என் மலர்

  செய்திகள்

  இரணியல் அருகே போக்குவரத்து நெரிசலை சீர்செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
  X

  இரணியல் அருகே போக்குவரத்து நெரிசலை சீர்செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போக்குவரத்து நெரிசலை சீர்செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
  இரணியல்:

  இரணியல் அருகே கண்டன்விளை பாலவிளை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 54). இவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

  நேற்று மாலை நாகர்கோவிலை அடுத்த களியங்காடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சீர்செய்யும் பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை ஒதுக்கி நிறுத்துமாறு கூறினார்.

  இதில் ஆத்திரமடைந்த கார் டிரைவர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த கார் டிரைவர் போலீசாரை தாக்கினார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். காயம் அடைந்த ரத்தினத்தை குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

  இதுகுறித்து இரணியல் போலீசில் ரத்தினம் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் வழக்குபதிவு செய்து போலீசாரை தாக்கிவிட்டு சென்ற கார் டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
  Next Story
  ×