search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tn cabinet"

    • சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அமைசச்ரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
    • ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை கோட்டையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அமைசச்ரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை ஆகியவற்றை சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவது ஆபத்தானது என்பதால் அதை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான சூழல் குறித்தும் இதில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
    • ஏற்கனவே இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூலை 27-ந்தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்திருந்தது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை கோட்டையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்துக்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகள் மீது விவாதித்து முடிவெடுக்க உள்ளனர்.

    குறிப்பாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 27-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டிருந்தது.

    608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன நோய் இருந்தது? அவருக்கு எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது? வெளிநாட்டுக்கு அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்லாதது ஏன்? என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

    ஜெயலலிதாவின் மரணத்தில் 'மர்மம்' இருப்பதாக கூறி வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்குமூலம், சசிகலாவின் வாக்குமூலம், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த வாக்குமூலம் அனைத்தும் அதில் விரிவாக இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

    இந்த அறிக்கையை சட்டசபை கூடும்போது வெளியிடலாமா? அல்லது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உடனே வெளியிடலாமா? என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கையும் அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதுவும் இன்னும் மக்கள் பார்வைக்கு வெளியிடாமல் உள்ளது.

    இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதால் சட்டசபையை எப்போது கூட்டலாம் என்பது பற்றியும் இதில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

    மேலும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான சூழல் குறித்தும் இதில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூலை 27-ந்தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆய்வு கூட்டங்கள் நடத்தி விவாதித்துள்ள நிலையில் இப்போது அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    இது தவிர பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம், புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன என்பது பற்றி இன்று இரவு அறிவிப்பாக வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முடிவெடுக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூடுகிறது. #TNGovt #Release7Innocents
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநர் விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.

    இதனை அடுத்து, 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில், 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து நிரூபர்கள் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்துள்ளார். #ADMK #OPanneerSelvam #TamilNaduCabinet
    திருப்பரங்குன்றம்:

    தமிழக துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி கும்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணியை தொடங்கி விட்டீர்களா?

    பதில்:- இடைத்தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இடைத்தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்படும். வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் அ.தி.மு.க. எடுக்கும்.

    கே:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப:- அ.தி.மு.க.வில் மிகப்பெரிய தர்மயுத்தத்துக்கு பிறகு தொண்டர்களின் ஆதரவுடன் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஒரு குடும்பத்திடம் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றி உள்ளோம். மீண்டும் அந்த குடும்பத்திடம் கட்சியை ஒப்படைக்க நாங்கள் தயார் இல்லை.

    கே:- அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி இருக்கிறாரே?

    ப:- அவரது கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

    கே:- ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடப்போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளாரே?


    ப:- நடிகர் கமல்ஹாசன் நொடிக்கு ஒருமுறை மாற்றி பேசி வருகிறார். எனவே அவரது பேச்சை பொருட் படுத்த தேவையில்லை.

    கே:- மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் பாரதிய ஜனதா காவி மயமாக்க முயல்வதாக குற்றம் சாட்டியது குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப:- அது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    கே:- தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?

    ப:- அமைச்சரவையை மாற்றுவது குறித்து முதல்- அமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்.

    கே:- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

    ப:- வருகிற பாராளு மன்ற தேர்தலில் அ.தி. மு.க. தலைமையில் கூட்டணி அமையும். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முதல்- அமைச்சரிடம் ஆலோசித்து முடிவு செய்வோம். இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். #ADMK #OPanneerSelvam #TamilNaduCabinet
    ×