாக பிரதமர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதில் நாட்டு மக்களையும் உலக மக்களையும் பிரதமர் நரேந்திர மோடி காத்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
    • பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லி சென்றுள்ளார்.

    தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசுடன் கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது உள்ளிட்டவைகளால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் கவர்னரும் முதலமைச்சரும் நேரடியாக அமர்ந்து பேசினார்கள். ஆனாலும் இதன் விவரம் வெளியிடப்படவில்லை.

    அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

    தற்போது தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 12-ந் தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.

    கடந்த ஆண்டு கவர்னர் உரையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், திராவிட மாடல் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு கவர்னர் ரவி உரையாற்றினார். அத்துடன் அவராகவே சிலவற்றையும் கவர்னர் உரையில் சேர்த்து வாசித்தார். இதனால் தமிழ்நாடு சட்டசபையில் அரசின் உரை மட்டுமே இடம் பெறும். கவர்னர் தன்னிச்சையாக வாசித்த உரை இடம்பெறாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். உடனே சட்ட சபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையானது.

    அண்மையில் கேரளா சட்டசபையில் கவர்னர் முகமது ஆரிப் கான், மாநில அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் 1.15 நிமிடம் மட்டுமே வாசித்து விட்டு வெளியேறியதும் பெரும் சர்ச்சையானது. இப்பின்னணியில் தமிழ்நாடு சட்டசபை வரும் 12-ந் தேதி கூடுகிறது. பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை இடம்பெற உள்ளது. இம்முறை கவர்னர் ரவி என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கப் போகிறார்? என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இச்சூழலில் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். டெல்லிக்கு 3 நாட்கள் பயணமாக செல்லும் கவர்னர் ரவி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு நிலவரம் குறித்து கவர்னர் ரவி ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

    • வண்ணார்பேட்டையில் கவர்னர் வரும் போது கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
    • கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 800 போலீசார் நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நெல்லை மனோணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார்.

    அவர் அங்கிருந்து கார் மூலமாக நெல்லை மாநகர பகுதி வழியாக நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வளாகத்திற்கு வந்தார். அவரது வருகையை ஒட்டி மாநகரப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் சமீபத்தில் மகாத்மா காந்தி குறித்து அவர் பேசியதை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வண்ணார்பேட்டையில் கவர்னர் வரும் போது கருப்பு கொடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை போலீசார் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காங்கிரஸ் அலுவலகம் முன்பு இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு அடைத்ததுடன் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட கண்காணிப்பு வாகனம் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்தது.

    இந்நிலையில், கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரசார் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சி அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து திரண்டனர். பின்பு அலுவலகம் முன்பு அமர்ந்து காந்தி பற்றி கவர்னர் பேசியதை கண்டித்து காந்தியின் புகழ் பாடும் ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பஜனை பாடலை பாடி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 800 போலீசார் நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன்.

    சென்னை:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அரசு சார்பில் அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பதிவில்,

    மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    புதுக்கோட்டை:

    காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சித்தன்ன வாசல் சுற்றுலாத்தலத்தை பார்வையிட இருந்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதற்கிடையே கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் சித்தன்னவாசல் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. சித்தன்னவாசலுக்கு பிற்பகல் 3 மணியளவில் கவர்னர் செல்ல இருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நிர்வாக காரணங்களால் கவர்னர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • பண்டிகை, தொடர் விடுமுறை காலங்களில் வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
    • சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் உள்ள 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை ஓவியங்கள், சமணர் படுக்கைகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. இவற்றை மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.

    அதனருகே தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வரும் படகு சவாரி செய்வதற்கான படகு குழாம் உள்ளது. மேலும், அறிவியல் பூங்கா, சிறுகல் பூங்கா உள்ளிட்டவையும் உள்ளன.

    இங்கு தினசரி சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பண்டிகை, தொடர் விடுமுறை காலங்களில் வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில், காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சித்தன்ன வாசல் சுற்றுலாத்தலத்தை பார்வையிட உள்ளார். இதைத்தொடர்ந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதற்கிடையே கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×