search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர்"

    • தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
    • தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிருமாம் பாக்கத்தில் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    கிருமாம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா சப்ளை செய்வதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் அந்த பகுதியிலிருந்த தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் 2 பேர் டாக்டர்கள் என்பது தெரியவந்தது.

    சென்னையை சேர்ந்த பல் டாக்டர் குற்றாலீஸ்வரன்(29), புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன்(26) மற்றும் கடலூர் மாவட்டம் அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் ரவிக்குமார்(29) என தெரியவந்தது.

    ரவிக்குமார் ரெட்டிச் சாவடியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது டாக்டர்கள் குற்றாலீஸ்வரனும் கார்த்திகேயனும் டீ கடைக்கு வரும்போது அவர்களுடன் என்ஜினீயர் ரவிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள் முதலில் ஆரோவில் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

    அதன்பிறகு தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர். அதில் நல்ல வருமானம் கிடைக்கவே சென்னையை சேர்ந்த கஞ்சா வியாபாரி விக்னேசிடம் கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.21 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • கடந்த மாதம் 17-ந் தேதி முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
    • அனைத்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் மூடக்கப்பட்டுவிட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் சையது சலாம் (வயது 36). இவர், வெளிநாட்டில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 3 மாதங்களாக புதுச்சேரியில் தங்கியிருந்தார். அப்போது இணைய வழி மோசடிக்காரர்கள் அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு, நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அன்றைய தினமே உங்களுக்கு 30 சதவீத லாபம் கொடுப்போம் என்று கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய அவர், கடந்த மாதம் 17-ந் தேதி முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்தவுடன் அவர்கள் சில யூடியூப் லிங்க்குகளை அனுப்பி அதில் அவரை சப்ஸ்கிரைப் செய்ய கூறியுள்ளனர்.

    அவர் செய்து முடித்தவுடன் ரூ.300 சேர்த்து ரூ.1,300 அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.

    அன்றைய தினமே மீண்டும் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தார். அவர்கள் சொன்ன டாஸ்கை முடித்தவுடன் ரூ.1,800 சேர்த்து ரூ.7.800 அவரது வங்கிக்கு வந்தது. அதன் கும்பல் அவரிடம், நீங்கள் எங்களுடைய பிரிமியம் கஸ்டமர் ஆகி விட்டதால் உங்களுடைய வங்கி கணக்கு இனி உங்கள் கம்ப்யூட்டரிலேயே தெரியும் எனவும், பணம் நேரடியாக உங்களுக்கு வராது என்றும் கூறியுள்ளனர்.

    இதனை நம்பி கடந்த 15 நாட்களில் மட்டும் ரூ.38 லட்சத்தை இணைய வழி மோசடிக்காரர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

    அதன்பின், அவரது வங்கிக்கணக்கில் ரூ.52 லட்சம் பணம் இருப்பதாககாட்டியுள்ளது. மேலும், ஒரு இணையதளத்திலும் அவரை முதலீடு செய்யக்கூறினர். இறுதியாக, மேற்படி பணத்தை சையது சலாம் எடுக்க முயன்றார்.

    அப்போது, அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லை என காட்டியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    மேலும், மோசடிக்காரர்களையும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தொடர்பு கொண்ட அனைத்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் மூடக்கப்பட்டுவிட்டது.

    இதனையடுத்து சலாம், புதுவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மாமியார் அளித்த புகாரால் விசாரணைக்காக ராஜசேகர் போலீஸ் நிலையத்தில் இருந்தார்.
    • ராஜசேகரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன். சினிமா புரொடக்சனில் வேவை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் புவனேஸ்வரி. புவனேஸ்வரிக்கும் மதுரையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜசேகருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி கணவர் ராஜசேகரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். ஒன்றாக இருந்தபோது வங்கியில் பணம் கடன் வாங்கியது தொடர்பாக புவனேஸ்வரியிடம் கேட்பதற்காக நேற்று முன்தினம் இரவு ராஜசேகர் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக பானுமதி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    மாமியார் அளித்த புகாரால் விசாரணைக்காக ராஜசேகர் போலீஸ் நிலையத்தில் இருந்தார். அப்போது திடீரென அவர் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும் ஏற்கனவே வயாகரா உள்ளிட்ட 10 மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளதாகவும் அவர் போலீசிடம் கூறினார்.

    இதையடுத்து ராஜசேகரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாமியார் புகாரால் கைதாகாமல் இருக்க அவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    இதற்கிடையில் ராஜசேகர் மீது தகாத வார்த்தைகளால் பேசியது, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    மத்திய அரசின் என்ஜினீயர், விஞ்ஞானி உள்பட 4 தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.

    சேலம்:

    என்ஜினீயரிங் பணி தேர்வு-2022, ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி தேர்வு- 2022, இந்திய பொருளாதார பணி தேர்வு- 2022, இந்திய புள்ளியியல் பணி தேர்வு- 2022 ஆகியவற்றுக்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி. வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து சமீபத்தில் முதல்நிலை தேர்வு சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இதனை தொடர்ந்து முதன்மை (மெயின்) தேர்வுக்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி என்ஜினீயரிங் பணி முதன்மை தேர்வு வருகிற 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2 ஷிப்டுகளாக நடைபெற உள்ளது. முதல் ஷிப்டு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், 2-வது ஷிப்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறுகிறது.

    இதேபோல் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி முதன்மை தேர்வு, இந்திய பொருளாதார பணி தேர்வு, இந்திய புள்ளியியல் பணி தேர்வு ஆகியவையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் கடந்த 6-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடைசி நாளான 26-ம் தேதி மாலை 4 மணிக்கு பிறகு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாது.

    தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுடன் மத்திய அல்லது மாநில அரசு அங்கீகரித்துள்ள புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, புகைப்படம் உள்ளிட்டவைகள் தேர்வு எழுத வரும்போது கொண்டு வர வேண்டும் என யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    ×