search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvilakku Pooja"

    • முத்துமாரியம்மன் தசரா குழுவினர் 38 வருடமாக தசரா திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
    • 7ம் திருவிழாவை முன்னிட்டு தசரா கூடம் முன்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே சேரகுளம் அருகே உள்ள சின்னார்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் தசரா குழுவினர் 38 வருடமாக தசரா திருவிழாவை நடத்தி வருகின்றனர். இங்கு வருடம் தோறும் தசரா திருவிழா மற்றும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி மற்றும் தசரா திருவிழா கால் நாட்டுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினம் தோறும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. 7ம் திருவிழாவை முன்னிட்டு தசரா கூடம் முன்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திருமணமான பெண்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடை முத்துமாரியம்மன் தசரா குழுவினர் செய்திருந்தனர்.

    • தசரா ஊர்வலத்தை கோவில் நிர்வாகி முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிகள் பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவையொட்டி 1.503 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற தசரா ஊர்வலத்தை கோவில் நிர்வாகி முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் வீதி உலா வந்தனர். சனிக்கிழமை குழந்தைகள் பங்குபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் 1503 பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இன்று காலை கோமாதா பூஜை, இரவு சாமகால பூஜை ஆகியவையும், நாளை (செவ்வாய்க்கிழமை) பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, பால்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிகள் பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. அன்று இரவு அம்பாள் சப்பரத்தில் வீதி உலா, சாம பூஜையும் நடைபெறுகிறது. புதன்கிழமை சிபு பூஜை, மஞ்சள் நீராட்டு மற்றும் அன்னதானத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாகப் பொறுப்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.
    • பூஜையில் பங்கேற்றவர்களிடம் வினாடி- வினா கேள்வி கேட்டு பரிசு வழங்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி இந்து முன்ன ணி, இந்து அன்னையர் முன்னணி சார்பில் 207 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    பூஜைக்கு மாநில இந்து முன்னணி நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி கிராமத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். பூஜையை இந்து அன்னையர் முன்னணி ஒன்றிய தலைவி பரமேஸ்வரி வழி நடத்தினார். இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி அன்னையை வழிப்பட்டனர்.

    விளக்கு பூஜையில் பங்கேற்றவர்களிடம் வினாடி- வினா கேள்வி கேட்டு பதிலளித்த வர்களுக்கு பரிசு வழங்க ப்பட்டது. இதில் கோவில் நிர்வாகி சுந்தர்ராஜ், இந்து அன்னையர் முன்னணி பூவுடையார்புரம் கிளைத் தலைவர் தங்கலட்சுமி, செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்து முன்னணி கிளை செயலர் சுதாகர் நன்றி கூறினார்.

    • வாலைகுருசுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது.
    • சுவாமி பிரகார வீதி உலா வந்து மணி மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாக காட்சி தந்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் சுவாமி உற்சவ விநாயகர், ஸ்ரீவாலாம்பிகை அம்பாள், சுவாமி சந்திரசேகரர் - மனோன்மணி அம்பாள் சமேதராக எழுந்தருள கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி பிரகார வீதி உலா வந்து மணி மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாக காட்சி தந்தனர். தொடர்ந்து சாயரட்சை பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார், இரவு சுவாமி உற்சவ விநாயகர் வாலாம்பிகை அம்பாள் சின்ன சப்பரத்திலும், பாலதிரிபுரசுந்தரி அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்திலும், நடராஜர் , சிவகாமி அம்பாள் மாணிக்கவாசகர் சமேதராக பெரிய சப்பரத்திலும், சந்திரசேகர் மனோன்மணி அம்பாள் சமேதராக ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உச்சிகால பூஜை, சிறப்பு அபிஷேகம், வாலாம்பிகை அம்பாள் சேத்திர வலம் வருதல், திருவிளக்கு பூஜை, திருவாசகம் முற்றோடுதல், இரவு சுவாமி சப்பர பவனி நடைபெற்றது. 6-ம் நாள் சாயரட்சை பூஜை, சொற்பொழிவு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம், ஸ்ரீவாலை குருகலா மன்றம் இணைந்து 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனை, பால்குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வருதல், இரவு சந்திரசேகர் - மனோன்மணி அம்பாள் சமேதராக கேந்திரம் வலம் வருதல், நடைபெற்றது.

    • வலம்புரி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
    • சிறப்பு அன்னதானம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி படேல் நகரில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜையில்கலந்துகொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு முதலியன கோவில் நிர்வாகிகள் வழங்கினர். சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முத்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    விநாயகரை தரிசிக்கவும், பூஜைகளுக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. 

    • சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
    • சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிபட்டி சிவபுரம் மூகாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கணபதிஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து அமாவாசை சிறப்பு யாகபூஜைகள் சிவசித்தர் முன்னிலையில் நடைபெற்றது.தொடர்ந்து பகவதி அம்மன், மூகாம்பிரை சமேத சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் க.ராமர் செய்திருந்தார்.

    • பத்திரகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு 1008 சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையண்ட் நகர் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காகவும், உலக மக்களை மிகவும் அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து மக்கள் முற்றிலுமாக விடுபட்டு ஆரோக்கியத் துடன் வாழ வேண்டியும், தொழில் வளம் பெறுகவும், நாட்டில் ஒற்றுமை ஓங்கவும், மழை வளம் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டியும், 1008 சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி பஜனை பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர்.

    சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்து ராஜன் நாடார், செயலாளர் ஆறுமுக பாண்டி நாடார், பொருளாளர் ஐகோர்ட் துரை நாடார், கொடை விழா தலைவர் முருகேசன் நாடார் மற்றும் ஆலய நிர்வா கத்தினர் மற்றும் காமராஜர் நற்பணி இயக்கத்தினரால் சிறப்பாக செய்திருந்தனர்.

    விளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள்,குங்குமம் அடங்கிய பிரசாத பை வழங்கபட்டது.

    • உக்கிர மாகாளியம்மன் கோவிலில் நான்காவது ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது.
    • இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சி,

    திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவிலில் நான்காவது ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று 1008 திருவிளக்கு பூஜை,சுமங்கலி பூஜை மற்றும் குபேர லட்சுமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிளக்கு பூஜையில் பங்கேற்பதால் வீட்டில் வறுமை கடன் நீங்க பெற்று செல்வம் பெருகும். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தென்னூர் தெய்வீக மகா சபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக தாமரை வடிவில் யாக குண்டம் அமைத்து உலக நன்மை வேண்டி லலிதா சகஸ்ஸர நாம யாகம் நடந்தது.
    • தொடர்ந்து மாலை வேதநாயகி சன்னதி முன்பாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    சங்கமேஸ்வரர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக தாமரை வடிவில் யாக குண்டம் அமைத்து உலக நன்மை வேண்டி லலிதா சகஸ்ஸர நாம யாகம் நடந்தது. சங்கமேஸ்வரர் கோவில் பாலாஜி சிவம் சிவாச்சாரியார் தலைமை யில் குழுவினர் மூலம் யாகம் நடை பெற்றது.

    இதனைத் தொடர்ந்து வேதநாயகி அம்மன் கோவிலில் உள்ள மூலவர் வேதநாயகி அம்மனுக்கு பெண்கள் 1008 பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால்குட அபி ஷேகம் நடைபெற்றது.

    இதில் பவானி, காளிங்க ராயன் பாளையம், குமார பாளையம் உள்பட பலேவறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேதநாயகி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து மாலை வேதநாயகி சன்னதி முன்பாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆடி கடைசி வெள்ளி விழா குழுவினர் செய்திருந்தனர்

    ×