search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatened"

    கணவரை சேர்த்து வைக்ககோரி ரகசிய திருமணம் செய்த ஆசிரியை எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சகாயபுரத்தை சேர்ந்தவர் ஷீலா (வயது 30). இவர் இன்று காலை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் காங்கயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் போது வெள்ள கோவிலை சேர்ந்த கவின்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

    நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் கடந்த 10.4.17 அன்று பெருந்துறையில் உள்ள ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டோம்.

    பிறகு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டோம். அவ்வப் போது சந்தித்து ஊட்டி, ஏற்காடு போன்ற ஊர்களுக்கு போய் வந்தோம்.

    இந்த நிலையில் நான் கர்ப்பம் ஆனேன். ஆனால் கணவரின் வற்புறுத்தலால் கர்ப்பத்தை கலைத்து விட்டேன்.

    இந்த நிலையில் எங்களது திருமணம் வி‌ஷயம் தெரிய வர கணவர் வீட்டில் உள்ளவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். திருமணம் செய்ததாக கூறினால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

    எனது காதல் கணவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டார்.

    இதனால் எனக்கு பாதுகாப்பு கொடுத்து காதல் கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு ஆசிரியை ஷீலா அந்த மனுவில் கூறி உள்ளார். 

    ஆட்டோ உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    கரிவலம்வந்தநல்லூர் பச்சேரியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். பகல் நேரத்தில் இவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இரவு நேரத்தில் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அய்யனார் மகன் மகாலிங்கம் (20) என்பவர் எடுத்து ஓட்டி வந்துள்ளார். மகாலிங்கம் இரவு நேரங்களில் குடித்து விட்டு ஆட்டோ ஸ்டாண்டில் அடிக்கடி தகராறு செய்துள்ளார். 

    இது குறித்து மற்ற ஆட்டோ டிரைவர்கள் வேல்முருகனிடம் தெரிவித்து உள்ளனர். இது பற்றி வேல்முருகன் அய்யனாரை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. இதனால் வேதனை அடைந்த வேல்முருகன் இனிமேல் ஆட்டோவை மகாலிங்கம் ஓட்ட வேண்டாம் என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் வேல்முருகனை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்தாராம். 

    இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர்.

    அபிஷேகப்பாக்கத்தில் நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஈஸ்வரன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவெங்கடாச்சலம் (வயது62). இவருக்கு தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இதற்கிடையே முத்து வெங்கடாசலத்துக்கும், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடாச்சலம் தனது உறவினர் மீனாட்சி (60) என்பவருடன் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து முத்துவெங்கடாச்சலம் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    சட்ட கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜாபர்அலி (வயது26). இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்து சட்ட கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மோந்திரேஸ் வீதி வழியாக சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் திடீரென ஜாபர்அலி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்கள். இதனை ஜாபர்அலி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ஜாபர்அலியை சரமாரியாக தாக்கினார்கள். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஜாபர்அலி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ஜாபர்அலியை தாக்கிய 4 வாலிபர்களை தேடிவருகிறார்கள்.

    போக்குவரத்து நெரிசலை சீர்செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    இரணியல்:

    இரணியல் அருகே கண்டன்விளை பாலவிளை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 54). இவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாலை நாகர்கோவிலை அடுத்த களியங்காடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சீர்செய்யும் பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை ஒதுக்கி நிறுத்துமாறு கூறினார்.

    இதில் ஆத்திரமடைந்த கார் டிரைவர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த கார் டிரைவர் போலீசாரை தாக்கினார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். காயம் அடைந்த ரத்தினத்தை குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து இரணியல் போலீசில் ரத்தினம் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் வழக்குபதிவு செய்து போலீசாரை தாக்கிவிட்டு சென்ற கார் டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
    மராட்டிய மாநிலத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
    அமராவதி:

    விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கான பாக்கி தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மராட்டிய மாநிலம் அமராவதி நகரில் காங்கிரஸ் கட்சியினர் சமீபத்தில் அமைதி பேரணி நடத்தினார்கள்.

    இந்த நிலையில், அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அமராவதி நகரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகே வீரரேந்திர ஜக்தாப், யாஷ்மோமாதி தாக்குர் என்ற இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்தனர். அவர்கள் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கும் முன் போலீசார் பாய்ந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். 
    ×