search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theresa May"

    இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மர்கல் தற்போது 12 வாரம் கர்ப்பமாக இருப்பதாக கென்சிங்டன் அரண்மனை அலுவலகம் அறிவித்தது. #MeghanMarkle #Harry
    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்க நடிகை மேகன் மர்கலை காதலித்தார். இவர்களது திருமணம் கடந்த மே மாதம் லண்டனில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கோலாகலமாக நடந்தது.

    இந்த நிலையில் இளவரசர் ஹாரியின் மனைவி இளவரசி மேகன் மர்கல் கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 12 வாரம் கர்ப்பமாக இருப்பதாக கென்சிங்டன் அரண்மனை அலுவலகம் அறிவித்தது.

    ஹாரி-மேகன் தம்பதியின் முதல் குழந்தை அடுத்த ஆண்டு (2019) வசந்த காலத்தில் பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பசிபிக் கடலில் உள்ள தீவு நாடுகளான கோங்கா மற்றும் பிஜி நாடுகளில் ஹாரி-மேகன் தம்பதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தனர். பயணம் முடிந்து திரும்பிய அவர்கள் இந்த தகவலை வெளியிட்டனர்.


    இதை அறிந்ததும் ராணி எலிசபெத், அரச குடும்பத்தினர் மற்றும் இங்கிலாந்து மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ராணி எலிசபெத்துக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேகனின் தாயார் டோரியா ராக்லாந்தும் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஹாரி மேகன் தம்பதிக்கு பிறக்க போகும் குழந்தை இங்கிலாந்து அரச குடும்பத்தின் முடிசூட்டு வரிசையில் 7-வது இடத்தில் உள்ளது. #MeghanMarkle #Harry
    முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசிய போரிஸ் ஜான்சன், தனது கருத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் சக உறுப்பினர்களால் தவறாக சித்தரிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். #BorisJohnson #TheresaMay #ConservativeParty
    லண்டன்:

    பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சமீபத்தில் வெளியுறவு மந்திரி பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். இதற்கிடையே, டென்மார்க்கில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசினார்.

    மேலும், மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும் போது ஒருவர் மட்டும் முகத்தை மறைத்துக்கொண்டு மற்றொறுவருடன் பேசுவது தவறு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள பெண்கள் புர்கா அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு இருப்பதால் அவர்கள் வங்கிக்கொள்ளையர்கள் போல இருப்பதாகவும், புர்கா அடக்குமுறை சார்ந்தது எனவும் போரிஸ் ஜான்சன் கருத்து கூறியிருந்தார்.

    அவரது கூற்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால், பிரதமர் தெரேசா மே இதனை கண்டித்தார். பின்னர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி போரிஸ் ஜான்சன் மீது விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைத்தது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜான்சன் மீது கடுமையான நடவடிக்கையை தெரேசா மே எடுக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மீண்டும் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த போரிஸ் ஜான்சன், புர்கா குறித்த தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை என தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ’ புர்கா தொடர்பான எனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் தெரிவித்த கருத்துகளில் உறுதியாக உள்ளேன். என் சக நண்பகர்கள் எனது கருத்தில் உள்ள அர்த்தத்தை மிகவும் கவனத்துடன் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது, அவ்வாறு வெளியேறினால் அது நமக்கே  பாதகமாக முடியும் என்ற எனது வலுவான கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதற்கு எதிர்வினையாக புர்கா விவகாரத்தில் நான் தெரிவித்த கருத்துக்களை தவறாக சித்தரித்து மக்களிடையே கோபத்தை அதிகப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்’ என அவர் தெரிவித்தார்.  #BorisJohnson #TheresaMay #ConservativeParty
    பிரெக்ஸிட் தொடர்பான வர்த்தக மசோதாவில் உள்ள அம்சங்களுக்கு பல எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், பாராளுமன்றத்தில் மசோதா சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #Brexit #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பல்வேறு முக்கிய நடைமுறைகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக விலகி விடும் என்பதால் வர்த்தகம், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய யூனியனுடன் நடத்தப்பட்டு வருகிறது.

    பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரசா மே கையாளும் முறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

    ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பலர் தெரசா மே-வை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினர். இதனால், எரிச்சலடைந்த தெரேசா, “என் பின்னாள் நின்று எனக்கு ஆதரவாக இருங்கள். இல்லையெனில் பிரெக்சிட் ஒருபோதும் நிறைவேறாது”என எச்சரிக்கை விடுத்தார்.

    இவ்வாறாக, சொந்த கட்சியிலேயே எதிர்ப்பும் ஆதரவும் கலந்து இருந்த நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் தொடர்புடைய வர்த்தக மசோதாவை அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழ்சபையில் பிரதமர் தெரசா மே நேற்று தாக்கல் செய்தார். 318 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும் 285 பேர் மசோதாவை எதிர்த்தும் வாக்களித்தனர். 

    கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, மேல் சபையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பிரெக்சிட் விவகாரத்தில் அடிபணிந்து விடாமல் ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடருமாறு டிரம்ப் தனக்கு அறிவுறுத்தியதாக தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.#Trump #TheresaMay #suetheEU #Brexit
    லண்டன்:

    பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டு பிரதமர் தெரசா மேவுடன் இணைந்து கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது உரையாற்றிய டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரசா மேவிடம் நான் ஒரு ஆலோசனையை தெரிவித்தேன். ஆனால், அது காட்டுமிராண்டித்தனமானது என்று கூறிய தெரசா மே எனது ஆலோசனையை நிராகரித்து விட்டார் என குறிப்பிட்டிருந்தார்.

    தனக்கு டிரம்ப் கூறிய ஆலோசனை என்ன? என்பது தொடர்பாக தெரசா மே இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பி.பி.சி. நிருபரின் கேள்விக்கு பதிலளித்த தெரசா மே, ‘பிரெக்சிட் விவகாரத்தில் அடிபணிந்து விடாமல் ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடருமாறு டிரம்ப் எனக்கு அறிவுறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த நான், பேச்சுவார்த்தை மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புவதாக கூறி விட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார். #Trump #TheresaMay #suetheEU #Brexit
    பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின் பிரெக்சிட் திட்டம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அழித்துவிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். #BrexitPlan #TrumpWarnedTheresaMay #USTradeDeal
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறது பிரிட்டன். இதற்கான செயல் திட்டங்களை பிரிட்டன் பிரதமர் தெரசா உருவாக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 4 நாள் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அவருக்கு ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள  பிளென்ஹீம் அரண்மனையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, டிரம்ப் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்காவுடன் வர்த்தக உறவை விரும்புவதாக தெரசா மே குறிப்பிட்டார்.



    இந்நிலையில், ஒரு பத்திரிகைக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளை பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையாளும் விதத்தை விமர்சித்தார். பிரிட்டன் பிரதமரின் பிரெக்சிட் செயல்திட்டமானது, அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் எந்தவித வர்த்தக ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு நம்பிக்கையை சீர்குலைக்கும் என கூறியுள்ளார்.

    தற்போதைய திட்டப்படி அவர்கள் ஒப்பந்தம் செய்தால், நாங்கள் பிரிட்டனுடன் ஒப்பந்தம் செய்வதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்வோம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். #BrexitPlan #TrumpWarnedTheresaMay #USTradeDeal
    ×