search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரம்மோற்சவம்"

    • சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
    • சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் கடந்த 8-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் காலையும், மாலையும் மாட வீதியில் சந்திரசேகர் மற்றும் விநாயகர் உற்சவ உலா நடைபெற்றது.

    இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் வலம் வந்து அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கல வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க சூலத்திற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அய்யங்குளத்தில் தூர் வாரும் பணி நடைபெற்று வருவதால் தீர்த்தவாரி நிகழ்ச்சியானது குளத்தின் கரையில் பாத்திரத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு அதன் மூலம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று முதல் 10 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள், சாமி வீதி உலா நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறுகிறது.

    சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.

    ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. இதனையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூரட்டாதி நட்சத்திரம் மிதுன லக்னத்தில் இன்று காலை 6 மணிக்கு ஆனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது.

    ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.

    ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.

    அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் திருக்கோவில் இணை ஆணையர் ஜோதி அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் ராஜாராம், கோமதி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    இதைத்தொடர்ந்து விநாயகர் உண்ணா மலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மனும் அலங்கார ரூபத்தில் பவனி வந்து காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் சாமி வீதி உலா நடைபெறும் என தெரிவித்தனர்.

    • பிரம்மோற்சவம் நாளை தொடங்கி ஜூலை 7-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராயச்சோட்டி அன்னமயா மாவட்டம் தாளப்பாக்கம் நகரில் உள்ள சென்னகேசவசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று (புதன்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை காலை கொடியேற்றம், அன்று இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, ஜூலை மாதம் 3-ந்தேதி இரவு கருட வாகன வீதிஉலா, 4-ந்தேதி மாலை திருக்கல்யாண உற்சவம், 5-ந்தேதி தேரோட்டம், 7-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா முடிகிறது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் வாகன வீதி உலாவுக்கு முன்னால் பக்தி பஜனை, கோலாட்டம் போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்த தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து ஜூலை 8-ந்தேதி மாலை புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 29-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாலை சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 29-ந்தேதி காலையிலும், அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூலை 5-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெற்று மாலையில் கொடியிறக்கத்துடன் திரு விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • ஜூலை 3-ந்தேதி தேர்த் திருவிழா நடக்கிறது.
    • 5-ந்தேதி ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    ஆண்டுதோறும் பார்த்த சாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும் மற்றும் நரசிம்ம ருக்கு ஆனி மாதமும் பிர மோற்சவம் நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டிற்கான நரசிம்மர் பிரம்மோற்சவம் வரும் நாளை (27-ந் தேதி) துவங்குகிறது.

    அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் துவஜாரோகணம் எனும் கொடியேற்ற விழா நடக்கிறது.

    விழாவின் இரண்டாம் நாளான 28-ந் தேதி இரவு, சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலிக்கிறார். 29-ந் தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு கோபுர வாசல் தரிசனமும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது.

    பிரம்மோற்சவத்தின், 5-ம் நாள் விழாவான ஜூலை 1-ந் தேதி காலை பல்லக்கில் நாச்சியார் திருக்கோலமும், மாலை யோக நரசிம்மன் திருக்கோல புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது.

    விழாவின் பிரதான நாளான, ஜூலை 3-ந் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் உற்சவர் தேரில் எழுந்தருளுகிறார்.

    காலை 7.15 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. வரும், ஜூலை, 5-ந் தேதி ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. அன்று இரவு அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • சாமி கோவில் வளாகத்தில் உலா வந்தடைந்தது.
    • திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோ ற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா இன்று 25-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று காலை வரதராஜ பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது பட்டாச்சாரி யார்கள் வேத மந்திரம் முழுங்க மங்கள வாத்திய த்துடன் கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் சாமி மற்றும் கொடி மரத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சாமி கோவில் வளாகத்தில் உலா வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு அம்ச வாகனத்திலும் , 2-ம் நாள் திருபல்லக்கிலும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும், 3-ம் நாள் ராஜகோபாலன் சேவை, சேஷ வாகனத்திலும், 4 ம் நாள் ஸ்ரீ வேணு கோபாலன் சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் 5-ம் நாள் நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு அனுமந்த் வாகனத்திலும், 6-ம் நாள் மாலை யானை வாகனத்திலும், 7-ம் நாள் காலை சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனம், இரவு புண்ணியகோடி விமானத்திலும், 8-ம் நாள் காலை வெண்ணைத்தாழி உற்சவம் இரவு குதிரை வாகனத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை மாதம் 3-ந் தேதி, சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் உற்சவம் 5-ந் தேதியும் நடைபெற வுள்ளது. 6-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவ டைகிறது.விழா விற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன், அறங்காவலர் குழுத்தலைவர் சாரங்க பாணி, அறங்காவலர்கள் ராதாகிருஷ்ணன், கிஷோர், கமலநாதன், கோவிந்த ராஜலு மற்றும் தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • நாளை முதல் 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது.
    • 26-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது. அதை முன்னிட்டு நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதையொட்டி அதிகாலை சுப்ர பாதத்தில் மூலவரை துயிலெழுப்பி தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் நடந்தது. காலை 6 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தூய தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.

    அதன்பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரனம், கஸ்தூரி மஞ்சள், பச்சகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற நறுமண பொருட்கள் அடங்கிய திரவியத்தை கோவில் முழுவதும் தெளித்தனர். மதியம் 12.30 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    உற்சவத்தின் ஒரு பகுதியாக நாளை இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அனுமந்த வாகன வீதிஉலா, 26-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதியைச் சேர்ந்த பக்தர் நரசிம்மன் என்பவர் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான திரைசீலையை காணிக்கையாக வழங்கினார்.

    • பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது.
    • ஜூலை 2-ந்தேதி தீமிதி விழா நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள திரவுபதி சமேத தர்மராஜா கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 27-ந்தேதி திரவுபதி சமேத தர்மராஜா திருக்கல்யாண உற்சவம், 30-ந்தேதி அர்ச்சுனன் தபசு, அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி தீமிதி விழா நடக்கிறது.

    அதையொட்டி பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடு பணிகளை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு, ஸ்ரீகாளஹஸ்தி வருவாய் கோட்டாட்சியர் ராமாராவ் ஆகியோர் கோவிலுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கடந்த ஆண்டு தீமிதி விழாவின்போது, பக்தர்கள் தீமிதிக்க போதிய இடம் இல்லாததால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதைக் கவனத்தில் கொண்டு வருவாய் கோட்டாட்சியரும், அறங்காவலர் குழு தலைவரும் கோவில் விழா கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீ மிதிக்கும் குண்டம் சற்று பெரிய அளவில் அமைக்கப்படும். பக்தர்கள் தீ மிதிப்பதற்கு சிரமம் இருக்காது. தீ மிதிப்பதைப் பார்க்கும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது.

    பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட கவுண்ட்டர்கள் அமைக்கப்படும். கவுண்ட்டரில் பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்படாமல் இருக்க இரு பக்கமும் இரும்பு வேலி அமைக்கப்படும். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த ேபாலீஸ் பாதுகாப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் அதிகாரிகளுக்கு, மின் விளக்குகள் அலங்காரம் செய்தல், பல்வேறு பணிகளை விரைந்து முடிப்பது குறித்து தகுந்த அறிவுரைகளை வழங்கினர்.

    ஆய்வின்போது சிவன் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் நகர பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

    • தேரோட்டம் 3-ந்தேதி நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி திருக்கல்யாண உற்சவம்நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி அன்று காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் 6 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து உபநாச்சியாருடன் வீதிஉலாவும், இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

    பின்னர் 26-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பல்லக்கிலும், இரவு 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. இதையடுத்து தினசரி காலை, மாலை வேளைகளில் சேஷ வாகனம், தங்க கருட சேவை, ஹனுமந்த வாகனம், யானை வாகனம், புண்ணிய கோடி விமானம், குதிரை வாகனம் என வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது. மேலும் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனமும், 2-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம் மற்றும் வேடுபறி உற்சவம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று காலை 11 மணிக்கு கோபுர வாசலில் தீர்த்தவாரி நடக்கிறது. இதையடுத்து 5-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 6-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

    • 25-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
    • 28-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    ராமநாதபுரத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேதுபதி சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோதண்டராமர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பிரமோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதற்கான கொடியேற்றம் நேற்று காலை ஏராளமான வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 25-ந் தேதி திருக்கல்யாண வைபவமும், 28-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    • விழா 23-ந்தேதி தொடங்கி ஜூலை 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • நிகழ்ச்சி நிரல் விவரம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் வெளியீட்டு விழா நடந்தது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள திரவுபதி சமேத தர்மராஜா கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 23-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி வரை நடக்கிறது. அதை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் விவரம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் வெளியீட்டு விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன்ரெட்டி, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு ஆகியோர் பங்கேற்று சுவரொட்டிகளை வெளியிட்டனர்.

    நிகழ்ச்சியில் கோவில் துணை நிர்வாக அதிகாரி வெங்கட சுப்பையா மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.

    • செப்டம்பர் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சலகட்லா பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
    • நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு அதிக அமாவாசையை முன்னிட்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சலகட்லா பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

    இதேபோல் நவராத்திரி பிரம்மோற்சவம் வழக்கம்போல அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    2 பிரம்மோற்சவங்களுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றம் நடைபெறும். இந்த கொடியேற்றம் என்பது சாமியின் வாகனமான கருடன் உருவம் கொண்ட கொடியேற்றம் ஆகும்.

    கொடிமரத்தை அடைந்த கருடன், மலையிலுள்ள அனைத்து தெய்வங்களையும் தன் குருவின் பிரம்மோற்சவத்திற்கு வருமாறு அழைப்பார்.

    ஆனால் சலகட்லா பிரம்மோற்சவங்களில் இந்தக் கொடியேற்றம் நடைபெறுவதில்லை.முதல் நாள் கொடியேற்றத்திற்கு பதிலாக தங்க ரதத்தில் சாமி வலம் வருகிறார்.

    மேலும் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் மாலையில் புஷ்ப விமானத்திற்கு பதிலாக தங்க ரதத்தில் ஊர்வலம் நடக்கும். 8-ம் நாள் காலை தங்க தேர் திருவிழாவிற்கு பதிலாக சாதாரண தேரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இப்படி சில வித்தியாசங்களைத் தவிர சலகட்லா பிரம்மோற்சவத்திற்கும், சாதாரண பிரம்மோற்சவத்திக்கும் எந்த வித்தியாசம் இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் இதேபோல் 2 பிரம்மோற்சவங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதியில் நேற்று 87,762 பேர் தரிசனம் செய்தனர். 43,753 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ. 3.61 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது.

    ×