search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.
    X
    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.

    தமிழக அமைச்சரவையில் மாற்றமா?- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து நிரூபர்கள் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்துள்ளார். #ADMK #OPanneerSelvam #TamilNaduCabinet
    திருப்பரங்குன்றம்:

    தமிழக துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி கும்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணியை தொடங்கி விட்டீர்களா?

    பதில்:- இடைத்தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இடைத்தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்படும். வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் அ.தி.மு.க. எடுக்கும்.

    கே:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப:- அ.தி.மு.க.வில் மிகப்பெரிய தர்மயுத்தத்துக்கு பிறகு தொண்டர்களின் ஆதரவுடன் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஒரு குடும்பத்திடம் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றி உள்ளோம். மீண்டும் அந்த குடும்பத்திடம் கட்சியை ஒப்படைக்க நாங்கள் தயார் இல்லை.

    கே:- அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி இருக்கிறாரே?

    ப:- அவரது கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

    கே:- ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடப்போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளாரே?


    ப:- நடிகர் கமல்ஹாசன் நொடிக்கு ஒருமுறை மாற்றி பேசி வருகிறார். எனவே அவரது பேச்சை பொருட் படுத்த தேவையில்லை.

    கே:- மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் பாரதிய ஜனதா காவி மயமாக்க முயல்வதாக குற்றம் சாட்டியது குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப:- அது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    கே:- தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?

    ப:- அமைச்சரவையை மாற்றுவது குறித்து முதல்- அமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்.

    கே:- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

    ப:- வருகிற பாராளு மன்ற தேர்தலில் அ.தி. மு.க. தலைமையில் கூட்டணி அமையும். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முதல்- அமைச்சரிடம் ஆலோசித்து முடிவு செய்வோம். இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். #ADMK #OPanneerSelvam #TamilNaduCabinet
    Next Story
    ×