search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brexit plan"

    பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    லண்டன்:

    2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள தெரசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார். இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.



    இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மே ஏற்கனவே நெருக்கடியான சூழலில் இருக்கும் நிலையில், மூத்த மந்திரி பதவி விலகி இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
    பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின் பிரெக்சிட் திட்டம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அழித்துவிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். #BrexitPlan #TrumpWarnedTheresaMay #USTradeDeal
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறது பிரிட்டன். இதற்கான செயல் திட்டங்களை பிரிட்டன் பிரதமர் தெரசா உருவாக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 4 நாள் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அவருக்கு ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள  பிளென்ஹீம் அரண்மனையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, டிரம்ப் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்காவுடன் வர்த்தக உறவை விரும்புவதாக தெரசா மே குறிப்பிட்டார்.



    இந்நிலையில், ஒரு பத்திரிகைக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளை பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையாளும் விதத்தை விமர்சித்தார். பிரிட்டன் பிரதமரின் பிரெக்சிட் செயல்திட்டமானது, அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் எந்தவித வர்த்தக ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு நம்பிக்கையை சீர்குலைக்கும் என கூறியுள்ளார்.

    தற்போதைய திட்டப்படி அவர்கள் ஒப்பந்தம் செய்தால், நாங்கள் பிரிட்டனுடன் ஒப்பந்தம் செய்வதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்வோம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். #BrexitPlan #TrumpWarnedTheresaMay #USTradeDeal
    ×